என் பிள்ளைகளின் ஓவியங்களை இதற்க்கு முன் என் இல்லத்தில் அரங்கேற்றினேன் அல்லவா...?அதே போல் இப்போது எனது மகளுக்கு கடந்த ஒரு வருடங்களாக ஏற்பட்டிருக்கும் இசை ஆர்வத்தினால் அவளாகவே ஸ்கூல் ரைம்ஸை இசை மூலம் முயன்று இசைத்து வருகிறாள்.மூத்த மகன் பிறந்து ஒரு வயதிருக்கும் போது என்று நினைக்கிறேன்.அப்போது ஏதோ ஒரு சூப்பர் மார்க்கேட்டின் இலவச கூப்பனால் என்ன வாங்குவதென்றே தெரியாமல் நாற்பது திர்ஹமுக்கு வாங்கிய கீ-போர்ட் அது.அதை அப்படியே கொஞ்ச நாள் தட்டிவிட்டு மேலே தூக்கி வைத்திருந்தேன்.சென்ற வருடம் தான் அவளுக்கு ஸ்கூல் டீச்சர் வாசிப்பதை பார்த்து ஏற்பட்ட ஆர்வத்தினால் அந்த கீ போர்டை எடுத்து தாங்கம்மா என்று கேட்டு வாங்கி வைத்து கொண்டு அவளாகவே வாசித்து வாசித்து கற்று கொண்டாள். எனது சின்ன மகன் டீச்சர் சொல்லி கொடுத்த ரைம்ஸை வீட்டில் வந்து பாடி கொண்டிருந்தான்.அதையும் அவள் விட்டு வைக்கவில்லை. அவனை திரும்ப திரும்ப பாட சொல்லி அதையும் அன்றே இசையாக வெளிகொண்டு வந்தாள்.
ஒரு நாள் அவள் எல்லா ரைம்ஸையும் பாடி வாசித்து கொண்டிருந்தபோது என்னவரை அதை வீடீயோவில் கவர் செய்யுங்கள் என்று சொன்னேன்.அவை முழுவதும் நிறைய நீளமுடன் இருப்பதால் குறிப்பிட்ட இந்த பாடலின் இசையை மட்டும் இந்த வீடீயோ மூலம் வெளிப்படுத்தவே ஆசைப்பட்டேன்.அவளுக்கு இந்த ஆர்வம் ஒரு சில நாட்களுக்கு பிறகு மாறிவிடலாம்.குழந்தைகளே அப்படிதானே....?அவள் பெரியவளாக ஆனதும் “நீ இப்படியெல்லாம் வாசித்திருக்க தெரியுமா?” என்று காட்டலாம் அல்லவா...? அதான் இந்த ஒரு சின்ன க்ளிக்.நீங்களும் பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க சரியா...?
16 comments:
யக்காவ்... வீட்டுக்குள்ளேயே ஒரு ஏ ஆர் ரஹ்மானை வச்சி இருக்கீங்க போலிருக்கே..!! சூப்பர்.. டேலண்ட்
தலை சுற்றிப் போடுங்க கண்ணூபட்டுடும் :-))
//இலவச கூப்பனால் என்ன வாங்குவதென்றே தெரியாமல் நாற்பது திர்ஹமுக்கு வாங்கிய கீ-போர்ட்//
இது உங்களுக்கே ஓவரா தெரியல ஒரு வேளை 40 டாலரா ??? . ஹா..ஹா.. :-))
குட்டீஸ் கியூட் :-))
சலாம் ஜெய் சகோ///
தங்கள் வருகைக்கும்,பாராட்டுக்கும் மிக்க நன்றி சகோ//முதல் ஆளாக வந்து என் குட்டீஸை பார்த்து அழகான கருத்து சொன்னது எனக்கு மிக்க மகிழ்ச்சியை தந்தது.நல்லவங்க கண்ணெல்லாம் படாதாக்கும்.இப்ப சொல்லுங்க சகோ சுத்தி போடணுமா என்ன?
