Showing posts with label பொறியல் மற்றும் கூட்டு வகைகள். Show all posts
Showing posts with label பொறியல் மற்றும் கூட்டு வகைகள். Show all posts

Wednesday, January 19, 2011

**** சுரைக்காய் கூட்டு ****

                                     


 தேவையான பொருட்கள்
சுரைக்காய்                             _        1/4 கிலோ/ ஒரு ஜான் அளவு
பாசி பருப்பு                             _        அரை கப்
வெங்காயம்                           _        1
 தக்காளி                                   _       பாதியளவு
 பச்சைமிளகாய்                     _       1
 தனியா தூள்                           _       1 தேக்கரண்டி
மஞ்சள்த்தூள்                          _       1 தேக்கரண்டி
தேங்காய்த்துருவல்             _        3 தேக்கரண்டி
 காய்ந்த மிளகாய்                   _       2
கறிவேப்பிலை                        _       ஒரு கொத்து
சின்ன வெங்காயம்                _         4
எண்ணெய்                                 _       2 தேக்கரண்டி

 *** செய்முறை ***
 பாசி பருப்பை கழுவிவிட்டு ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு மஞ்சள்த்தூள் சேர்த்து வேக விடவும்.சுரைக்காயை தோல் நீக்கி
கழுவிவிட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.வெங்காயம் தக்காளியையும் நறுக்கி வைத்து கொள்ளவும்.பச்சைமிளகாயை கீறி வைத்துக் கொள்ளவும்.

பாசி பருப்பு அரை வேக்காடு வெந்ததும்,நறுக்கி வைத்திருக்கும் சுரைக்காய்,வெங்காயம்,பச்சைமிளகாயையும்,தனியாத்தூளையும்,தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்கு கிளறிவிட்டு வேகவிடவும்.(பருப்பு வெந்து கொஞ்சம் தண்ணீரே போதுமானது.அதிகம் தண்ணீர் சேர்த்தால் சுரைக்காயும் தண்ணீர் விடும் என்பதால் கூட்டு தண்ணியாகி விடும்.எனவே திட்டமாக இருக்கும் படி பார்த்து கொள்ளவேண்டும்.)

பருப்பு,சுரைக்காய் எல்லாம் ஒன்று சேர வெந்து இருக்கும்.பிறகு அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி ஒரு கொதி கொதித்தவுடன் இறக்கி விட்டு 

இன்னொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பொடியாக அரிந்த சின்ன வெங்காயம்,காய்ந்த மிளகாய் கறிவேப்பிலையை சேர்த்து தாளிக்கவும்.வெங்காயம் பொன்னிறமாக நன்கு வதங்கியதும் வெந்த கூட்டை ஊற்றி நன்கு கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.







இது எல்லா வகையான புளி குழம்பிற்க்கும்,ரசத்திற்க்கும் பெஸ்ட் காம்பினேஷனாக இருக்கும்.

அன்புடன்,
அப்சரா.

Tuesday, January 18, 2011

**** உருளை வறுவல் ****

                                     



தேவையான பொருட்கள்
உருளை கிழங்கு                         _      2
பூண்டு                                              _      3 பல்
மிளகாய்த்தூள்                              _     1 1/2 ஸ்பூன்
மஞ்சள்த்தூள்                                _      1/2 ஸ்பூன்
எண்ணெய்                                       _      மூன்று தேக்கரண்டி
கறிவேப்பிலை                              _      ஒரு கொத்து

*** செய்முறை ***

உருளை கிழங்கை தோல் நீக்கி நன்கு கழுவி விட்டு,ஒரு இன்ச் அளவு சிறிய சதுரங்களாக நறுக்கி கொள்ளவும். 

ஒரு அகன்ற வானலியில் முக்கால் அளவு தண்ணீர் ஊற்றி கொதிவந்ததும் நறுக்கிய உருளையையும்,ஒரு ஸ்பூன் உப்பும்  சேர்த்து அரை வேக்காடாக வெந்ததும் வடிக்கட்டி விடவும்.
அதில் மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள் சிறிதளவே உப்பும் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.

அதே வானலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் கடுகு,கறிவேப்பிலை போட்டு தாளித்து பொடியாக நறுக்கிய பூண்டையும் சேர்த்து பொறிந்ததும்,உருளையை சேர்த்து நன்கு பிரட்டி குறைந்த தீயிலேயே விடவும்.நன்கு மசாலா வாசனை போய் மொறுவலானதும் இறக்கவும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உருளை வறுவல் தயார்.



அன்புடன், 
அப்சரா.

**** கோபி,பீஸ் பொறியல் ****

                        



தேவையான பொருட்கள்

காலிஃபிளவர்                 _            சிறியதாக ஒரு  பூ
பீஸ்                                      _              2 தேக்கரண்டி
வெங்காயம்                     _               ஒன்று
பச்சைமிளகாய்              _                2
மஞ்சள்த்தூள்                   _             1/2 ஸ்பூன்
சில்லி டொமேட்டோ சாஸ் _   ஒரு தேக்கரண்டி
தேங்காய்துருவல்            _            ஒரு தேக்கரண்டி

தாளிக்க:
எண்ணெய்                             _            3 ஸ்பூன்
கடுகு                                          _            1 ஸ்பூன்
கடலைபருப்பு                        _            1 ஸ்பூன்
கறிவேப்பிலை                 _            ஒரு கொத்து

***செய்முறை***



காலிஃபிளவரை மூன்று துண்டாக கட் செய்து மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
பாதியளவு வெந்து இருக்கும்.அதை தண்ணீரை விட்டு எடுத்து அதை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயத்தையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.மற்ற பொருட்களையும் தயாராக வைத்துக் கொள்ளவும்.


ஒரு வானலியை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடு வந்ததும்,தாளிக்க கொடுத்தவைகளை போட்டு தாளிக்கவும்,.
பின்பு வெங்காயம்,பச்சைமிளகாய் இவைகளை சேர்த்து நன்கு வதக்கவும்.


வதங்கியதும்,மஞ்சள்தூள்,சில்லி டொமேட்டோ சாஸ் இவைகளை சேர்த்து வதக்கி பின் நறுக்கி வைத்திருக்கும் காலிஃபிளவரையும் சேர்த்து பிரட்டி சிம்மிலேயே மூடி போட்டு மூன்று நிமிடங்கள் ஒன்று சேர வேக விடவும்.

 வெந்ததும் தேங்காய்துருவலை சேர்த்து ஒன்று சேர கிளறிவிட்டு 
இறக்கவும்.சுவையான காலிஃபிளவர் பீஸ் பொறியல் ரெடி.
காலிஃபிளவர் பிடிக்காதவர்கள் கூட இம்முறையில் செய்ததை ரசித்து சாப்பிடுவார்கள்.குழந்தைகளுக்கும் பிடிக்கும்.






அன்புடன், 
அப்சரா.

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out