Monday, January 17, 2011

*** ரவ்வாடை ***

                            
                      
                    


தேவையான பொருட்கள் :
 
ரவை              _    2 ½ டம்ளர்
சீனி               _    3 டம்ளர்
முட்டை            _    12
நெய்               _    250 கி
கண்டன்ஸ்ட் மில்க்  _    150 கி
ஏலக்காய்           _    7
முந்திரி             _    12
உப்பு               _    1 தேக்கரண்டி


** செய்முறை **
தேவையான பொருட்களை தயாராக வைக்கவும்.முட்டையை ரூம் டெம்ப்ரேச்சரில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
முட்டையை மிக்ஸியில் உடைத்து ஊற்றி நன்கு நுரையாக அடித்துக் கொள்ளவும்.

வானலியில் ரவையை நிறம் மாறாமல் லேசாக வறுத்து கொள்ளவும்.(மிகவும் வறுத்து விட கூடாது).

அடித்து வைத்திருக்கும் முட்டையை ஒரு பாத்திரத்தில் வடிக்கட்டி விட்டு அதில் உப்பையும் சீனியையும் சேர்த்து கைகளினாலோ அல்லது மரக்கரண்டியாலோ நன்கு கரைத்து கொள்ளவும்.(பீட்டரால் வேண்டாம்)

முட்டையில் சீனி கரைந்ததும் ரவை,கண்டஸ்ட்மில்க் மற்றும் ஏலக்காய் பொடியையும் சேர்த்து நன்கு ஒன்று சேர அதே போல் நன்கு கலக்கி வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் ஒரு அகன்ற பாத்திரத்தை வைத்து (படத்தில் உள்ளது போல்…) அதில் நெய்யை ஊற்றி உருக செய்து அதில் முந்திரியை வறுத்து எடுத்து வைத்துக் கொண்டு பின்பு கலக்கி வைத்திருக்கும் கலவையை ஊற்றவும்.

கரண்டியை கொண்டு கை விடாமல் கிளறி கொண்டே இருக்க வேண்டும்.சீக்கிரம் அடியில் பிடிக்க ஆரம்பிக்கும் எனவே அடிவரை நன்றாக கிளறவும்.கொஞ்சம் கொதிக்க ஆரம்பித்து கலவை கெட்டி கொடுக்க ஆரம்பிக்கும் அப்போதே மற்றொரு அடுப்பில் இரும்பு அல்லது இந்தாலியன் தோசை கல்லை வைத்து சூடு படுத்தவேண்டும்.
சூடு வந்ததும்,இந்த சட்டியை அதன் மேல் வைத்து அடுப்பை மிதமான தணலில் வைத்து மூடியில் துணியை கட்டியோ,பேப்பரை வைத்தோ மூடி மூடியின் மேல் வெய்ட் உள்ள பொருளை வைக்கவும்.
பதினைந்து நிமிடம் கழித்து மூடியை திறந்து ஒரு முறை லேசாக மேல் புறம் கொஞ்சம் கீழே வரும்படி  கிளறி விட்டு மறுபடியும் தம் போடவும்.
இருபது நிமிடம் கழித்து மூடியை திறந்து கத்தியால் குத்தி பார்த்தால் மேல் புறம் மட்டுமே பிசுப்பிசுப்பாக ஒட்டியிருக்க வேண்டும்.உள்ளே உள்ள கலவை ஒட்ட கூடாது.இதுவே பதம்.இப்படி இருந்தால் அடுப்பை அணைத்து விட்டு வறுத்த முந்திரி பருப்பை தூவி அப்படியே வைத்து விடவும்.

நன்கு ஆறிய பிறகே துண்டு போடவோ, எடுக்கவோ சரியான பதத்துடன் இருக்கும்.சாப்பிட சுவை சூப்பராக இருக்கும்.

***குறிப்பு**** :- 1) இதில் நமது ஊர் கிராமங்களில் கிடைக்கும் நாட்டுமுட்டையில் செய்தால் சுவை மிகவும் நன்றாக இருக்கும்.அதன் வித்தியாசம் நிச்சயம் தெரியும்.
2) தம் போடுவதில் நெருப்பு அடுப்புகளில் போடும் முறையே பாரம்பர்ய முறை.கிளறும் போது திக்கான கலவையானவுடன் அடுப்பில் தகதகவென இருக்கும் நெருப்பு துண்டங்களை நாம் மூடிய மூடியின் மேல் போட்டு விடுவார்கள் கீழேயும் எரிய விடாமல் தணலாக வைத்திருப்பார்கள்.இப்படி வைத்திருப்பதால் மேலேயும் லேசாக சிவந்தார்போல் இருக்கும்.இடையில் ஒரு முறை கிளறவும் இதில் தேவையில்லை.
3) எக் பீட்டரால் இந்த கலவையை அடித்தால் பதம் மாறி விடும் எனவே நான் குறிப்பிட்டது போல் தான் கலவையை கலக்க வேண்டும்.மைக்ரோவேவிலும் இது சரியாக வராது. 
அன்புடன், 
அப்சரா.

