குழந்தைகள் பிறந்த கொஞ்ச நாட்களிலேயே அவர்களின் உடம்பிற்க்கு ஏதேனும் செய்து கொண்டே இருக்கும்.கொஞ்ச நாள் நன்றாக இருப்பார்கள்.ஆஹா..,இப்போதுதான் நன்றாக இருக்கிறாள்(ன்).உடம்பு கூட பூசினாற்போல் சதைபோட்டுள்ளது என்று பெருமையாக சொல்லவேண்டாம்.நினைத்தாலே போதும்.அடுத்த ரெண்டு நாளில் குழந்தைகளுக்கு ஏதாவது உடம்புக்கு வந்துவிடும்.அது காய்ச்சலாகவும் இருக்கலாம்.வாந்தி பேதியாகவும் இருக்கலாம்.
இதில் சளி பிடிப்பதுதான் மிகவும் அதிகம்.என்னதான் குழந்தையை நாம் பார்த்து பார்த்து வைத்துக் கொண்டாலும் சளிபிடிப்பதை நம்மால் தவிர்க்க முடிவதில்லை.அதிலும் குறிப்பாக வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு....ஆனால் அதன் வீரியத்தை குறைக்கலாம்.சளி பிடித்தவுடனே சில கைவைத்திய முறைகளை கைய்யாண்டால் உடனே சரியாகும்.அதற்க்கான கை வைத்திய முறையை இங்கே தந்துள்ளேன்.
இன்று பல இளதாய்மார்கள் அருகில் பெரியவர்கள் இல்லாமல் என்ன செய்வதென்று தெரியாமல் அவதிபடுகின்றார்கள். அவர்களுக்கே இந்த குறிப்பு.அனுபவசாலிகளுக்கு இதெல்லாம் ஜூ ஜூபியாகவே இருக்கும்.சரி…. இப்ப என்ன செய்யலாம் என்று பார்ப்போமா…?
துளசி இலை _ 10
ஓமம் _ ½ ஸ்பூன்
பூண்டு _ 1 பல்
மிளகு _ 4
துளசி இலையை நன்கு நீரில் அலசி விட்டு மற்ற பொருட்களுடன் ஒன்றாக சேர்த்து இடித்து (15 மிலி தண்ணீரையும் சேர்த்து ) நைசாக ஆனதும் சாறு பிழிந்து வடிக்கட்டி சிறிது தேனை அதனுடன் நன்கு கலந்துவிட்டு குழந்தைகளுக்கு காலையில் வெறும் வயிற்றில் கொடுக்க வேண்டும்.குழந்தைகள் கத்துவார்கள்.இருப்பினும் தண்ணீரோ,பாலோ ஒரு அரைமணிநேரத்திற்க்கு கொடுக்காமல் இருக்க வேண்டும்.
சில குழந்தைகள் அழுவதிலேயே வாந்தி போல் சளியெல்லாம் கக்கி விடுவார்கள்.தோண்டையில் சிக்கியிருக்கும் சளியெல்லாம் வெளியே வந்து நல்ல ரிலீஃபாக இருக்கும்.அல்லது மோஷனில் சளி வெளியாகும்.
இது நான்கு மாத குழந்தைகளிலிருந்தே கொடுக்கலாம்.பயப்படவேண்டாம்……தொடர்ந்து மூன்று நாட்கள் மட்டுமே கொடுத்தால் போதும்.அதன் பிறகு நிச்சயம் சரியாகியிருக்கும்.
இது என் மூன்று குழந்தைகளுக்கும் நான் கொடுத்துவந்த மருந்து.நல்ல பலனளிக்கும்.இப்போது நான் ஊருக்கு போனாலும் என் கொலுந்தரின் பைய்யனுக்கும் நான் தான் இந்த மருந்தை கொடுப்பேன்.எனது இல்லத்தின் கை கண்ட மருந்து இதுதான்.
எனவே தான் இதை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
** பெரியவர்களுக்கும் இது உகந்ததே… வெறுமெனவே துளசி இலையை காலையில் மென்று சாப்பிடலாம்.**
அன்புடன்,
அப்சரா.
21 comments:
சளி மருந்து அருமை அப்சரா! ஆனா வெளிநாட்டில் துளசி இலை கிடைப்பதுதான் கஷ்டம். நாங்கள் கஷாயம் செய்துதான் கொடுப்போம். பச்சை பூண்டு வேறு சேர்க்கிறீர்களே.. குழந்தைகளுக்கு வாய் தாங்குமா அப்சரா?
முதல் ஆளாக வந்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றி அஸ்மா...
இது ரொம்ப நல்ல மருந்து மா....
பூண்டின் காரம் தெரியாமல் இருக்கதான் தேன் கலந்து கொடுப்பது.
