Showing posts with label அறிமுகம். Show all posts
Showing posts with label அறிமுகம். Show all posts

Wednesday, April 12, 2017

வீடியோ பதிவேற்றம் ஆரம்பம்




எனது நீண்ட நாள் எண்ணமும்,ஆசையுமும் இறைவனின் உதவியால் இனிதே நிறைவேறியது.ஆம்!ஒரு வழியாக யூட்யூபின் வழியாக எனது சமையல் காணொளியை பதிவேற்றம் செய்ய ஆரம்பித்திருக்கின்றேன்.

அதில் சமையல் மட்டும் அல்லாது எனக்கு தெரிந்த அல்லது நான் அறிந்து கொண்ட விஷயங்களையும் அங்கே பகிரலாம் என்றே நினைக்கின்றேன்.எல்லோரும் அங்கே சப்ஸ்க்ரைப் செய்து ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இதுவரை நான் பதிவேற்றம் செய்த காணொளிகளின் லின்க் கீழே

1) நூடுல்ஸ் பேன் கேக்(நூடுல்ஸ் அடை)
******************************************

2)கறிவடகம்
**************

3) சக்கரவள்ளிகிழங்கு வட்டிலாப்பம்
**************************************

4) ஃபலாஃபில்
****************

5) க்ராச்செ வேலைப்பாடு செய்வது பற்றி
*******************************************

Friday, June 3, 2011

மீண்டும் வலைப்பூவை தேடி....,


வலைப்பூவில் வசிக்கும்  அன்புள்ளங்கள் கொண்ட தோழிகள் அனைவருக்கும் எனது அன்பான சலாத்தினை(அனைவர் மீதும் சாந்தியும்,சமாதானமும் உண்டாகட்டுமாக...!) தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னடா இத்தனை நாள் சொல்லாமல் கொள்ளாமல் எங்கேடா போய் தொலைந்தால் என்று சில உள்ளங்கள் நினைத்திருக்கும்.
அவார்டை கூட திடீர் என்று அதுவும் அவசர அவசரமாக அல்லவா கொடுத்து  விட்டு செல்லும் சூழ்நிலை.

என்ன செய்ய??? 11 வருடமாக துபாய்க்கும்,தாயகத்திற்க்கும் மாறி மாறி பயணித்தவள்,,,,, தாயகமே  நிரந்தரம் என செல்ல வேண்டுமேயானால் எவ்வளவு ஏற்பாடுகள்,எத்தனை அலங்கோலங்கள் என ஓடியிருக்கும் என பாருங்களேன்.இதில் என்னவரை விட்டு பிரிந்து எப்படி நானும்,குழந்தைகளும் நாட்களை  கடத்த போகிறோம் என்ற டென்ஷன் வேறு....இந்த டென்ஷன்களுக்கு இடையில் என்னருமை தோழிகளுக்கு நினைவு பரிசாக கொடுக்க வேண்டுமே என்று கொடுத்ததுதான் இந்த சான்றிதழ்கள்....ஆனால் இவற்றை கொடுத்து விட்டு விடுப்பு விண்ணப்பம் சொல்ல மறந்து விமானம் ஏறி பறந்து வந்தாச்சு....

இப்போது இறைவனின் உதவியால்,இந்த மூன்று மாதங்களாக ஸ்கூல் அட்மிஷன் உறவினர்களோடு கலந்துரையாடல்,உடன்பிறப்புகளோடு அரட்டை,மனம் விட்டு பேச்சு,பெற்றோர்களுக்கும்,மாமியார் வீட்டினர்களுக்கும் ஏதோ நம்மால் முடிந்த உதவிகள் கடமைகள் என வண்டி ஓடிட்டு இருக்கு.இதை விட பெரிய விஷயம் என் பிள்ளைகளின் ஸ்கூல் அட்மிஷன் கிடைப்பதற்க்கு அலைந்த பாடுதான்..... அப்பப்பா.... அதற்க்கென ஒரு தனி பதிவே போட எண்ணியுள்ளேன்.இவை எல்லாம் இனிதே முடிந்த பின்பு தான் இந்த இரண்டு நாட்களாக நெட் கனெக்‌ஷன் கிடைக்க பெற்றுள்ளேன்.
எனவே தான் மெதுவாக என் இல்லத்திற்க்குள் எட்டி பார்த்து ஒரு ஹலோ சொல்லிட்டு போகலாம் என வந்தேன்.(இவ்வளவு நீட்டுக்கா ஹலோ சொல்றதுன்னு யாரும் கேட்டுடகூடாது.... எதையும் விலக்கி சொல்லணும் இல்லையா அதான் இப்படி.....)


