Saturday, January 29, 2011

துபாயின் வானிலை மாற்றம்


நான் இந்த துபாயில் காலடி எடுத்து வைத்து  பத்து வருடங்கள் முடிவடைந்து விட்டன....
இங்கு நான் வந்த புதிதில் இருந்ததற்க்கும்,இப்போது இருப்பதற்க்குமே.... பலவித மாற்றங்களையும் இதுவரை பார்த்து கொண்டிருக்கின்றேன்.இந்த அமீரகம்... மிகவும் வேகமான முறையில் முன்னேறி வந்ததும்,சென்ற வருடம் ஏற்பட்ட வர்த்தக நிலவரத்தினால் துபாய் கொஞ்சம் அதிகமாகவே தளர்ந்து போனதும் அனைவரும் அறிந்ததே...
அதே போல் இந்த பாலைவனம் பகுதி சோலைவனமாக மாறிய பொழுதிலும்,திடீர் திடீரென ஏற்படும் வானிலை மாற்றங்கள்,அதனால் ஏற்படும் சில பாதிப்புகளும் அவ்வபோது நடப்பதுண்டு.அசுரத்தனாமான காற்றுகள் அடிக்கும்.சில நேரம் தொடர் மழையினால் தண்ணீர் வடிவதற்க்கு சரியானதொரு ஓட்டம் இல்லாமல் வெள்ளகாட்சியாக கூட காட்சியளிக்கும்.
 பனிக்காலம் வந்தாலோ..... விடியற்காலையில் பக்கத்தில் இருக்கும் கட்டிடமே தெரியாத வண்ணம் பனியால் எங்கும் சூழ்ந்திருக்கும்.இரவு பத்து மணிக்கு மேல் கூட சில நேரங்களில் கார் ஓட்டுபவர்களுக்கு தனக்கு முன்பு செல்லும் கார் தெரியாத வண்ணம் இருக்கும்.இதனால் நிறைய ஆக்ஸிடெண்ட் எல்லாம் நான் பார்த்து அனுபவபட்டதுண்டு.
இவை மட்டுமா....? வெயில் காலம் வந்தால் அது மிக பெரிய கொடுமையாக இருக்கும்.போகும் இடமெல்லாம் ஏஸி.... காரிலும் ஏஸி என்பவர்களுக்கே சிறிது நேரம் வெளியில் நிற்ப்பது தாங்க முடியாத அளவிற்க்கு இருக்கும்.ஆனால் நம் கண் முன்னே கட்டிட வேலையில் ஈடுபட்டவர்களை பார்க்க வேண்டுமே.... அல்லாஹு... மிகவும் பரிதாபமாக இருக்கும்.ஓய்வு நேரங்களில் அவர்கள் அப்படியே தலையில் துணியை போட்டு கொண்டு சுருண்டு தான் படுத்திருப்பார்கள்.
இப்படி ஒவ்வொரு மாற்றங்களிலும் ஒவ்வொரு விதமான மாற்றங்கள்,அனுபவங்கள்.
இதுவெல்லாம் இறைவன் நம்மை பார்த்து  “ஏய்... மனிதா..., தான் என்று அகங்காரத்தோடு ஆடாதே..... உன்னை சுற்றி இத்தனை விதமான இயற்க்கை சீற்றங்கள் நேருவதற்க்கான வாய்ப்புகள் உண்டு” என்று சொல்வது போன்று இருக்கும்.
 இவ்வளவும் ஏன் சொல்கிறேன் என்கிறார்களா...? காரணம் இருக்கின்றது.

நேற்றைய தினம்( 28 ம் தேதி வெள்ளிகிழமையன்று) எங்கள் குடும்பமும்,நண்பரின் குடும்பமும் சேர்ந்து மதியம் ஒன்றரை மணியளவில் ஆப்ரா என்று அழைக்கப்படும் boat,மற்றும் ship-ல் பயணிக்கும் இடத்திற்க்கு சென்றோம்.
அது ஒரு அழகான இடம்.கிளைமேட் நன்றாக இருக்கும் போதுதான் அங்கெல்லாம் போய் நன்றாக enjoy பண்ண முடியும்.எனவே நாங்களும் அந்த இடத்திற்க்கு போய் ஒரு வருடத்திற்க்கு மேலாக ஆகின்றது என்றே சென்றோம்.குளிரான காற்றாக இருந்து கொண்டிருந்தது.
ஒரு சிறிய  boat ஐ  எங்களுக்கு மட்டுமே என பேசி எடுத்து கொண்டு ஏறி அமர்ந்து ஒரு பத்து நிமிடம் நல்லா ஜாலியாக இருந்தோம்.

