Friday, January 21, 2011

நெய் சாதம்

இன்று வெள்ளி கிழமையாச்சே.... ஒவ்வொரு இஸ்லாமியர்கள் வீட்டிலும் இன்று பெருநாள் போலதான் இருக்கும்.காலையில் எழுந்து வீட்டில் உள்ள அனைவரும் தலைக்கு குளித்து தடபுடலான சமையல்.... ஆண்கள் ஜும்மா சென்று வந்த பிறகு பசியோடு இருக்கும் அவர்களுக்கு நிச்சயம் நெய் சோறு, பிரியாணிதான்.எனவே வெள்ளிகிழமை என்றாலே திருநாள்தான்.
ஆனாலும் இந்த வளைகுடா நாடுகளில் இஸ்லாமியர்கள் என்று இல்லாமல் எல்லோருக்குமே இந்நாள் திருநாள்தான்.ஏனென்றால் இங்கெல்லாம் வெள்ளிகிழமைதானே அரசாங்க விடுமுறை.
 இந்நன்னாளில் எங்கள் இல்லத்தில் இன்றைய ஸ்பெஷல் (என் மகளின் ஃபேவரட்டாக்கும்...)நெய் சாதம்,கோழி குழம்பு... எங்கள் ஊர் பகுதியின் பாஷையில் சொல்ல வேண்டுமானால்... தாளிச்சோறு,கோழி ஆனம்.
பல பேருக்கு தெரிந்த ஒன்று என்றாலும் எங்கள் ஊர் விருந்தை எனது இல்லத்தில் கொடுப்பது எனக்கு பெருமையல்லாவா...?அதான் கொடுத்துள்ளேன்.


தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி                        _       2 1/2 டம்ளர்
வெங்காயம்                               _       ஒன்று 
தக்காளி   (அரிந்ததில்)           _       நான்கு துண்டுகள்
எண்ணெய்                                  _       50 மிலி
நெய்                                               _      2 தேக்கரண்டி
பட்டை                                          _      3 இன்ச்சில் இரண்டு துண்டுகள்
ஏலக்காய்                                     _      2
கிராம்பு                                          _      3
மல்லி,புதினா தழை               _     சிறிதளவு
 தயிர்                                              _      ஒரு தேக்கரண்டி
 இஞ்சி,பூண்டு அரவை           _       2 தேக்கரண்டி
 உப்பு                                                _    தேவையான அளவு

*** செய்முறை ***


வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து கொள்ளவும்.மல்லி,புதினா தழைகளை நன்கு நீரில் அலசி நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
அரிசியை மூன்று முறை கழுவி விட்டு ஊறவைக்கவும்.

 ஒரு அகலமான சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடு வந்ததும்,பட்டை,கிராம்பு,ஏலக்காய் இவைகளை போட்டு பின் நீளவாக்கில் அரிந்த வெங்காயம்,தக்காளி துண்டுகளை சேர்த்து அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

நன்கு வதங்கியதும் இஞ்சி,பூண்டு விழுதை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட்டு தயிர் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
அதன் பின் நறுக்கி வைத்திருக்கும் மல்லி புதினா தழைகளை சேர்த்து வதக்கி ஐந்து டம்ளர் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது நீரை வடிக்கட்டி அரிசியை சேர்க்கவும்.
தண்ணீர் சுண்டும் நிலையில் இருக்கும் போது மூடியில் ஃபாயிலோ,பேப்பரோ போட்டு மூடி அடுப்பில் தம் போடும் ப்ளேட் அல்லது இரும்பு தவாவை வைத்து அதன் மேல் பாத்திரத்தை வைத்து மூடியின் மேல் வெய்ட்டான பாத்திரம் ஏதும் வைக்கவும்.அடுப்பை சிம்மில் பத்து நிமிடம் வைக்கவும்.

பிறகு மூடியை திறந்து ஒரு முரை கிளறி பார்த்தால் அடிவரை நன்கு சாதம் வெந்து உதிரியாக இருக்கும்.அடுப்பை அணைத்து விட்டு அப்படியே மூடி வைத்து விடவும்.

நன்றாக கமகமக்கும் நெய் சாதம்(தாளிச்சோறு) தயார்....
இதற்க்கு பெஸ்ட் காம்பினேஷன்  சிக்கன்(அல்லது) மட்டன் குழம்பு இல்லையா...?அது அடுத்து வந்துட்டே இருக்கு.....




அன்புடன், 
அப்சரா.

11 comments:

ஆமினா said...

சலாம் அப்சரா

சூப்பர்விருந்து அப்சரா

ரோஜா டிசைன் ரொம்ப நேரமா உத்து உத்து பாக்குறேன்

athira said...

சமையல் குறிப்புக்களில் அசத்துறீங்க அப்சரா. அனைத்துமே நீட்டாக இருக்கு, அண்ட் சூப்பர்.

கீழே இருக்கும் வேட் வெரிபிகேஷனை நீக்கிவிடுங்கோவன்.

athira said...

///ஆமினா said...
சலாம் அப்சரா

சூப்பர்விருந்து அப்சரா

ரோஜா டிசைன் ரொம்ப நேரமா உத்து உத்து பாக்குறேன்
///
ரொம்ப உத்து உத்து பார்க்காதீங்க ரோஜா வாடிவிடும்:).

apsara-illam said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஆமினா...
உங்கள் கருத்தை பார்க்கவும் மகிழ்ச்சி அடைந்தேன்.
\\\ ரோஜா டிசைன் ரொம்ப நேரமா உத்து உத்து பாக்குறேன்///
ரோஜா மாதிரி தெரியலன்னா... ஆமினா...?
ஏதோ எனக்கு தெரிஞ்சதை வச்சு செய்யுறேன் மா....
உங்கள் ஊக்கம் எனக்கு எனர்ஜி மாதிரி சேருதுல்ல...
நன்றி ஆமினா...

அன்புடன்,
அப்சரா.

apsara-illam said...

அதிரா உங்கள் பதிவை கண்டும் மிக்க மகிழ்ச்சி.
நான் நீட்டா செய்யுறேன்னு வேற சொல்லிட்டீங்களா.... சந்தோஷத்தில் தலை கால் புரியல போங்க....

\\\ரொம்ப உத்து உத்து பார்க்காதீங்க ரோஜா வாடிவிடும்:///

நகைச்சுவையில் அதிராவை மிஞ்ச ஆள் உண்டோ...?
என் இல்லம் வந்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றி அதிரா...

அன்புடன்,
அப்சரா.

Jaleela Kamal said...

நெய் சாதம் அருமை, நான் செய்வது போல் தான் இருக்கு

Anonymous said...

unga blog la ellame enaku piditha items ah eruku thanks

apsara-illam said...

உங்களுக்கு பிடித்த விஷயங்கள் எனது இல்லத்தில் இருப்பதென்றால் எனக்கு மிகவும் சந்தோஷமே...மஹா....
வந்து என்னோடு பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி...

அன்புடன்,
அப்சரா.

Anonymous said...

சலாம் அப்சரா..

நெய்சாதம் சூப்பர் ..வாழ்த்துக்கள்.
தோழி
ருக்சானா..

apsara-illam said...

ஜலீலா அக்கா...,தஙக்ள் கருத்துக்கு நன்றி அக்கா...

அன்புடன்,
அப்சரா.

apsara-illam said...

வ அலைக்கும் சலாம் ருக்சானா...,
தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

அன்புடன்,
அப்சரா.

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out