தேவையான பொருட்கள்
முட்டை _ இரண்டு
உதிரிகார்ன் _ கால் கப்
வெங்காயம் _ இரண்டு
தக்காளி _ சிறியதாக ஒன்று
மிளகாய்த்தூள் _ 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் _ 1/2 தேக்கரண்டி
மஞ்சள்த்தூள் _ 1/2 தேக்கரண்டி
எண்ணெய் _ 3 தேக்கரண்டி
மல்லித்தழை _ சிறிதளவு
*** செய்முறை ***
வெங்காயம்,தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
கார்னையும் கழுவி வைத்துக் கொள்ளவும்.
ஒரு வானலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும்,நறுக்கிய வெங்காயம் தக்காளிகளை சேர்த்து சிறிது உப்பு போட்டு நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
நன்கு வதங்கியதும்,தூள்வகைகளை சேர்த்து ஒரு நிமிடம் மிதமான தீயில் வைத்து வதக்கவும்.பிறகு கார்ன் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
பின்பு முட்டையை உடைத்து ஊற்றி ஒரு ஸ்பூன் தண்ணீயும் தொளித்து ஒரு கிளறு கிளறி விட்டு அப்படியே குறைந்த தீயில் வைத்து விட்டு மறுபடியும் கிளறி விடவும்.இபடியே இரண்டு மூன்று முறை கொஞ்சம் விட்டு விட்டு கிளறினால் உதிரியாக வந்து விடும்.
பிறகு உப்பு சரி பார்த்து மல்லிதழையை பொடியாக நறுக்கி தூவி அடுப்பிலிருந்து இறக்கவும்.சுவையான அண்டா,கார்ன் புர்ஜி தயார்.
இது குப்புஸ்,சப்பாத்தி இவைகளுக்கு தொட்டு கொள்ள மிகவும் நன்றாக இருக்கும்.
இதை பிரட்டின் நடுவே வைத்து டோஸ்ட் செய்தும் சாப்பிடலாம்.
அன்புடன்,
அப்சரா.
12 comments:
வித்தியாசமாக உள்ளது.சூப்பர்.வேர்ட்வெரிபிகேஷனை நீக்கி விடுங்களேன் அப்சரா
தங்கள் கருத்து கண்டு மிக்க மகிழ்ச்சி ஸாதிகா அக்கா.... தாங்கள் சொன்னபடி நீக்கி விட்டேன்.எனக்கு தெரிவித்தமைக்கு மிகவும் நன்றி அக்கா.... இன்னும் ஏதேனும் நான் மாற்றி கொள்ளவெண்டும்படி இருந்தால் தெரிவியுங்கள்.எனக்கு உபயோகமாக இருக்கும் அக்கா...
நன்றி.
அன்புடன்,
அப்சரா.
ஏற்கனவே பாத்த ரெசிப்பிகளா போடறீங்களே அப்ஸரா? புதுசா போடுங்க என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். :)
அப்புறம் உங்க வீட்டுல பசங்களைத் தூங்கவைக்க ஃபரீஜ் அண்ணாவே தாலாட்டு பாடி தூங்கவச்சுடுவாரோ? கொஞ்சநாள் பொறு தலைவா-வை கேட்டேன்,அங்கே! :):)
ஹாய் மஹி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பா....
ஒவ்வொன்றும் சற்றே வித்தியாசபடும்.அதிலும் கொஞ்சம் சிம்பிளான உணவுகளை கொடுக்கலமே என்றுதான் மகி...
அப்புறம் என்னவரின் பாடலை எங்கே கேட்டீர்கள்? எனக்கு மிகவும் சர்ப்ரைஸாகவும்,சந்தோஷமாக இருந்தது.ம்ம்ம் தாலாட்டும் நல்லாவே பாடுவார்...
மற்ற பாடல்களை கேட்கவில்லையோ..?
நன்றி மகி...
அன்புடன்,
அப்சரா.
என்னது புர்ஜியா...பேரே வித்தியாசமா இருக்கே..!!
ஆமாம்...சகோதரி ஜெய்லானி.... ஹோட்டலில் ஒருமுறை பனீர் புர்ஜி என்று ஒரு டிஷ் இருந்தது.நாண் க்கு தொட்டு கொள்ள ஏதுவான ஒன்று.அதையே நான் கார்ன் சேர்த்து செய்து பார்த்துள்ளேன்.
அதே போல் முட்டையிலும் ட்ரை செய்ய கூடாதுன்னு செய்து பார்த்தேன்.எனவே இது அண்டா,கார்ன் புர்ஜி.... எப்புடி...?(முடியல.... அப்படின்னு சொல்றீங்களா...?)
அன்புடன்,
அப்சரா.
//.சகோதரி ஜெய்லானி.... //
முடியல...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஏன் மா...., என்னாச்சு..?ஏதும் சொல்லகூடாததை சொல்லிட்டேனோ?????
அன்புடன்,
அப்சரா.
அப்ஸரா,ஜெய்லானி என்பது பெண் பெயர் என்று தவறா நினைச்சிருக்கீங்க! ஜெய் அண்ணா, என்னன்னு தெளிவாச் சொல்லாம 'அவ்வ்வ்வவ்வ்வ்'னு சொல்லிட்டுப்போனா எப்பூடி? நல்ல காமெடி!
//என்ன தோழிகளே... பக்கத்தை படிச்சிட்டு நிறையோ,குறையோ சொல்லிட்டு போங்க சரியா..//அது சரி,உங்க பக்கத்துக்கு லேடீஸ் மட்டும்தான் வருவாங்க என்று நினைச்சா எப்படி?:)
இதே ரெசிப்பி நீங்க அறுசுவைல குடுத்திருந்த ஞாபகம்,அதான் அப்படி சொல்லிட்டேன். தவறா நினைக்க வேணாம் அப்ஸரா!
/அப்புறம் என்னவரின் பாடலை எங்கே கேட்டீர்கள்? / உங்க ப்ரொபைல் பார்த்தேன்,அங்கே இருந்து அவர் ப்ளாக் போனேன். :)
மத்த பாடல்கள் இன்னும் கேக்கலை.
என் நெற்றி கண்ணை திறந்து வைத்து விட்ட மஹிக்கு எனது நன்றி....
சகோதரர் ஜெய் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன்.எனது ஊர் கார பெண் ஒருவரின் பெயர் ஜெய்லானி.அந்த நினைவில் பெண் என்றே நினைத்துவிட்டேன்.
\\\அது சரி,உங்க பக்கத்துக்கு லேடீஸ் மட்டும்தான் வருவாங்க என்று நினைச்சா எப்படி?:)///
தவறுதான்.... மாற்றிவிடுகிறேன் மஹி....இது போன்ற தவறுகளை யாராவது சுட்டி காட்டினால்தானே எனக்கு தெரியும்.... உங்களுக்கு எனது நன்றிகள் பல.....
அன்புடன்,
அப்சரா.
//என் நெற்றி கண்ணை திறந்து வைத்து விட்ட மஹிக்கு //
பாத்துங்க..முதல்ல எரியரது அவங்களாதான் இருக்கப்போறாங்க ஹா..ஹா..
//மன்னிப்பு கேட்டுகொள்கிறேன்.//
அடடா இதெல்லாம் ரொம்ம்ம்ம்ம்ம்ப பெரிய வார்த்தை....விடுங்க :-)
நம்ம தமிழ்நாட்டிலதான் ஒரு சில இடங்களில் பெண்ணுக்கு இந்த பேர் இருக்கு ..மற்றபடி உலகம் முழுக்க ஆண் பெயர்களிலே அதிகம் :-)
Post a Comment