தேவையான பொருட்கள்
உருளை கிழங்கு _ 2
பூண்டு _ 3 பல்
மிளகாய்த்தூள் _ 1 1/2 ஸ்பூன்
மஞ்சள்த்தூள் _ 1/2 ஸ்பூன்
எண்ணெய் _ மூன்று தேக்கரண்டி
கறிவேப்பிலை _ ஒரு கொத்து
*** செய்முறை ***
உருளை கிழங்கை தோல் நீக்கி நன்கு கழுவி விட்டு,ஒரு இன்ச் அளவு சிறிய சதுரங்களாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு அகன்ற வானலியில் முக்கால் அளவு தண்ணீர் ஊற்றி கொதிவந்ததும் நறுக்கிய உருளையையும்,ஒரு ஸ்பூன் உப்பும் சேர்த்து அரை வேக்காடாக வெந்ததும் வடிக்கட்டி விடவும்.
அதில் மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள் சிறிதளவே உப்பும் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.
அதே வானலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் கடுகு,கறிவேப்பிலை போட்டு தாளித்து பொடியாக நறுக்கிய பூண்டையும் சேர்த்து பொறிந்ததும்,உருளையை சேர்த்து நன்கு பிரட்டி குறைந்த தீயிலேயே விடவும்.நன்கு மசாலா வாசனை போய் மொறுவலானதும் இறக்கவும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உருளை வறுவல் தயார்.
அன்புடன்,
அப்சரா.
2 comments:
பாக்கவே அழகா இருக்கு அப்சரா
ப்ளாக் பேக்ரவுண்டும் செமயா இருக்கு
குட் செலக்ஷன்
கலக்குங்க
ஆஹா...ஆமினா...,
\\ப்ளாக் பேக்ரவுண்டும் செமயா இருக்கு//
இதை படித்ததும் சந்தோஷத்தில் மனசு டான்ஸ் ஆடுதுல்ல....
ஏதோ எனக்கு தெரிந்தவரை போகிறேன்.குறிப்பிட்டு சொன்னதற்க்கு மிக மிக நன்றி ஆமினா.
அனுபவசாலிகள் உங்களை போன்றவர்களுடைய கருத்து எனக்கு டானிக் போன்றே.....எனர்ஜி இன்னும் கூடுமுல்ல....
அன்புடன்,
அப்சரா.
Post a Comment