தேவையான பொருட்கள்
முட்டை _ இரண்டு
உதிரிகார்ன் _ கால் கப்
வெங்காயம் _ இரண்டு
தக்காளி _ சிறியதாக ஒன்று
மிளகாய்த்தூள் _ 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் _ 1/2 தேக்கரண்டி
மஞ்சள்த்தூள் _ 1/2 தேக்கரண்டி
எண்ணெய் _ 3 தேக்கரண்டி
மல்லித்தழை _ சிறிதளவு
*** செய்முறை ***
வெங்காயம்,தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
கார்னையும் கழுவி வைத்துக் கொள்ளவும்.
ஒரு வானலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும்,நறுக்கிய வெங்காயம் தக்காளிகளை சேர்த்து சிறிது உப்பு போட்டு நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
நன்கு வதங்கியதும்,தூள்வகைகளை சேர்த்து ஒரு நிமிடம் மிதமான தீயில் வைத்து வதக்கவும்.பிறகு கார்ன் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
பின்பு முட்டையை உடைத்து ஊற்றி ஒரு ஸ்பூன் தண்ணீயும் தொளித்து ஒரு கிளறு கிளறி விட்டு அப்படியே குறைந்த தீயில் வைத்து விட்டு மறுபடியும் கிளறி விடவும்.இபடியே இரண்டு மூன்று முறை கொஞ்சம் விட்டு விட்டு கிளறினால் உதிரியாக வந்து விடும்.
பிறகு உப்பு சரி பார்த்து மல்லிதழையை பொடியாக நறுக்கி தூவி அடுப்பிலிருந்து இறக்கவும்.சுவையான அண்டா,கார்ன் புர்ஜி தயார்.
இது குப்புஸ்,சப்பாத்தி இவைகளுக்கு தொட்டு கொள்ள மிகவும் நன்றாக இருக்கும்.
இதை பிரட்டின் நடுவே வைத்து டோஸ்ட் செய்தும் சாப்பிடலாம்.
அன்புடன்,
அப்சரா.