ஒரே பாட்டு,ஆட்டம் என குழந்தைகளும்,என் கணவர்,அவர் நண்பர்கள் அவர்கள் குழந்தையினர் எல்லாம் ஜாலியாக இருந்தனர்.boat -ம் நல்ல வேகமெடுத்து போய்கொண்டே இருந்தது.

போட் செல்ல செல்ல தூரத்தில் கருமையான மேகம் சுழன்று புகை மூட்டதோடு இருப்பதை கவனித்தோம். என்ன இது? அங்கே தீ விபத்து ஏதும் ஏற்பட்டுள்ளதா...? இல்லை மழை வரும் அறிகுறியா என்று எண்ணி பேசி கொண்டிருக்கும்போதே.... எங்கள் போட்டை நோக்கி பலமான காற்று வீசியது பாருங்க.... மண் அள்ளி எல்லோர் முகத்திலும் வீசியது.தண்ணிரின் துள்ளலை பார்க்கணுமே....(சுபஹானல்லாஹ்)அதனால் boat ல் ஏற்பட்ட ஆட்டம் வேறு.... எல்லோர் அடிவயிற்றிலும் ஒரு கலக்கம் ஏற்பட்டு விட்டது.குழந்தைகளெல்லாம் அழ ஆரம்பித்து விட்டன.அடுத்த சில நொடிகளில் அப்படியே அந்த இடமே இருள் சூழ்ந்தது போன்ற ஒரு நிலை.
என்ன செய்வதென்றே புரியாமல் தவிக்கும் நிலை.குழந்தைகளில் என் பெரிய பையன் தான் பெரியவன்.அவன் பயப்படவே இல்லை. “ அம்மா.... இதைதானே நேச்சுரல் கேலமிட்டீஸ் என படித்திருக்கின்றேன்.இப்போது அதை நேரில் பார்த்துவிட்டேன்.இதை பத்தி இன்னும் நல்லா இப்போது எழுதலாம் அம்மா...”என்றான்.இது இப்ப ரொம்ப முக்கியம் டா என்று ஒரு நிமிடம் நான் நினைத்தாலும்,இதையும் தைரியமா சமாளிக்கணும்.பாசிட்டிவ்வா நினைக்கணும்னு நம்ம சொல்லி கொடுப்பதெல்லாம் வொர்க்கவ்ட் ஆகுதேன்னு மனசுக்குள் ஒரு பக்கம் சந்தோஷம்.ஆனால் அப்பொழுதுள்ள சூழ்நிலையில் முழுதாக வெளிகாட்டிக்க முடியாமல் “ வெரிகுட் செல்லம்” என்று ஒரு வார்த்தையில் சொன்னேன்.மற்ற குழந்தைகளுக்கும் தைரியம் சொன்னான்.boat ஐ boat டிரைவர் நிறுத்தி கட்டியும் விட்டார். மெதுவாக ஓட்டி கொண்டு ஒரு ஓரத்தில் அந்த
இங்கே இறங்கி மேலே போனால் ஏதும் டாக்ஸி கிடைக்குமா என்று விசாரித்தோம்.கொஞ்சம் நடந்து போனால் கிடைக்கும் என்றார்கள்.இப்படியே பேசி கொண்டிருக்கும் போதே நாங்கள் இருக்கும் இடத்தை தாண்டி அந்த அசுர காற்று நகர்ந்து கொண்டிருந்தது.இருளும் விலக ஆரம்பித்தது.இருந்தாலும் இனி இந்த போட்டில் பயணிப்பது சரி வராது என்று முடிவெடுத்து இறங்கி டாக்ஸி பிடித்து எங்கள் கார் இருக்கும் இடத்தை நோக்கி வந்தோம்.
ரோடெல்லாம் பார்க்கணுமே.... மரம் விழுந்திருக்கின்றது.ஆடம்பரமான பெரிய விளம்பர தகடுகளெல்லாம் காரின் மேலெ விழுந்து கிடக்கின்றன..... இப்படியே ஒவ்வொரு இடமாக சேதபடுத்திகொண்டே அந்த காற்று சென்று கொண்டிருந்தது.ஏதோ ஆங்கில படம் ஒன்றில் இது போன்ற காட்சிகள் பார்த்த நினைவுதான் அப்போது வந்தது.எங்கெங்கே... அடுத்தது சுனாமிதானோ... என்று மனதிற்க்குள் என்னன்னவோ எண்ணங்கள்...ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தாச்சுன்னு வச்சிக்கங்க....
இந்த சம்பவம் எங்களை பொருத்தவரை மரணபயத்தைதான் ஏற்படுத்தியது என்பேன். வாழ்க்கையில் மறக்கமுடியாத நிகழ்ச்சி.எங்களுக்கெல்லாம் ஒரு பாடம்ன்னு தான் எடுத்துக்க முடிஞ்சது.
இதோ இன்று தைரியமாக இருந்த என் மகனுக்கும்,அழுது கொண்டே இருந்த என் மகளுக்கும் காய்ச்சல் வந்து விட்டது.என்னவென்று சொல்ல....? இது தேவையா... இது தேவையா... -ன்னு வடிவேலு ஸ்டைலில் முகத்துக்கு நேரே விரலை காட்டி கேட்டு கொண்டேன்.ஹூம்...
எல்லாவற்றிற்க்கும் அல்லாஹ் போதுமானவன்....