சளியினால் குழந்திஅயின் வயிறு அப்செட் ஆகி இருக்கும் பசி இருக்காது. இவற்றையெல்லாம் நீக்குவதற்க்குதான் ஓமம்,பூண்டு எல்லாம்.
அன்புடன்,
அப்சரா.
Aaahaa!!! unga blog pathivugal super... vaazhthukkal... inthu thaan en muthal varugai... adikadi varuvein.... romba arumai... super...
Reva
ஹாய் தோழி ரேவா...,எனது இல்லத்தில் உங்களை.... வருக வருக என வரவேற்க்கிறேன்.
தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.
அன்புடன்,
அப்சரா.
நல்ல தகவல்கள்.
நானும் சிறிதுகாலம் சின்ன வயதில் துளசி இலை காலையில் சாப்பிட்டு வந்தேன், பின்பு அறிந்தேன்... அது மலட்டுத்தன்மையை உருவாக்கும் என... ஏன் வம்பு என விட்டுவிட்டேன்(உண்மை, பொய் தெரியவில்லை).
நல்ல நல்ல தகவல் அப்சரா.
அவசியம் அறியவேண்டியவைகள்..
வீட்டு வைத்தியம் அருமை
வாங்க அதிரா.... தங்கள் கருத்துக்கு நன்றி...
துளசியில் இப்படி ஒரு சைட் எஃபெக்ட் இருக்கும்னு எனக்கு தெரியாது அதிரா.... நாங்க எங்க வீட்டில் பயன்படுத்தியவரைக்கும் நல்ல பலனைதான் தந்துள்ளது.நீங்கள் சொன்னதை நானும் ஊரில் பாட்டிகளிடம் விசாரிச்சு பார்த்தா போச்சு....
அன்புடன்,
அப்சரா.
மலிக்கா அவர்களே.... வாங்க....
தங்கள் கருத்து கண்டு மகிழ்ச்சி.
நன்றி.
அன்புடன்,
அப்சரா.
கருத்து சொன்னமைக்கு மிகவும் நன்றி ஜலீலா அக்கா....
அன்புடன்,
அப்சரா.
அருமையான மருந்து,சளியால் மிகவும் கஷ்டப்பட்ட என் குழந்தைக்கு இந்த மருந்து கொடுத்தபின் சளி குறைந்துள்ளது.மிக்க நன்றி அக்கா
நல்ல மருந்து
Assalamu alaikum i have 6 month baby avaluku 2month a sali... ipo juram vera vanthuduchu so enna panrathunay therila...intha situation la naa intha medicine a kudukalama???
வெளிநாட்டில் துளசி கிடைக்கவில்லை தோழியே. துளசிக்கு இல்லாமல் கொடுக்கலாமா.
வ அலைக்கும் ஸலாம் மா... ஆறு மாத குழந்தைகளுக்கும் ஏற்ற மருந்துதான் இது..... அதாவது சளி வைக்க ஆரம்பிக்கும் போதே இந்த மருந்து கொடுக்கும் போது நல்ல பலன் இருப்பதை பார்க்கலாம்.....அதிகப்படியான ஜூரம் இருக்கும் போது டாக்டர்கிட்ட காண்பிக்கவும்.... நெஞ்சு சலி வைக்காமல் தடுக்க இந்த மருந்தை கொடுப்போம்... அதிகப்பட்சமான திணறும்படியான சளி இருப்பின் டாக்டரிடம் நீங்கள் காண்பிப்பதே சிறந்தது தோழி...
துளசியுடன் கூடிய இந்த காம்பினேஷன் தான் கொடுப்பதற்கு ஏற்றதாக இருக்கும் தோழி... அப்படி இல்லையா வெறும் இருமலாக தொண்டையில் சளி சிக்கி கொண்டு இருந்தால் ஒரு வயது குழந்தையாக இருப்பின் ஒரு ஸ்பூன் தேனில் பட்டை பவுடர் இரண்டு பின்ச்,மஞ்சள்த்தூள் ஒரு பின்ச் நன்கு ஒன்று சேர கலந்து கொடுங்கள்.இதுவும் நல்ல மருந்து....
20 நாள் குழந்தைக்கு என்ன வைத்தியம்???
இந்த வேண்டாத பயம் ஆண்களுக்கு மட்டுமே. பந்தமுள்ள நாட்களில் ஆண்கள் துளசியை இலையைத் தவிர்ப்பது நல்லது.
hi absara entha marunthai evvalavu alavu kodukanum
4month pappaku kodukkalama entha marunthu evlo alavu kodukanum.
அருமையான கைவைத்தியம்.,
3 மாத குழந்தைக்கு பயன்படுத்தலாமா.!!!!
Post a Comment