ஏதோ இனி என்னால் முடிந்த போது வந்து என் கருத்துக்களையும்,பதிவுகளையும் கொடுத்து விட்டு செல்கிறேன்.இப்போதைக்கு விடைப்பெறுகிறேன்.  ஆமா...இந்த பூங்கொத்து எதற்க்குன்னு யாரும் கேட்கலையே ????அதையும் நானே சொல்கிறேன்.மூன்று மாதம் கழித்து பேசறோம்.ஒரு வித மலர்ச்சியோட பேசலாம் என்றும்,நமது நட்பை இந்த பூக்களை போல செழிக்க செய்யலாம் என்றும் தான்.... என்னங்க முடியலையா.... சரி சரி மீண்டும் சந்திப்போம்.

Sunday, January 16, 2011

என்னை பற்றிய அறிமுகம்

இறைவனின் திருப்பெயரால்.....இந்த வலைப்பூவில்  எனக்கென்ற ஒரு இடத்தை இந்த புதிய வருடத்தில் ஆரம்பம் செய்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.(எல்லா புகழும் இறைவனுக்கே....)
முதலில் அனைவருக்கும் இனிப்பை வழங்கி விட்டு பிறகு என்னை பற்றி சொல்கிறேன் சரியா.... இந்தாங்க எடுத்துக்கங்க.....   


தமிழ் நாட்டில் மயிலாடுதுறை ஊர் அருகே திருவாளப்புத்தூர் என்ற கிராமத்தில் பிறந்த நான் இந்த துபாய் நாட்டில் நான் காலடித்து எடுத்து வைத்து பத்து வருடங்கள் முடிந்து சரியாக நான்கு மாதங்கள் ஆகிவிட்டது.வெறும் பத்தாம் வகுப்பை மட்டும் முடித்திருக்கும் எனக்கு இந்த நாட்டில் வலம் வர காரணமாகியிருந்த இறவனுக்கு என் முதல் நன்றியையும்...,என் கணவருக்கும் என் நன்றியை தெரிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.....
பின்ன.... இண்டெர்நெட்டே என்னன்னு தெரியாம கம்ப்யூட்டர்னா என்னவெல்லாம் செய்யலாம்? எப்படி இருக்கும்?என்று அறியாமல் ஏதோ ஒரு முறை ஆனந்த விகடனில் எழுத்தாளர் சுஜாதா அவர்களின் இண்டெர்நெட் பற்றிய கட்டுரையை படித்து அரையும் குறையுமாக தெரிந்து கொண்டிருந்தவளுக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைப்பது என்றால் சும்மாவா.....
எனக்கென்று கம்ப்யூட்டரை கொடுத்து அதில் எல்லாம் கற்று தந்து இதோ இப்ப எனக்கென்ற ஒரு பக்கத்தை உருவாக்கும் அளவிற்க்கு என்னை முன்னேற்றியதில் என் கணவருக்கு மிக பெரி.......ய பங்கு உண்டுதானே.....?
வெறும் மெயில் படம் பார்ப்பது என்று அவ்வபோது உலாவி கொண்டிருந்த எனக்கு 2009-ம் ஆண்டு அவள் விகடனில் வெளியான அருசுவை தளத்தை பற்றிய தகவல் கிடைக்கவே அந்த பக்கத்திற்க்கு சென்றேன்.அன்று தான் அடடே.... நாம் எவ்வளவு நாட்கள் வீண் செய்திருக்கின்றோம்.... இப்படியும் நம் சமையல் திறன்களை,படைப்புகளை வெளிபடுத்த முடியுமா என்று ஆச்சர்யபட்டு ஐக்கியமும் ஆனேன்.... அதன் மூலம் நிறை தோழிகளின் பழக்கங்கள்.... ஏதோ எனக்கு தெரிந்தவைகளை பகிர்ந்து கொள்வது என  உலா வந்தேன்.
பலரும் தன்னுடைய திறமைகளை கொண்டு தனி வலைப்பூவை உருவாக்கி  அதில் சமையல்,கட்டுரை,கலைகள் என பலவிஷயங்களை எழுதி சிறப்பாக சென்று கொண்டிருப்பது தெரிய வந்தது.இது போன்ற தனி  பக்கம் தனக்கென்று உருவாக்கி நம்மை பலருக்கு அறிமுகம் செய்து கொள்ளமுடியும் என்று தெரிய வரவே...இதோ இப்போது உங்கள் முன் அப்சராவாகிய.....நான்.....


அன்புடன்,
அப்சரா.

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out