மங்கையர் உலகம் வலைப்பூவில் நடக்கும் ஜனவரி மாத போட்டியில் நானும் கலந்து கொள்ளலாமென ஆசைப்பட்டு அதன் முதல் முயற்ச்சியாக இந்த சமையல் குறிப்பை வெளியிடுகின்றேன்.
இந்த சமையல் பலரும் அறிந்த, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு வகையாகும்.அவற்றை இந்த போட்டியின் ஒரு தலைப்பான “பாரம்பர்ய சமையல்”பகுதிக்காக பகிர்ந்து கொள்ள ஆசைபடுகின்றேன்.இனி அதன் செய்முறை விளக்கத்தை பார்வையிடுவோம்.
பருப்பு கடைசல் ரசம்
தேவையான பொருட்கள்
பாசி பருப்பு _ ஒரு டம்ளர்
தக்காளி _ பெரியதாக இரண்டு
தேங்காய்த்துருவல் _ கால் கப்
புளி --------------------------------சிறிய எலுமிச்சை அளவு
மஞ்சள்த்தூள் _ இரண்டு ஸ்பூன்
பூண்டு _ பண்ணீரண்டு
மல்லித்தழை _ சிறிதளவு
வறுத்து பொடித்துக் கொள்ள:
மிளகு _ ஒரு தேக்கரண்டி
சீரகம் _ ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் _ நான்கு
தாளிப்பதற்க்கு:
கறிவடகம் _ இரண்டு தேக்கரண்டி
கறிவேப்பிலை _ இரண்டு கொத்து
பெருங்காயம் _ அரை ஸ்பூன்
நெய் _ ஒரு தேக்கரண்டி
எண்ணெய் _ மூன்று தேக்கரண்டி
செய்முறை:
முதலில் பாசி பருப்பை நன்கு கழுவி விட்டு தாராளமாக தண்ணீர் விட்டு அதில் மஞ்சள்த்தூளும்,பூண்டு ஐந்து பல்லும் போட்டு கொஞ்சம் திப்பி திப்பியாக வேக விடவும்.
பிறகு அதை நன்கு தண்ணீர் வடிய விடவும்.அந்த தண்ணியில் தக்காளியை கழு்விவிட்டு நான்காக அரிந்து போடவும்.
புளியை ஊற வைக்கவும்.
நன்கு தண்ணீர் வடிந்த பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு உப்பு மற்றும் தேங்காய்த்துருவலை சேர்த்து வெந்த பூண்டு மசிய எல்லாம் ஒன்று சேர ஒரு கரண்டியால் பருப்பை நன்கு மசிக்கவும்.
நன்கு கலந்ததும்,ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி சூடு வந்ததும்,கறிவிடம் சிறிது போட்டு பெருங்காயத்தூள் மிக சிறிதளவு,கறிவேப்பிலை போட்டு பொறிந்ததும் கலந்தை பருப்பை அதில் சேர்த்து நன்கு கிளறி இறக்கி வைக்கவும்.
இப்போது ரசத்திற்க்கு என்ன செய்யலாம் என பார்க்கலாம்.
புளியை நன்கு கரைத்து வி்ட்டு அதனுடன்,வடித்த பருப்புத்தண்ணீரையும் தக்காளியையும் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும்.
வறுத்து பொடிக்க வேண்டியவைகளை நன்கு பொடித்து அதனுடன் பூண்டையும் சேர்த்து நசுக்கி எல்லாவற்றையும் புளி கரைசலோடு போட்டு தேவையான அளவு உப்பும் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
(தண்ணீரும் தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும்)
அவற்றை அடுப்பில் வைத்து பெருங்காயத்தூள்,பொடியாக அரிந்த மல்லிதழை போட்டு கொதிக்க விடவும்.
நன்கு இரண்டு கொதி கொதித்ததும்,இறக்கி விட்டு மற்றொரு வானலியில் எண்ணெய் விட்டு கறிவிடம் கறிவேப்பிலை போட்டு தாளித்து ரசத்தில் கொட்டி கலந்து விடவும்.
இதோ சுவையான மணமிக்க பருப்பு கடைசல் ரசம் தயார்.
சூடான குழைந்த சாதத்தி்ல் நெய் ஊற்றி கடைந்த பருப்பு சிறிது போட்டு ரசம் நன்கு ஊற்றி சாதத்தை பிசைந்து அதனுடன் தொட்டுக்கொள்ள ஒரு பக்கம் உருளைகிழங்கு வறுவல்,மற்றொரு பக்கம் அப்பளம் என சாப்பிட சும்மா சத்தமில்லாமல் சாப்பாடு போய் கொண்டிருக்கும்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதனை நன்கு விரும்பி சாப்பிடுவார்கள்.
இதில் எங்கள் ஊர் பகுதிகளில் மின்னலை என்பதை சேர்த்து கொதிக்க விடுவர்.
அது ஒரு தனி மணத்தை கொடுக்கும்.
இதுவே எங்கள் ஊர் பாரம்பர்ய சமையல்களில் ஒன்றாகும்.
நன்றி.