Wednesday, January 19, 2011

*** இட்லி,தேங்காய் சட்னி **

நாம் என்ன தான் விதம் விதமாக நாண்,பரோட்டா,பாவ் பாஜி,குப்பூஸ்ன்னு சாப்பிட்டாலும் நம்ம தமிழ்நாட்டு இட்லிக்கு ஈடாக முடியுமா...?வாரத்தில் ஒரு நாளாவது சாப்பிடாவிட்டால் தேடி வந்துவிடும்.அட சிலர் விரும்பி சாப்பிடவில்லையென்றாலும் கூட  வெளியில் எங்கும் போய்விட்டு வரும் நமக்கு இந்த இட்லி மாவு இருந்தால் ஒரு இட்லியோ,தோசையாகவோ செய்து பத்து நிமிடத்தில் சாப்பிட்டு விடலாமே.....எனவே தான் இந்த இட்லி சட்னி கொண்டு டிபன் பகுதியை தொடங்கலாமுன்னு வந்தேன்.எல்லாரும் அரைத்த மாவையே அரைக்கிறாளேன்னு யாரும் திட்டாதீங்க... இது எங்க வீட்டு இட்லின்னு செய்து தருகின்றேன்.சரியா.... இப்ப செய்முறைக்கு போவோம்.


*** இட்லி மாவுக்கு ***
தேவையான பொருட்கள்
இட்லி குண்டு அரிசி(அல்லது}  _      2 1/2 டம்ளர்
புழுங்கல் அரிசி
 பச்சரிசி                                                _      1/2 டம்ளர்
உளுந்து                                                 _      ஒரு டம்ளர் (குமித்தாற்போல்)
சாதம்                                                      _      இரண்டு கைப்பிடி

*** தேங்காய் சட்னிக்கு ***
தேங்காய் துருவல்                            _     ஒரு கப்
பொட்டுகடலை                                   _     3 தேக்கரண்டி  
பச்சைமிளகாய்                                    _     3 
சின்னவெங்காயம்                              _     4 
பூண்டு                                                       _     2 பல்
கடுகு                                                          _    ஒரு ஸ்பூன்
காய்ந்த மிளகாய்                                   _    2
எண்ணெய்                                                _    3 ஸ்பூன் 
கறிவேப்பிலை                                        _    ஒரு கொத்து

*** செய்முறை ***
இட்லிக்கு அரிசி உளுந்து இவைகளை நன்கு களைந்து விட்டு தனிதனியே ஐந்து மணிநேரம்ஊறவைக்கவும்.  ஊறவைக்கும் போதே ஒரு கிண்ணம் நிறைய தண்ணியையும் ஃபிரிட்ஜில் வைத்து விடவும்.
பிறகு முதலில் உளுந்தை நைசாக அரைத்து எடுத்து விட்டு ,பின்பு சாதத்தையும்போட்டு பிறகு அரிசியையும் சேர்த்து அரைத்து  தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து வைத்து புளிக்க விடவும்.

சட்னிக்கு தேங்காய்துருவல்  ,பொட்டுகடலை,வெங்காயம் ,பூண்டு,பச்சைமிளகாய்,தேவையான அளவு உப்பும் சேர்த்து அரைக்கவும்.

ஃபிரிஜ்ஜில் வைத்த தேங்காய் எடுத்து அரைத்தால் சுடுதண்ணீர் விட்டு அரைக்கவும்.பின்பு தேவையான தண்ணீர் சேர்த்து கிண்ணத்தில் கலந்து கொண்டு ஒரு சிறிய தாளிக்கு கைப்பிடியில் எண்ணெய் ஊற்றி கடுகு ,காய்ந்த மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்க்கவும்.

இட்லியை ஊற்றி வேக வைத்து எடுத்த சுட சுட இட்லியுடன்,சட்னியை சேர்த்து பரிமாறவும்.


அன்புடன்,
அப்சரா.

1 comment:

Unknown said...

தேங்காய் சட்னி, தேங்காய் அல்வா, தேங்காய் சாதம், மேலும் தேங்காய் உணவுவகைகளை தெரிந்துகொள்ள பார்வையிடுங்கள் http://www.valaitamil.com/carrot-chutney_8272.html

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out