Monday, January 17, 2011

*** ஈஸி முட்டை குழம்பு ***


             


தேவையான பொருட்கள்

முட்டை                             _   ஒன்று
தேங்காய் பால் பவுடர் _    முக்கால்  கப்
வெங்காயம்                      _     ஒன்று
தக்காளி                               _     ஒன்று
பச்சைமிளகாய்                 _     ஒன்று
இஞ்சி,பூண்டு அரவை    _     ஒரு ஸ்பூன்
மல்லித்தூள்                       _       இரண்டு ஸ்பூன்
மஞ்சள் தூள்                       _        ஒரு ஸ்பூன்
மிளகாய்த்தூள்                  _         ஒரு ஸ்பூன்
சீரகத்தூள்                            _        அரை ஸ்பூன்
சோம்புத்தூள்                      _         அரை ஸ்பூன்
கறிவேப்பிலை                   _       ஒரு கொத்து
மல்லி தழை                         _     சிறிதளவு
எண்ணெய்                            _      3 தேக்கரண்டி

*** செய்முறை ***

தேங்காய் பால் பவுடரை ஒன்றரை டம்ளரில் கரைத்து அதனுடன் மிளகய்த்தூள் தவிர்த்து அனைத்து தூள்களையும் தேவையான அளவு உப்பும் சேர்த்து கரைத்து மேலே பச்சை மிளகாயை கீறி அதில் சேர்க்கவும்.மல்லி இலையையும் நறுக்கி போட்டு கொள்ளவும்.

வெங்காயம் தக்காளியையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் தக்காளி இவைகளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

வதங்கியது இஞ்சி,பூண்டு அரவைகளை சேர்த்து வதக்கி விட்டு மிளகாய்த்தூளையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விடவும்.

வதங்கியதும் கரைத்து வைத்திருக்கும் கரைசலை ஊற்றி கொதிக்க ஆரம்பிக்கும்போது மிதமான தீயில் வைத்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.

பின்பு முட்டையை அதில் உடைத்து ஊற்றி ஒரு கிளறு கிளறி விட்டு இன்னும் ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.ஒண்ணும்,ரெண்டுமாக முட்டை சிதறினாற் போல் வெந்து குழம்பும் எண்ணெய் மிதந்து தயார் நிலையில் இருக்கும்.

பிறகு அடுப்பிலிருந்து இறக்கவும்.
இது இடியாப்பம்,ஆப்பத்திற்க்கு மிகவும் சுவையாக இருக்கும்.
அவசரித்திற்க்கு செய்வதாக இருந்தால் தேங்காய் பால் பவுடர்.இல்லையென்றால் நார்மல் தேங்காயால் சேர்த்தே செய்யலாம்.
அன்புடன்,
அப்சரா.

2 comments:

அன்புடன் மலிக்கா said...

வந்துட்டோமுல்ல வந்துட்டோமுல்ல.
அப்சரா நலமா?

போட்டோக்கள் சூப்பர் சுவையும் நல்லாயிருகுமுல்ல[சும்மா] அசத்துங்க.

apsara-illam said...

ஹைய்யா.... வந்துட்டீங்கல்ல...வந்துட்டீங்கல்ல....
நான் ரொம்ப நல்லா இருக்கென் மலிக்கா...
உங்களை போன்றவர்களின் வருகை எனக்கு பெருமையே....
உங்கள்ட்டதான் பேசணும்னு ஜலீலா அக்காட்ட கூட சொல்லிட்டு இருந்தேன்.
தாங்கள் வந்து,கருத்து தெரிவித்ததற்க்கு நன்றிங்க....

அன்புடன்,
அப்சரா.

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out