16 comments:

athira said...

சூப்பர் அப்சரா, கலக்குறீங்கள். வாழ்த்துக்கள்.

ஸாதிகா said...

aahaa..arumaiyaana cake

Asiya Omar said...

நான் ரொம்ப நாளாக செய்யனும் என்று நினைச்சிட்டு இருக்கிற குறிப்பு.பகிர்வுக்கு நன்றி.

apsara-illam said...

வாங்க வாங்க அதிரா...,எம்மாடி எவ்வளவு நாளாச்சு உங்களிடம் பேசி..... அதுவும் என் பக்கத்தில் உங்களை பார்ப்பதில் எனக்கு ரெட்டிப்பு மகிழ்ச்சிதான்.மிகவும் நன்றி அதிரா.

அன்புடன்,
அப்சரா.

apsara-illam said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஸாதிகா அக்கா.தங்கள் வருகைக்கும் பதிவுக்கும்,பதிவுக்கும் மிக்க நன்றி அக்கா.

அன்புடன்,
அப்சரா.

apsara-illam said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஆசியா அக்கா, எப்படி இருக்கீங்க?உங்கள் வரவு கண்டு எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.ஆமாம் அக்கா... ஒரு முறை என்னிடம் இதை செய்ய தெரியுமா என்று கேட்டீர்கள். அதன் பிறகே இந்த குறிப்பை செய்து வெளியிட தோன்றியது.வந்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றி ஆசியா அக்கா.

அன்புடன்,
அப்சரா.

Jaleela Kamal said...

ரவ்வா அடை ரொம்ப சூப்பரா இருக்கு, எனக்கு ரொம்ப பிடித்தது,

நாங்கள் சற்று வேறு முறையில் செய்வோம்

apsara-illam said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஜலீலா அக்கா...,தங்களது வருகை எனது இல்லத்திற்க்கு பெருமை....
அதிலும் உங்கள் கருத்து எனக்கு மிக்க மகிழ்ச்சி.
நன்றி அக்கா....

அன்புடன்,
அப்சரா.

Anonymous said...

dumroot ennaku romba pidikum enga ooril saapitu erukean

apsara-illam said...

இந்த தம்ரூட்டை யாருக்குதான் பிடிக்காது சொல்லுங்க...இதற்க்கென்று ஒரு தனிசுவைதான் மஹா....
நன்றி.

அன்புடன்,
அப்சரா.

apsara-illam said...

இந்த தம்ரூட்டை யாருக்குதான் பிடிக்காது சொல்லுங்க...இதற்க்கென்று ஒரு தனிசுவைதான் மஹா....
நன்றி.

அன்புடன்,
அப்சரா.

ridaa said...

ரவ்வாடை செய்முறை விளக்கம் தெளிவாக உள்ளது.இதனை கிராம் அளவில் கூற முடியுமா?எங்கள் வீட்டு முறையில் முட்டை அளவு குறைவு.1 படிக்கு 12.இதில் முட்டை 2 1/2 டம்ளர்க்கு 12 முட்டை என்று உள்ளது. தங்களால்முடிந்த பொழுது விளக்கம் தரவும்
அன்புடன்
ரிதா

apsara-illam said...

ரிதா...,இதில் நான் கொடுத்த அளவை கிராம் கணக்கில் சொல்ல வேண்டுமானால் 500 கிராம்(அரைகிலோ)ரவா....
இதற்க்கு முட்டை தான் கூடுதல் சுவையை கொடுக்கும் எனவே எங்கள் கூட தான் முட்டை ஊற்றுவார்கள்.ஒரு கிலோவிற்க்கு அல்லது ஒரு படிக்கு 23 அல்லது 25 முட்டை ஊற்றினால் மிகவும் நன்றாக இருக்கும்.எங்கள் வீட்டு முறை இதுவே.... நிச்சயம் டேஸ்ட்டில் நல்ல வித்தியாசம் இருக்கும் முயன்று பாருங்களேன்....ரிதா....

அன்புடன்,
அப்சரா.

ridaa said...

நன்றி அப்சரா.இன்ஷா அல்லாஹ் விரைவில் முயற்சி செய்கிறேன்.
அன்புடன்
ரிதா

ஹுஸைனம்மா said...

இப்பதாம்ப்பா ஃபர்ஸ்ட் டைம் வர்றேன் இங்கே. நான் பாத்த முத ஐட்டமே சூப்பராத் தெரியுது!! ஒருக்காச் செஞ்சு பாத்துடணும்.

apsara-illam said...

வாங்க ஹுஸைனம்மா...,உங்களை இல்லத்தில் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி.வருக வருக என வரவேற்கிறேன்.
குறிப்பை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றிங்க..

அன்புடன்,
அப்சரா.

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out