Sunday, January 16, 2011

என்னை பற்றிய அறிமுகம்

இறைவனின் திருப்பெயரால்.....இந்த வலைப்பூவில்  எனக்கென்ற ஒரு இடத்தை இந்த புதிய வருடத்தில் ஆரம்பம் செய்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.(எல்லா புகழும் இறைவனுக்கே....)
முதலில் அனைவருக்கும் இனிப்பை வழங்கி விட்டு பிறகு என்னை பற்றி சொல்கிறேன் சரியா.... இந்தாங்க எடுத்துக்கங்க.....   


தமிழ் நாட்டில் மயிலாடுதுறை ஊர் அருகே திருவாளப்புத்தூர் என்ற கிராமத்தில் பிறந்த நான் இந்த துபாய் நாட்டில் நான் காலடித்து எடுத்து வைத்து பத்து வருடங்கள் முடிந்து சரியாக நான்கு மாதங்கள் ஆகிவிட்டது.வெறும் பத்தாம் வகுப்பை மட்டும் முடித்திருக்கும் எனக்கு இந்த நாட்டில் வலம் வர காரணமாகியிருந்த இறவனுக்கு என் முதல் நன்றியையும்...,என் கணவருக்கும் என் நன்றியை தெரிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.....
பின்ன.... இண்டெர்நெட்டே என்னன்னு தெரியாம கம்ப்யூட்டர்னா என்னவெல்லாம் செய்யலாம்? எப்படி இருக்கும்?என்று அறியாமல் ஏதோ ஒரு முறை ஆனந்த விகடனில் எழுத்தாளர் சுஜாதா அவர்களின் இண்டெர்நெட் பற்றிய கட்டுரையை படித்து அரையும் குறையுமாக தெரிந்து கொண்டிருந்தவளுக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைப்பது என்றால் சும்மாவா.....
எனக்கென்று கம்ப்யூட்டரை கொடுத்து அதில் எல்லாம் கற்று தந்து இதோ இப்ப எனக்கென்ற ஒரு பக்கத்தை உருவாக்கும் அளவிற்க்கு என்னை முன்னேற்றியதில் என் கணவருக்கு மிக பெரி.......ய பங்கு உண்டுதானே.....?
வெறும் மெயில் படம் பார்ப்பது என்று அவ்வபோது உலாவி கொண்டிருந்த எனக்கு 2009-ம் ஆண்டு அவள் விகடனில் வெளியான அருசுவை தளத்தை பற்றிய தகவல் கிடைக்கவே அந்த பக்கத்திற்க்கு சென்றேன்.அன்று தான் அடடே.... நாம் எவ்வளவு நாட்கள் வீண் செய்திருக்கின்றோம்.... இப்படியும் நம் சமையல் திறன்களை,படைப்புகளை வெளிபடுத்த முடியுமா என்று ஆச்சர்யபட்டு ஐக்கியமும் ஆனேன்.... அதன் மூலம் நிறை தோழிகளின் பழக்கங்கள்.... ஏதோ எனக்கு தெரிந்தவைகளை பகிர்ந்து கொள்வது என  உலா வந்தேன்.
பலரும் தன்னுடைய திறமைகளை கொண்டு தனி வலைப்பூவை உருவாக்கி  அதில் சமையல்,கட்டுரை,கலைகள் என பலவிஷயங்களை எழுதி சிறப்பாக சென்று கொண்டிருப்பது தெரிய வந்தது.இது போன்ற தனி  பக்கம் தனக்கென்று உருவாக்கி நம்மை பலருக்கு அறிமுகம் செய்து கொள்ளமுடியும் என்று தெரிய வரவே...இதோ இப்போது உங்கள் முன் அப்சராவாகிய.....நான்.....


அன்புடன்,
அப்சரா.


10 comments:

ஆமினா said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

வாங்கோ...வாங்கோ

வலையுலகம் உங்களை அன்போடு வரவேற்கிறது ;)

ரொம்ப லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்துருக்கீங்க அப்சரா

வாழ்த்துக்கள்....

தொடர்ந்து கலக்குங்க

apsara-illam said...

வ அலைக்கும் சலாம் ஆமினா....தாங்கள் என் பக்கம் வந்து வாழ்த்து தெரிவித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
மிக்க நன்றி ஆமினா...

அன்புடன்,
அப்சரா.

ஸாதிகா said...

அப்சரா,நான் போட்ட கமஎண்ட் எங்கே?

apsara-illam said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஸாதிகா அக்கா.... உங்களுடைய முத்தான கருத்து ரவ்வாடை குறிப்பின் கீழ் உள்ளது அக்கா....
அதை தவிர்த்து வேறு ஏதேனும் கருத்து கொடுத்தீர்களோ அக்கா?ஏனென்றால் நான் வேறு தேடியும் பார்த்துட்டேன் வரவில்லை அக்கா.... என்னவென்று தெரிவியுங்கள்.

அன்புடன்,
அப்சரா.

Avargal Unmaigal said...

வலையுலகம் வந்த தமிழ் மகளுக்கு வாழ்த்துக்கள்

Anonymous said...

அன்புடன் வரவேற்கிறேன்
நானும் கடந்த 2 மாதமாக தான் இந்த வலையுலகத்தில் இருக்கிறேன்

apsara-illam said...

எனது இல்லத்திற்க்கு வருகை தந்துள்ள **அவர்கள் உண்மைகள்** அவர்களே...
தங்களை அன்போடு வருக வருக என வரவேற்கிறேன்.
தங்கள் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

அன்புடன்,
அப்சரா.

apsara-illam said...

எனது இல்லத்திற்க்கு வருகை தந்துள்ள தோழி மஹா அவர்களை வருக வருக என அன்போடு வரவேற்கிறேன்.
இதோ நானும் உங்கள் நோக்கி வருகிறேன்.இந்த வலைப்பூ மூலம் தொடரட்டும் நம் நட்பு....

அன்புடன்,
அப்சரா.

ALLAKKANI said...

As Salamun Alaikum,

Dear Mrs. Apsara,
I prepared this dish பேரிச்சை,மாங்காய் பச்சடி for my husband he enjoyed vey much & my neighbours also.

Thanks,

Regards,

JansiBanu Allakkani.
(Mrs. Alain Water)

apsara-illam said...

வ அலைக்கும் சலாம் பானு அவர்களே...,எப்படி இருக்கீங்க..?அண்ணன்,பிள்ளை நலமா?
தங்களுடையை வருகை எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி.
உங்கள் மெயில் முகவரி இருந்தால் நான் உங்களை தொடர்பு கொள்வேன்.
அண்ணனுக்கு எனது சலாம் உரித்தாகட்டும்.

அன்புடன்,
அப்சரா.

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out