Tuesday, January 18, 2011

**** கோபி,பீஸ் பொறியல் ****

                        



தேவையான பொருட்கள்

காலிஃபிளவர்                 _            சிறியதாக ஒரு  பூ
பீஸ்                                      _              2 தேக்கரண்டி
வெங்காயம்                     _               ஒன்று
பச்சைமிளகாய்              _                2
மஞ்சள்த்தூள்                   _             1/2 ஸ்பூன்
சில்லி டொமேட்டோ சாஸ் _   ஒரு தேக்கரண்டி
தேங்காய்துருவல்            _            ஒரு தேக்கரண்டி

தாளிக்க:
எண்ணெய்                             _            3 ஸ்பூன்
கடுகு                                          _            1 ஸ்பூன்
கடலைபருப்பு                        _            1 ஸ்பூன்
கறிவேப்பிலை                 _            ஒரு கொத்து

***செய்முறை***



காலிஃபிளவரை மூன்று துண்டாக கட் செய்து மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
பாதியளவு வெந்து இருக்கும்.அதை தண்ணீரை விட்டு எடுத்து அதை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயத்தையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.மற்ற பொருட்களையும் தயாராக வைத்துக் கொள்ளவும்.


ஒரு வானலியை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடு வந்ததும்,தாளிக்க கொடுத்தவைகளை போட்டு தாளிக்கவும்,.
பின்பு வெங்காயம்,பச்சைமிளகாய் இவைகளை சேர்த்து நன்கு வதக்கவும்.


வதங்கியதும்,மஞ்சள்தூள்,சில்லி டொமேட்டோ சாஸ் இவைகளை சேர்த்து வதக்கி பின் நறுக்கி வைத்திருக்கும் காலிஃபிளவரையும் சேர்த்து பிரட்டி சிம்மிலேயே மூடி போட்டு மூன்று நிமிடங்கள் ஒன்று சேர வேக விடவும்.

 வெந்ததும் தேங்காய்துருவலை சேர்த்து ஒன்று சேர கிளறிவிட்டு 
இறக்கவும்.சுவையான காலிஃபிளவர் பீஸ் பொறியல் ரெடி.
காலிஃபிளவர் பிடிக்காதவர்கள் கூட இம்முறையில் செய்ததை ரசித்து சாப்பிடுவார்கள்.குழந்தைகளுக்கும் பிடிக்கும்.






அன்புடன், 
அப்சரா.

3 comments:

Asiya Omar said...

சாஸ் சேர்த்தது வித்தியாசமாக இருக்கு.

ஆமினா said...

சத்தான ஐட்டம்

பாக்கும் போதே சாப்பிட தூண்டுது

apsara-illam said...

ஆமாம் ஆசியா அக்கா..,குழந்தைகளுக்கு அப்போதாவது பிடிக்கும் என்பதனால் செய்து பார்த்தது.என் பைய்யன் அன்று ருசித்து சாப்பிட்டான் என்றால் பாருங்களேன்.என் கணவருக்கு காலிஃபிளவர் என்றாலே பேருக்கு டேஸ்ட் செய்வார்.ஆனால் இப்படி செய்ததும் அவருக்கு காலிஃபிளவர் என்றே தெரியாமல் இரண்டு முன்று முறை எடுத்து கொண்டு சாப்பிட்டார்.

ஆமினா உங்கள் கருத்துக்கும் நன்றி பா... சத்தானதுதான் அதான் இப்படி ஒரு முயற்ச்சியில் என் வீட்டில் திணிச்சாச்சு...

அன்புடன்,
அப்சரா.

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out