Thursday, January 20, 2011

*** சத்து அடை ***



தேவையான பொருட்கள்

புழுங்கல் அரிசி            _     முக்கால் டம்ளர்
பச்சரிசி                             _        கால் டம்ளர்
துவரம்பருப்பு                _        அரை டம்ளர்
கடலைபருப்பு                _        அரை டம்ளர்
பாசி பருப்பு                        _      2 தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு            _        2 தேக்கரண்டி
வெங்காயம்                       _      பெரியதாக ஒன்று
காய்ந்த மிளகாய்            _        6
இஞ்சி                                       _        இரண்டு இன்ச் அளவு
சீரகம்                                        _        ஒரு ஸ்பூன்
எண்ணெய்                               _     சுடுவதற்க்கு
கறிவேப்பிலை                        _        இரண்டு கொத்து
சமையல் சோடா                    _        கால் ஸ்பூன்
பெருங்காயத்தூள்                    _        ஒரு தேக்கரண்டி
 

செய்முறை  பருப்பை வகைகளை எல்லாம் ஒன்று சேர்த்து நன்கு கழுவி அதை தாராளமாக தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.
அரிசிகளையும் கழுவி விட்டு தனியே ஊற வைக்கவும்.குறைந்தது இரண்டு மணி நேரம் ஊற வேண்டும்.

ஊறிய பின்பு மிக்ஸியில் அரிசியையும்,காய்ந்த மிளகாய்,சீரகம் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி முதலில் அரைக்க வேண்டும்.
ஓரளவு அரந்ததும்,பருப்புவகைகளையும்,இஞ்சி துண்டையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றிவிட்டு பின்பு கொஞ்சம் தண்ணீரும் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். 

பின்பு பொடியாக அரிந்த வெங்காயம், பெருங்காயத்தூள்,தேவையான அளவு உப்பும்,சமையல் சோடாவும் சேர்த்து விட்டு மூன்று முறை லேசாக மிக்ஸியை சுற்றி விட்டு ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொள்ளவும்
 
மூடி இரண்டு மணி நேரம் கழித்து பொடியாக அரிந்த கறிவேப்பிலையை சேர்த்து நன்கு கலந்து விட்டு வைக்கவும்.



தோசைகல்லை அடுப்பில் வைத்து சூடு வந்ததும்,ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்றி மெல்லியதாக தடவி சுற்றிலும் ஒரு ஸ்பூன் எண்ணெயை விட்டு,அடி நன்கு சிவந்ததும் திருப்பி போட்டு விட்டு சிறிது எண்ணெயை ஊற்றி  நன்கு சிவந்ததும் எடுக்கவும்.
 
மிகவும் சுவையான சத்துள்ள அடை தயார்.இதற்க்கு தேங்காய் சட்னி,சாம்பார் தொட்டு கொள்ள நன்றாக இருக்கும்.இதையே குழந்தைகளுக்கு கொஞ்சம் மொத்தமாக சிறியதாக ஊற்றி மூன்று கலரான குடைமிளகாயை பொடியாக அரிந்து தூவி,சீஸையும் தூவி அடி மொறுவலாக வரும் வரை அடுப்பை சிம்மிலேயே வைத்து பிறகு எடுத்து கெட்ச்சப்புடன் கொடுக்கலாம்.சில குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
பருப்புகள் அதிகம் சேர்ப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் சத்தானது.ஆனால் அதே சில பெரியவர்களுக்கு வயிற்று கோளாறு ஏற்படாமல் இருக்கத்தான் சீரகம்,இஞ்சி,பெருங்காயத்தூள் இவையெல்லாம் சேர்ப்பது. எனவே பெரியவர்கள் பயப்படாமல் சாப்பிடலாம்.




அன்புடன், 
அப்சரா.

10 comments:

ஆமினா said...

பாக்கும் போதே செய்ய சொல்லி கையை தூண்டுது அப்சரா....