அன்புடன், 
அப்சரா.

14 comments:

Jaleela Kamal said...

அப்சாரா நேற்று
ஜும்மா தொழுதுட்டு ஓதி கொண்டு இருக்கும் போது இந்த காற்று பயங்கரமா வீசியது,
அப்ப தான் தொழுது முடிந்து வந்த என் பையனும் இது , இறைவனின் கோபம் மம்மி, நேச்சுரம் என்றான், பால்கனியில் நின்று பார்க்கவே முடியல நீங்க போட்டிலா?

எப்படின்னு நினைத்தாலே பயமாக இருகு

அன்னு said...

அஸ் ஸலாமு அலைக்கும் வ றஹ்மதுல்லாஹ் அப்சராக்கா,

என் வலைதளத்திற்கு வந்து பின்னூட்டமிட்டதில் மகிழ்ச்சி. உங்க வலைதளத்தையும் நான் இப்பதான் பாக்கிறேன். இந்த பதிவு பயங்காட்டுது. இங்க நாங்க எங்க வெளிய கிளம்பறதுன்னாலும் இணையத்துல வானிலை பார்த்துட்டுதான் கிளம்புவோம். நீங்களும் அப்படியே செய்யுங்க. அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் காப்பாற்றினான். இன்னும் அல்லாஹ் நிசாயம் உதவி செய்வான். பிள்ளைகளை நன்றாய் கவனிக்கவும்.

வ ஸலாம்.

asiya omar said...

முழுவதும் படித்தேன்,நேரில் அனுபவித்த மாதிரியான எழுத்து நடை,முதலில் என்னுடைய பாராட்டுக்கள்.அல் ஐனில் எங்க ஏரியாவில் அவ்வளவாக தெரியலை,நான் மதியம் நல்லா தூங்கி மாலை பின்னேரம் விழித்த பின்பு, மகள் வெளியே பெயிண்டிங் ஒர்க்‌ஷாப் போய்விட்டு வந்து சொன்ன பின்பு தான் எனக்கு இப்படி ஒரு நிகழ்வே தெரியும்.அல்லாஹ் போதுமானவன்.

ஜெய்லானி said...

ஆஹா... அந்த நேரத்துல கடல்லயா நீங்க...சுபஹானல்லாஹ்....!! குறட்டை விட்டு தூங்கி கொண்டு இருந்த நான் சத்தம் கேட்டுதான் வெளியேவே வந்தேன் .... :-))

apsara-illam said...

எனது இல்லத்திற்க்கு வருகை தந்திருக்கும் அன்னு அவர்களே...,உங்களை வருக வருகவென வரவேற்கிறேன்.உங்கள் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி.
நாங்கள் குடும்பத்தோடு வெளியே கிளம்பி ஒரு மாதம் ஆகின்றது சகோதரி.... குழந்தைகள் உடல் நிலையை யோசித்து கொண்டே விட்டுவிடுவோம்.இன்னொரு நண்பர் குடும்பம் வருகை தரவே...குழந்தைகள் எங்காவது வேளியே கூட்டிட்டு போங்களேன் என்று கெஞ்சி கேட்டுகிட்டாங்க....
சரி மாலை நேரம்தான் போகவேண்டாம் எனவே மதியம் நேரம் போய் சீக்கிரமே இருட்டுவதற்க்குள் வீடு வந்து விடுவோம் என்பது ப்ளான்.ஆனால் இப்படி ஒரு சோதனை வரும் என்று சற்றும் நினைத்து கூட பார்க்கவில்லை அன்னு.... (அல்லாஹு அக்பர்)வாழ்க்கையில் எல்லாமே ஒரு பாடம் தானே.... இனி இதுபோன்ற ஒரு தவறை செய்யமாட்டோம் அல்லவா....

அன்புடன்,
அப்சரா.

apsara-illam said...

வாங்க ஜலீலா அக்கா..., அந்த சோக கதையை ஏன் கேக்குறீங்க..... நல்ல படிப்பினை எங்களுக்கு.... நல்லபடியாக வீடு வந்து சேர்ந்தோமே அதற்க்கு அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லிகொண்டிருக்கின்றோம்.

