Monday, January 17, 2011

**** வெஜிடபுள் குருமா ****

          



தேவையான பொருட்கள்
பீன்ஸ்                       _    6
கேரட்                        _    கால் பகுதி
உருளைகிழங்கு _    ஒன்று
முட்டை கோஸ் _    சிறிதளவு
பச்சை பட்டாணி   _  மூன்று ஸ்பூன்
வெங்காயம்          _   பெரியதாக ஒன்று
தக்காளி                  _    சிறியதாக ஒன்று
பச்சைமிளகாய்   _    ஒன்று
எண்ணெய்             _     5 தேக்கரண்டி
இஞ்சி ,பூண்டு அரவை  _  ஒரு தேக்கரண்டி
மிளகாய்த்தூள்    _    ஒரு ஸ்பூன்
மஞ்சள்த்தூள்      _     1/4 ஸ்பூன்
புதினா,மல்லி இழை _ சிறிதளவு
 *** அரைத்து கொள்ள ***
தேங்காய் துருவல்    _    அரை கப்
முந்திரி                            _     3
கிராம்பு                            _      1
ஏலக்காய்                       _      1
பட்டை                             _   ஒரு இன்ச் அளவு
சோம்பு                            _   ஒரு ஸ்பூன்

  *** செய்முறை***
காய்களை நன்கு கழுவி விட்டு சிறியதாக நறுக்கி கொள்ளவும்.வெங்காயம் தக்காளியையும் பொடியாக நறுக்கி கொள்ளவும் பச்சைமிளகாயை கீறி வைத்துக் கொள்ளவும்.

குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடு வந்ததும்,நறுக்கிய வெங்காயம் போட்டு கால் ஸ்பூன் உப்பு சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியவுடன்,தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கவும்.

வதங்கிய பின்,இஞ்சி பூண்டு அரவை சேர்த்து வதக்கி விட்டு தூள் வகைகளை சேர்த்து வதக்கவும்.பின்பு நறுக்கி இருக்கும் காய்களையும்,மல்லி,புதினா தழைகளையும் சேர்த்து கிளறி மிதமான தீயிலேயே சிறிது வதங்க விடவும்.

அதற்க்குள் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நன்கு நைசாக அரைத்து கொள்ளவும்.

அதன் பின்,காய் நன்கு வதங்கியிருக்கும்.அரைத்த விழுதை அதில் சேர்த்து சிறிதளவு தேவையான அளவு தண்ணீரும் சேர்த்து உப்பும் இன்னும் சிறிதளவு சரி பார்த்து சேர்த்து குக்கரை மூடவும்.

ஸ்டீம் வந்ததும் வெய்ட் போட்டு அடுப்பை குறைந்த தீயில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.
சுவையான,மனமான குருமா தயார்.சப்பாத்திக்கு பெஸ்ட் காம்பினேஷ்னாக இருக்கும்.

அன்புடன், 
அப்சரா.

2 comments:

Asiya Omar said...

அருமையாக ஈசியாக செய்து காட்டி இருக்கீங்க.படங்கள் அழகு.

apsara-illam said...

வாங்க ஆசியா அக்கா...,இது எங்கள் வீட்டில் அடிக்கடி செய்யும் குருமா... என் பைய்யனுடைய விருப்பானதில் ஒன்று.
கருத்து தெரிவித்ததற்க்கு மிக்க நன்றி ஆசியா அக்கா.

அன்புடன்,
அப்சரா.

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out