தேவையான பொருட்கள்
சுரைக்காய் _ 1/4 கிலோ/ ஒரு ஜான் அளவு
பாசி பருப்பு _ அரை கப்
வெங்காயம் _ 1
தக்காளி _ பாதியளவு
பச்சைமிளகாய் _ 1
தனியா தூள் _ 1 தேக்கரண்டி
மஞ்சள்த்தூள் _ 1 தேக்கரண்டி
தேங்காய்த்துருவல் _ 3 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் _ 2
கறிவேப்பிலை _ ஒரு கொத்து
சின்ன வெங்காயம் _ 4
எண்ணெய் _ 2 தேக்கரண்டி
*** செய்முறை ***
பாசி பருப்பை கழுவிவிட்டு ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு மஞ்சள்த்தூள் சேர்த்து வேக விடவும்.சுரைக்காயை தோல் நீக்கி
கழுவிவிட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.வெங்காயம் தக்காளியையும் நறுக்கி வைத்து கொள்ளவும்.பச்சைமிளகாயை கீறி வைத்துக் கொள்ளவும்.
கழுவிவிட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.வெங்காயம் தக்காளியையும் நறுக்கி வைத்து கொள்ளவும்.பச்சைமிளகாயை கீறி வைத்துக் கொள்ளவும்.
பாசி பருப்பு அரை வேக்காடு வெந்ததும்,நறுக்கி வைத்திருக்கும் சுரைக்காய்,வெங்காயம்,பச்சைமிளகாயையும்,தனியாத்தூளையும்,தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்கு கிளறிவிட்டு வேகவிடவும்.(பருப்பு வெந்து கொஞ்சம் தண்ணீரே போதுமானது.அதிகம் தண்ணீர் சேர்த்தால் சுரைக்காயும் தண்ணீர் விடும் என்பதால் கூட்டு தண்ணியாகி விடும்.எனவே திட்டமாக இருக்கும் படி பார்த்து கொள்ளவேண்டும்.)
பருப்பு,சுரைக்காய் எல்லாம் ஒன்று சேர வெந்து இருக்கும்.பிறகு அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி ஒரு கொதி கொதித்தவுடன் இறக்கி விட்டு
இன்னொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பொடியாக அரிந்த சின்ன வெங்காயம்,காய்ந்த மிளகாய் கறிவேப்பிலையை சேர்த்து தாளிக்கவும்.வெங்காயம் பொன்னிறமாக நன்கு வதங்கியதும் வெந்த கூட்டை ஊற்றி நன்கு கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.
இது எல்லா வகையான புளி குழம்பிற்க்கும்,ரசத்திற்க்கும் பெஸ்ட் காம்பினேஷனாக இருக்கும்.
அன்புடன்,
அப்சரா.
2 comments:
நல்லா தெளிவான விளக்கங்கள்
படங்களும் அருமை
வாழ்த்துக்கள் அப்சரா
எல்லா கருத்துக்களையும் இன்றைக்குதான் பார்க்கிறேன் ஆமினா.
தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
அப்சரா.
Post a Comment