அன்புடன்,
அப்சரா.

apsara-illam said...

தங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றி ஆசியா அக்கா.... அப்ப அல்-அயினில் அவ்வளவாக தெரியவில்லையா...?நல்லதா போச்சு..... இறைவன் எல்லோரையும் இது போன்ற பயங்கரத்திலிருந்து காப்பாற்றுவானாக...

அன்புடன்,
அப்சரா.

apsara-illam said...

சகோதரி ஜெய்லானி இப்படி ஒரு சம்பவம் எங்கள் வாழ்க்கையில் கடைசி மூச்சு வரை மறக்கமுடியாது...
நான் துபாய் வந்த புதிது இதே போல் அசுரகாற்று வீசி கொண்டிருந்தது.நாங்கள் அப்ப இருந்தது ground floor. நானும் உங்களை போல் தான் மதியம் படுத்திருந்தவள் தடார்,படார் என சத்தம் கேட்கவே ஜன்னலை எட்டி பார்த்தேன்.பலகைகள் சும்மா பறந்து கொண்டிருந்தது.குப்பை நிறைய சுமந்து கொண்டிருந்த வண்டி ஒன்று தட தடவென ஓடுச்சே பார்க்கலாம்.இப்படி ஒரு காற்றான்னு ஆச்சர்ய பட்டேன்.ஆனால் அதன் வேகத்தை உடல் அளவால் இப்போதுதான் உணர்கிறேன்.சுபஹானல்லாஹ்.... காற்றுக்கு,நீருக்கெல்லாம் எவ்வளவு வேகத்தை அல்லாஹு தந்திருக்கின்றான்.மனிதர்களுக்கு இவையெல்லாம் அவ்வபோது அச்சுறுத்தி மரணபயத்தை ஏற்படுத்தி கொண்டுதான் இருக்கின்றது.அல்லாஹு அக்பர்.

அன்புடன்,
அப்சரா.

Mahi said...

http://en.wikipedia.org/wiki/Tornado
இங்கே ஒரு சில இடங்களில் டொர்னடோ வந்ததை டிவி-ல பாத்திருக்கேன்..உங்க ஊர்ல வந்ததும் இதுவா? எப்படியோ உங்களுக்கு எந்த பாதிப்பும் வரலையே,அதே போதும்!

shamima said...

அப்சரா,படித்தவுடன் கொஞ்சம் பயமாதான் இருக்கு.சவுதியிலும் நல்ல மழை &காற்று.ஜித்தாவில் பயங்கர வெள்ளம்.ஊரில் மழையை ரசித்தால் இங்க மழையை பார்த்தால் பயமா இருக்கு.பிள்ளைகளை நல்லா பார்த்துகோங்க.

apsara-illam said...

என்ன பேரோ தெரியல மஹி...
ஏதோ தப்பிச்சோம் பிழைச்சோம்னு வீடு வந்து சேர்ந்தாச்சு....இங்கே இந்த மாதிரி சில நேரங்களில் வந்து பயமுறுத்திட்டு போகும்.ரஜினி சொல்ற டயலாக் மாதிரிதான்.... எப்ப வரும் எப்படி வரும்னு யாருக்கும் தெரியாது....(கடவுளை தவிர...)ஆனால் வந்துட்டா ஒரு ஆட்டம் காட்டிட்டு தானே போகுது....

அன்புடன்,
அப்சரா.

apsara-illam said...

ஷமீமா...,நான் கூட கேள்விப்பட்டேன்.சவுதியில் நல்ல மழையும் காற்றுமாக இருக்குன்னு....
நம்ம வளைகுடா நாடுகளில் தான் தண்ணீர் ஒழுங்காக ஓட கூட வசதி இல்லாம வெள்ளகாடா காட்சி அளிக்குமே.... ரோடெல்லாம் தனலில் கூட தேங்கி நிற்க்குமே.... பார்த்து ஜாக்கிரதையாக இருந்துக்கங்க....
என்னவோ சொல்றாமாதிரி (அதான் வம்பை விலை கொடுத்து வாங்கியது போல்...)போய் குழந்தைகளுக்கு உடம்புக்கு வந்ததுதான் மிச்சம்.இன்று கொஞ்சம் நல்லபடியாக இருக்காங்க....

அன்புடன்,
அப்சரா.

Bharath said...

Romba nalla irunduchu .... Appadia anniki experiencea supera ealuthirukeenga ..

apsara-illam said...

அடடே...,எனது இல்லத்தில் பரத்தின் வருகையா....,மிக்க சந்தோஷம்.
தங்களது கருத்துக்கும் மிக்க நன்றி பரத்...

அன்புடன்,
அப்சரா.

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out