வேர்ட் வெரிபிகேஷன எடுத்து விடுங்க பா... என்னை ரொம்ப பாடா படுத்தியெடுக்குது :(

அப்பறம் தமிழ்மணம், இன்ட்லில இணைச்சுட்டா நிறைய வாசகர்கள் கிடைப்பாங்க.... எதாவது சந்தேகம்னா ரிஸ்வானா கிட்ட என் மெயில் ஐடி வாங்கிக்கோங்க பா. நான் சொல்றேன்
எதுக்கும் பாசித் ப்ளாக்குக்கு ஒருமுறை போய்ட்டு வாங்க
http://bloggernanban.blogspot.com/2010/12/2.html

apsara-illam said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஆமினா...
உங்களுடைய கருத்துக்கள் என் இல்லத்தை அலங்கரித்து கொண்டிருக்கின்றது.
மிகவும் நன்றி பா....
அதெல்லாம் எப்படின்னு சந்தேகம் இருக்கத்தான் செய்யுதுங்க.... என்ன செய்ய?உங்களை போன்றவர்களின் உதவி எனக்கு நிச்சயம் உதவும்.ரிஸ்வானாட்ட வாங்கிட்டு உங்களை மெயிலில் சந்திக்கிறேன்.
நீங்கள் கொடுத்த ப்ளாக் கும் போய் பார்வையிடுகின்றேன்.
ஆலோசனைக்கு மிகவும் நன்றிங்க...

அன்புடன்,
அப்சரா.

அஸ்மா said...

அஸ்ஸலாமு அலைக்கும் அப்சரா! என்ன இப்படி சொல்லாமல் கொள்ளாமல் வலையுலகில் வீடு கட்டி குடியும் புகுந்து... போற வழியில் ஒரு புது வீடு தென்பட்டது, இது யாருடையதா இருக்கும்னு உள்ளே எட்டிப் பார்த்தா உங்க வீடு! :) சந்தோஷம் ஒரு பக்கம், சொல்லலியேன்னு கொஞ்சம் கோபம் ஒரு பக்கம் :( சரி, நம்ம அப்சராதானே... போனாப் போகுது :) என்ன.. நானே தேடி வரவேண்டியதாப் போச்சு... அதான் இந்த புலப்பம் :-)

4,5 நாட்களுக்கு முன்புதான் நினைத்தேன், 'இந்த அப்சராவும் ஒரு ப்ளாக் ஆரம்பித்தால் என்ன'வென்று. அல்ஹம்துலில்லாஹ், நான் நினைத்து நடந்ததில் ரொம்ப சந்தோஷம்! follower ஆகவும் ஆகிட்டேன்பா :) வாழ்த்துக்கள்!

ஆ... சொல்ல மறந்துட்டேனே.. உங்க சத்து அடை சூப்பர்! அப்படியே இந்த லிங்க்கையும் பாருங்க.
http://payanikkumpaathai.blogspot.com/2011/01/blog-post_19.html

apsara-illam said...

அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா...,வாங்க...வாங்க...எனது இல்லத்தில் உங்களுடைய வருகையா!!!!! சந்தோஷத்தில் வார்த்தைகள் வர மறுக்கின்றனவே....
நான் ஆரம்பித்து ஒரு வாரம் ஆகுதுங்க அஸ்மா... தங்களுக்கு சொல்லாததற்க்காக முதலில் என்னை மன்னிக்கவும்.சொல்லாமலே திடீர் விருந்தாளியாக வந்ததற்க்கு நன்றி.
இரண்டாவதாக உங்களை நான் எப்படி தொடர்பு கொள்வேன்...?ஐடி கூட இல்லையே...?அதனால் என்ன இப்பதான் ஒருவருக்கொருவர் கலந்துரையாடியாச்சே... உங்களுக்கு மெயிலும் அனுப்பிவிட்டேன்.பார்த்து பதில் போடவும் சரியா?
உங்களுடைய குறிப்பை பற்றின கருத்துக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்,
அப்சரா.

Jaleela Kamal said...

mika arumaiyaan healthy adai

Unknown said...

apsara,congrats.
tasty &healthy adai.

apsara-illam said...

ஜலீலா அக்கா தங்கள் கருத்தை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.
நன்றி அக்கா...

அன்புடன்,
அப்சரா.

apsara-illam said...

வாங்க ஷமீமா.....எனது இல்லத்திற்க்கு வருகை தந்தற்க்கு எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.தங்கள் வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி மா...

அன்புடன்,
அப்சரா.

Anonymous said...

அஸ்ஸலாமுஅலைக்கும் அப்சரா..
நான் ருக்சானா..
உங்களின் புது ப்ளாக் மென்மேலும் வளர்ச்சிஅடைய என் வாழ்த்துக்கள்..
சத்து அடை சூப்பர் ..

போட்டோகள் தெளிவாக இருக்கு.
மேலும் குறிப்புகளை தர வாழ்த்துக்கள்..
நன்றி

apsara-illam said...

எனது இல்லத்திற்க்கு வருகை தந்திருக்கும் ருக்சானா,தங்களை அன்போடு வருக வருகவென அழைக்கிறேன்.
தங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி மா...

அன்புடன்,
அப்சரா.

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out