Wednesday, January 26, 2011

சிம்பிள் இடியாப்பம் அடை(இனிப்பு)





தேவையான பொருட்கள்

 இடியாப்பம்                          _      மூன்று    
முட்டை                                  _      ஒன்று
 சீனி                                           _      7 தேக்கரண்டி
உப்பு                                           _      2 பின்ச்
ரெட் ஃபுட் கலர்                       _     சிறிது
ஏலக்காய் பவுடர்                   _     1/4 ஸ்பூன்
 நெய்                                            _    சுடுவதற்க்கு

*** செய்முறை ***


இடியாப்பத்தோடு முட்டையை உடைத்து ஊற்றி அதிலேயே சீனி,ஃபுட் கலர்,உப்பு,ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு சீனி கரைந்து எல்லாம் ஒன்று சேர பிசைந்து கொள்ளவும். 

தோசை தவாவை அடுப்பில் வைத்து ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடு வந்ததும்,ஒரு மாவு கரண்டி நிறைய கலவையை எடுத்து மெதுவாக ஊற்றி மெல்லிதாக இல்லாமல் லேசால பரத்தி விட்டு  அடுப்பை குறைந்து தீயில் வைக்கவும்.
அடி நன்கு சிவந்ததும் அகலமான தோசைதிருப்பியாலும், தேவைபட்டால் மற்றுமொரு கரண்டியையும் கொண்டு மெதுவாக திருப்பவும்.(திருப்பும் போது பிய்ந்து விடும் கவனமாக திருப்புதல் வேண்டும்)
அதை சுற்றி ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றவும்.
இரண்டு பக்கமும் நன்கு சிவந்ததும் எடுத்து விடவும்.

ஓரமெல்லாம் மொறு மொறுவென்று சாப்பிட சுவையாக இருக்கும்.
இந்த அளவில் இரண்டு அடைகள் சுடலாம்.
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.ரசித்து சாப்பிடுவார்கள்.


அன்புடன், 
அப்சரா.

7 comments:

அஸ்மா said...

இதுபோன்று இடியாப்பம் அடை நாங்கள் செய்ததில்லை அப்சரா. ரைஸ் வெர்மிசிலியில் இந்த அடை போன்றே, ஆனா காரமாக சுடுவோம். இதைப் பார்த்தவுடன் ஒருநாள் அந்த ரெசிபி கொடுக்கணும் என்று ஞாபகம் வருகிறது. இடியப்பத்தில் வித்தியாசமான இனிப்பு அடை, நல்லாதான் இருக்கு!

word verification நீக்கிடுங்க அப்சரா. அது கொஞ்சம் எரிச்சல் தரும்.

Unknown said...

ரொம்ப வித்தியாசமா இருக்கு.உதிர்த்து விட்டு இனிப்பு அல்லது காரமா செய்வோம்,இப்படி செஞ்சது இல்லை சீக்கிரமாவே செஞ்சு பார்க்கிறேன்

apsara-illam said...

வாங்க அஸ்மா...,இது சாப்பிட ரொம்ப நல்ல டேஸ்ட்டோட இருக்கும்.
நீங்க சொன்னாமாதிரி ரைஸ் வெர்மிசிலியிலும் இது போன்று செய்யலாம்.காரம் தான் செய்து பார்க்கணும்னு ரொம்ப நாளாக நினைக்கிறேன்.முடியல.... நீங்க செய்ததும் வேணும்னா நான் செய்யுறேன்.
கருத்து பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அஸ்மா...

அன்புடன்,
அப்சரா.

apsara-illam said...

ஷமீமா...,உதிர்த்து விட்டு நாங்களும் இனிப்பு மற்றும் காரம் செய்வோம்.அதை இடியாபப் சோறுன்னு சொல்லுவோம்.இதுவும் ஒருமுறை செய்து பாருங்க ரொம்ப பிடிக்கும்.உங்களுக்கு மட்டும் இல்லை ரீம்மும் விரும்பி சாப்பிடுவாங்க.....
நன்றி ஷமீமா...

அன்புடன்,
அப்சரா.

apsara-illam said...

ஷமீமா...,உதிர்த்து விட்டு நாங்களும் இனிப்பு மற்றும் காரம் செய்வோம்.அதை இடியாபப் சோறுன்னு சொல்லுவோம்.இதுவும் ஒருமுறை செய்து பாருங்க ரொம்ப பிடிக்கும்.உங்களுக்கு மட்டும் இல்லை ரீம்மும் விரும்பி சாப்பிடுவாங்க.....
நன்றி ஷமீமா...

அன்புடன்,
அப்சரா.

Reva said...

pudumaiyaa supera irukku...
Reva

apsara-illam said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ரேவா...

அன்புடன்,
அப்சரா.

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out