Saturday, January 22, 2011

கோழி குழம்பு


நெய் சாதம் செய்தாச்சு அதற்க்கான பெஸ்ட் காம்பினேஷன் செய்ய வேண்டும் அல்லவா...? அதான் இந்த கோழி குழம்பு(ஆனம்).அட...இதுதான் எல்லாரும் செய்வோமே....? இது என்ன பெரிய அதிசயமா...?என்று நீங்கள் கேட்பீர்கள் எனத்தெரியுமுங்க... இது என் இல்லத்து விருந்தல்லவா... அதற்குரிய காம்பினேஷனோடு கொடுத்தால் தானே நல்லா இருக்கும்.என் கைமணம் எப்படி இருக்குன்னு கொஞ்சம் ருசிச்சுதான் சொல்லுங்களேன்...

 தேவையான பொருட்கள்
கோழி துண்டுகள்                            _    ஒரு கிலோ
வெங்காயம்                                       _    பெரியதாக ஒன்று
தக்காளி                                                _    இரண்டு
பச்சைமிளகாய்                                  _    ஒன்று
எண்ணெய்                                           _     100 மிலி
நெய்                                                        _     1 தேக்கரண்டி
 பட்டை                                                   _     1 இன்ச் அளவு 
இஞ்சி,பூண்டு விழுது                        _     2 தேக்கரண்டி         
மஞ்சள்த்தூள்                                       _     1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள்                                     _     1 1/2 தேக்கரண்டி  
கரம்மசாலாத்தூள்                              _     1/2 தேக்கரண்டி
சோம்புத்தூள்                                         _     1 தேக்கரண்டி
மல்லி,புதினா தழை                            _     சிறிதளவு
கறிவேப்பிலை                                      _     ஒரு கொத்து
உருளைகிழங்கு                                    _     ஒன்று
*** அரைத்து கொள்ள ***
தேங்காய் துருவல்                                _   ஒரு கப்
முந்திரி                                                        _   5
மிளகுத்தூள்                                               _   2 தேக்கரண்டி
சீரகத்தூள்                                                   _    2 தேக்கரண்டி
மல்லித்தூள்                                               _    3 தேக்கரண்டி 


*** செய்முறை ***
கோழியை நன்கு சுத்தம் செய்து விட்டு மஞ்சள் தூள் சிறிது போட்டு நன்கு மூன்று நான்கு முறை கழுவி வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம்.தக்காளி இவைகளை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
உருளையை தோல் சீவி கழுவி விட்டு பெரியதாக இருந்தால் ஆறு துண்டுகளாகவும்,சிறியதாக இருந்தால் நான்கு துண்டுகளாகவும் வெட்டி கொள்ளவும்.

குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய்,நெய் ஊற்றி சூடு வந்ததும்,பட்டை போட்டு அரிந்த வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும்.

பிறகு இஞ்சி,பூண்டு விழுதை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
நன்கு பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி,பச்சைமிளகாயும்,அரிந்து கழுவிய மல்லி புதினா தழையையும்,கறிவேப்பிலையையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

அதன் பின் தூள் வகைகளை போட்டு கிளறி விட்டு சிக்கனையும்,ஒரு ஸ்பூன் உப்பையும் போட்டு நன்கு ஒன்று சேர கிளறி மிதமான தீயில் ஐந்து நிமிடம் வதங்க விடவும்.( எவ்வளவு நன்றாக வதங்க விடுகிறோமோ அவ்வளவு நன்றாக குழம்பு அமையும்) 

அதற்க்குள் அரைக்க கொடுத்தவைகளை நைசாக அரைத்து கொள்ளவும்.

பிறகு வதங்கிய சிக்கனில் அரைத்தவற்றை இரண்டு டம்ளரில் கரைத்து ஊற்றி தேவையான அளவு உப்பும்,கிழங்கும்  சேர்த்து  மிகவும் தண்ணியாக இல்லாமல் கெட்டியாகவும் இல்லாமல் திட்டமாக இருக்கும்படி பார்த்து குக்கரை மூடி ஸ்டீம் வந்ததும் வெய்ட் போட்டு மிதமான தீயில் பத்து நிமிடம் வைத்து இறக்கவும்.

சுவையான கோழி குழம்பு ரெடி.நெய் சாதத்திற்க்கு மிகவும் நன்றாக இருக்கும்.
 (எங்கள் ஊர் ஸ்டைலில் சொல்ல வேண்டுமானால் கலரி ஆனம் போல் இருக்கும்.)
சுவைத்து விட்டு சொல்லிட்டு போங்க சரியா...?


அன்புடன், 
அப்சரா.

8 comments:

Asiya Omar said...

கோழி குழம்பு கலர் சூப்பர்.அருமையாக செய்திருக்கீங்க,உங்க முறைப்படி செய்து பார்க்கணும்.

Jaleela Kamal said...

கோழி குழம்பு சூப்பர்.

apsara-illam said...

வாங்க ஆசியா அக்கா....,தங்களின் கருத்தை கண்டு மகிழ்ச்சி.செய்து பார்த்துட்டு சொல்லுங்க....

அன்புடன்,
அப்சரா.

apsara-illam said...

ஜலீலா அக்கா...,எல்லா பக்கங்களும் சென்று கருத்து தெரிவித்தது எனக்கு மிகவும் சந்தோஷத்தை அளித்துள்ளது.
பெருமையாகவும் உள்ளது.
நன்றிகள் பல பல அக்கா...

அன்புடன்,
அப்சரா.

Anonymous said...

கோழி குழம்பு செய்தேன்.நம்ம ஊர் கலரி ஆனம் போலவே இருந்தது
அன்புடன்
ரிதா

apsara-illam said...

அடடே குழம்பு செய்து பார்த்தீர்களா...?
வந்து கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ரிதா...

அன்புடன்,
அப்சரா.

Asiya Omar said...

அப்சரா கோழி குழம்பு செய்து பார்த்தாச்சு சூப்பர்.எல்லாருக்கும் பிடித்திருந்தது.

apsara-illam said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஆசியா அக்கா..,கோழி குழம்பு செய்து பார்த்தீர்களா....?எல்லோருக்கும் பிடித்திருந்ததா...?மிகவும் சந்தோஷம் அக்கா... என்னொடு வந்து தங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அக்கா...

அன்புடன்,
அப்சரா.

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out