\\\இது உங்களுக்கே ஓவரா தெரியல ஒரு வேளை 40 டாலரா ??? .///
40 டாலர் கொடுத்து நாமெல்லாம் வாங்கிடுவோமா என்ன???யெம்மாடியோவ்...திர்ஹம் தான் அதும் ஃப்ரீ கூப்பனாக்கும்.
அப்சரா,குழந்தைகளை ரொம்பவே ரசித்தேன்.அதிலும் உங்கள் இளையவரின் குறும்பும் ரசிப்பும் பார்ப்போரை மிகவுமே ரசிக்க வைக்கும்.
யக்காவ்... வீட்டுக்குள்ளேயே ஒரு ஏ ஆர் ரஹ்மானை வச்சி இருக்கீங்க போலிருக்கே..!! சூப்பர்// அதேதான் அப்ஷரா... குட்டீஷ் இருவரும் சூப்பர், மகனுக்கு பாடுவதில் ஆர்வமிருப்பது தெரியுது.... மியூசிக் கிளாசில சேர்த்துவிடுங்க.
படம் மட்டும்தான் பார்க்க முடிந்தது, சத்தம் வரவில்லை மீண்டும் வந்து கேட்டுப்பார்க்கிறேன்.
சலாம் ஸாதிகா அக்கா...,தங்கள் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி.அது மட்டுமா உங்களின் பாராட்டும் மிகுந்த சந்தோஷத்தை அளித்தது அக்கா.
ஆமாம் சிறியவன் கவரும் வண்ணம் தான் நடந்து கொள்வான்.மூன்று பேரில் இவனுக்கு கொஞ்சம் மெச்சூர்ட் ஜாஸ்த்தி.சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் சமாளித்துக் கொள்வான்.அதே சமயம் குசும்பும் உண்டு.
அன்புடன்,
அப்சரா.
ஹாய் அதிரா..., வாங்க பா...என்ன படத்தை மட்டும் பார்த்துட்டு சொன்னா எப்படி?முழுசா பார்த்துட்டு சொல்லுங்க.அவசரம் இல்லை.சரியா...
நன்றி அதிரா...
அன்புடன்,
அப்சரா.
fareeha and fawaaz ,wow ! GOOD..
மகள் அழகாக கீ போர்ட் வாசிக்க,மகன் ஆக்ஷனோட பாடியது அருமை.
சலாம் ஆசியா அக்கா...,தாங்கள் பார்த்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி அக்கா...
அன்புடன்,
அப்சரா.
'யாழினிது குழலினிது மழலை சொல் கேளாதவர்' அதையும் தாண்டியது இது.
குழந்தைகளின் ஆர்வத்திற்கும் அதை ஊக்குவிக்கும் தாய்க்கும் பாராட்டுக்கள்.
ஆஹா...முதலில் குழந்தைகளுக்கு சுத்தி போடுங்க..
ரொம்ப cuteஆக வாசிக்கின்றாள்...அதற்கு ஏற்றாற் போல குட்டியின் பாடலும் ஆஹா...
குட்டிஸ் சூப்பர்ப்...கலக்குறாங்க..
இன்னமும் readerயில் வரமாட்டுது...இப்படி தான் உங்க பதிவினை நிறைய மிஸ் செய்கிறேன்...
எனது இல்லத்தில் ‘குறட்டை புலி’அவர்களின் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி.தங்கள் அழகிய தமிழில் கூறிய வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி.
அன்புடன்,
அப்சரா
எனது இல்லத்தில் வருகை தந்துள்ள இராஜராஜேஸ்வரி அவர்களை வருக வருகவென வரவேற்க்கிறேன்.தங்களின் அன்பான கருத்திற்க்கு மிக்க நன்றிங்க.
அன்புடன்,
அப்சரா.
வாங்க கீதா...,மியூஸிக்கை பார்த்தீங்களா...?ரொம்ப சந்தோஷங்க...
உங்களுக்கு தெரிய வரலைன்னாலும் மெனக்கெட்டு வந்து பார்த்து பதிவு போடுறீங்களே அதுவே எனக்கு மிகுந்த சந்தோஷம்ங்க...
மிகவும் நன்றி கீதா...
அன்புடன்,
அப்சரா.
Post a Comment