தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி _ முக்கால் டம்ளர்
பச்சரிசி _ கால் டம்ளர்
துவரம்பருப்பு _ அரை டம்ளர்
கடலைபருப்பு _ அரை டம்ளர்
பாசி பருப்பு _ 2 தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு _ 2 தேக்கரண்டி
வெங்காயம் _ பெரியதாக ஒன்று
காய்ந்த மிளகாய் _ 6
இஞ்சி _ இரண்டு இன்ச் அளவு
சீரகம் _ ஒரு ஸ்பூன்
எண்ணெய் _ சுடுவதற்க்கு
கறிவேப்பிலை _ இரண்டு கொத்து
சமையல் சோடா _ கால் ஸ்பூன்
பெருங்காயத்தூள் _ ஒரு தேக்கரண்டி
புழுங்கல் அரிசி _ முக்கால் டம்ளர்
பச்சரிசி _ கால் டம்ளர்
துவரம்பருப்பு _ அரை டம்ளர்
கடலைபருப்பு _ அரை டம்ளர்
பாசி பருப்பு _ 2 தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு _ 2 தேக்கரண்டி
வெங்காயம் _ பெரியதாக ஒன்று
காய்ந்த மிளகாய் _ 6
இஞ்சி _ இரண்டு இன்ச் அளவு
சீரகம் _ ஒரு ஸ்பூன்
எண்ணெய் _ சுடுவதற்க்கு
கறிவேப்பிலை _ இரண்டு கொத்து
சமையல் சோடா _ கால் ஸ்பூன்
பெருங்காயத்தூள் _ ஒரு தேக்கரண்டி
செய்முறை பருப்பை வகைகளை எல்லாம் ஒன்று சேர்த்து நன்கு கழுவி அதை தாராளமாக தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.
அரிசிகளையும் கழுவி விட்டு தனியே ஊற வைக்கவும்.குறைந்தது இரண்டு மணி நேரம் ஊற வேண்டும்.
ஊறிய பின்பு மிக்ஸியில் அரிசியையும்,காய்ந்த மிளகாய்,சீரகம் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி முதலில் அரைக்க வேண்டும்.
ஓரளவு அரந்ததும்,பருப்புவகைகளையும்,இஞ்சி துண்டையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றிவிட்டு பின்பு கொஞ்சம் தண்ணீரும் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
பின்பு பொடியாக அரிந்த வெங்காயம், பெருங்காயத்தூள்,தேவையான அளவு உப்பும்,சமையல் சோடாவும் சேர்த்து விட்டு மூன்று முறை லேசாக மிக்ஸியை சுற்றி விட்டு ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொள்ளவும்.
மூடி இரண்டு மணி நேரம் கழித்து பொடியாக அரிந்த கறிவேப்பிலையை சேர்த்து நன்கு கலந்து விட்டு வைக்கவும்.
தோசைகல்லை அடுப்பில் வைத்து சூடு வந்ததும்,ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்றி மெல்லியதாக தடவி சுற்றிலும் ஒரு ஸ்பூன் எண்ணெயை விட்டு,அடி நன்கு சிவந்ததும் திருப்பி போட்டு விட்டு சிறிது எண்ணெயை ஊற்றி நன்கு சிவந்ததும் எடுக்கவும்.
மிகவும் சுவையான சத்துள்ள அடை தயார்.இதற்க்கு தேங்காய் சட்னி,சாம்பார் தொட்டு கொள்ள நன்றாக இருக்கும்.இதையே குழந்தைகளுக்கு கொஞ்சம் மொத்தமாக சிறியதாக ஊற்றி மூன்று கலரான குடைமிளகாயை பொடியாக அரிந்து தூவி,சீஸையும் தூவி அடி மொறுவலாக வரும் வரை அடுப்பை சிம்மிலேயே வைத்து பிறகு எடுத்து கெட்ச்சப்புடன் கொடுக்கலாம்.சில குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
பருப்புகள் அதிகம் சேர்ப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் சத்தானது.ஆனால் அதே சில பெரியவர்களுக்கு வயிற்று கோளாறு ஏற்படாமல் இருக்கத்தான் சீரகம்,இஞ்சி,பெருங்காயத்தூள் இவையெல்லாம் சேர்ப்பது. எனவே பெரியவர்கள் பயப்படாமல் சாப்பிடலாம்.
அன்புடன்,
அப்சரா.