தேவையான பொருட்கள்
மேகி பாக்கெட் (கறி ஃபிளேவர்) _ 2 பாக்கெட்
வெங்காயம் _ பெரியதாக ஒன்று
தக்காளி _ ஒன்று
பீன்ஸ் _ மூன்று
கேரட் _ பாதியளவு
குடைமிளகாய் _ கால் பகுதி
பச்சைபட்டாணி _ இரண்டு ஸ்பூன்
பச்சைமிளகாய் _ ஒன்று
இஞ்சி,பூண்டு அரவை _ 1/2 ஸ்பூன்
மல்லி தழை _ சிறிதளவு
எண்ணெய் _ மூன்று தேக்கரண்டி
முட்டை(விரும்பினால்) _ ஒன்று
*** செய்முறை ***
ஒரு வானலியில் நூடுல்ஸ் வேகும் அளவிற்க்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பிக்கும் போது வெறும் நூடுல்ஸை இரண்டாக உடைத்து போடவும்.
காய்களை எல்லாம் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
இரண்டு கொதி கொதித்ததுமே.... வடிகட்டி பச்சை தண்ணீரை நன்கு அலசலாக ஊற்றி குலுக்கி விட்டு வைக்கவும்.
வானலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும்,நறுக்கிய வெங்காயம் தக்காளியை போட்டு வதக்கவும்.இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கி ,உடனே காய்களையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
நன்கு வதங்கியதும்,மேகியில் உள்ள மசாலாக்களை சேர்த்து குறைந்த தீயில் வைத்து சிறிது நேரம் வதக்கவும்.பின்பு விரும்பினால் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு ஒன்று சேர கிளறி விடவும்.
முட்டை வெந்ததும் நூடுல்ஸையும்,பொடியாக அரிந்த மல்லிதழையை சேர்த்து நன்கு மசாலா எல்லாம் நூடுல்ஸில் ஒன்று சேர பிரட்டிவிட்டு சூடு ஏறியதும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் டேஸ்ட்டில் இருக்கும்.
அன்புடன்,
அப்சரா.
No comments:
Post a Comment