எனக்கு தெரிந்த என் வீட்டில் நான் கடைபிடிக்கும் சில கை வைத்தியங்களை இங்கு பதிவிட விரும்புகின்றேன்.எத்தனையோ...புதிதாக வரும் இல்லத்தரசிகளுக்கும்...தாய்மார்களுக்கு உதவும் என்ற நம்பிக்கையே.... நிச்சயம் இவை பயனுள்ளதாகவே இருக்கும்.
**** இருமலுக்கு****
தொண்டையில் நன்கு நன்கு சளி கட்டி கொண்டு வெளி வராமல் திணறும் போது அதனால் ஏற்படும் இருமலுக்கு இந்த மிளகு,மஞ்சள் பால் மிகவும் உதவும்.இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடிக்கலாம்.நான்கு,ஐந்து வயது முதலே குழந்தைகளுக்கு நிச்சயம் பயப்படாமல் கொடுக்கலாம்.என் பைய்யன் இன்றைக்கும் இதை குடிப்பான்....
அதை எப்படி செய்வது என்று பார்ப்போம்....
**** மிளகு,மஞ்சள் பால் *****
ஒரு கப் பாலுக்கு ஒரு ஸ்பூன் நிறைய பனகற்கண்டு,முழு மிளகு - 20,மஞ்சள்தூள் கால் ஸ்பூன் இவைகள் தேவை.
ஒரு பால் காய்ச்சும் பாத்திரத்தில் பாலை ஊற்றி மூன்று ஸ்பூன் அளவு தண்ணீரும் சேர்த்து,மிளகை லேசாக பொடித்து,மற்ற சமான்களையும்அதில் சேர்த்து,மிதமான தீயில் கொதிக்க விடவும்.பனக்கற்கண்டும் கரைந்து,நன்கு எல்லாம் சார் இறங்கி ரெடியானதும் வடிக்கட்டி குடிக்கவும்.
குழந்தைகளாக இருந்தால் மிதமான சூட்டில் கொடுக்கவும்.(ஆற வைத்து கொடுக்க கூடாது...) பெரியவர்கள் கொஞ்சம் சூடாக குடித்தால் நன்றாக தொண்டைக்கு இதமாக இருக்கும்.இதை தொடர்ந்து மூன்று நாள் காலையும்,படுக்கும் முன்னும் குடித்து வந்தால் அவ்வளவு சளியும் நன்கு வெளியாகி விடும்.
இதை அடுத்து சிலநேரங்களில் வாய் விடாமல் தொடர் வறட்டு இருமலாக இருக்கும்.அப்போது பெரியவர்களாக இருந்தால் இரண்டு கிராம்பை கடவாய் பல்லில் கடித்து கொண்டு குறைந்தது அரைமணி நேரம் இருக்கவும். வெளியாகும் சாறையும் விழுங்கி விடவும். நல்ல மாற்றங்களை உணரலாம்.சிலர் படுக்கும் போதுதான் அதிகம் வறட்டு இருமல் வரும்.அவர்களும் இதே போல் வாயில் அடக்கி கொண்டு படுத்து விடவும்.
இதே பிரச்சனை குழந்தைகளுக்கு வந்தால் என்ன செய்வது...?அவர்களால் இப்படி வாயில் கடித்து கொண்டு இருக்க தெரியாது அல்லவா..... எனவே அவர்களுக்கு உடனே ஒரு ஸ்பூன் தேனில் பட்டையை பொடி செய்ததை இரண்டு பின்ச் அலவு சேர்த்து நன்கு கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து விடவும்.இதுவும் இருமலை உடனே கட்டுக்குள் கொண்டு வந்து விடும்.தேன் மிகவும் குழந்தைகளுக்கு உகந்தது.வெறுமனவே தினமும் ஒரு ஸ்பூன் கொடுக்கலாம்.
அன்புடன்,
அப்சரா.
4 comments:
வீட்டு வைத்தியம் பயனுள்ளதாக இருக்கு.
மிகவும் நன்றி ஆசியா அக்கா.
அன்புடன்,
அப்சரா.
useful tips
ungal blog full ah padithuvitean arumai
எனது இல்லத்திற்க்கு வந்து பொருமையாக அனைத்தையும் படித்ததோடு அல்லாமல் கருத்துக்களோடு என்னிடம் பகிர்ந்து கொண்டமைக்கு மிகவும் நன்றி மஹா....எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது...
அன்புடன்,
அப்சரா.
Post a Comment