தேவையான பொருட்கள்
மாங்காய் _ சிறியதாக ஒன்று
கலர் பவுடர் _ சிறிதளவு
சீனி _ 6 தேக்கரண்டி
நெய் _ 2 தேக்கரண்டி
முந்திரி _ 6
கிராம்பு _ 2
பட்டை _ சிறிய துண்டு
பட்டை _ சிறிய துண்டு
ஒரு பாத்திரத்தில் மாங்காய் வேகும் அளவிற்க்கு தண்ணீர்எடுத்து கொண்டு அடுப்பில் வைத்து கொதி வந்ததும்,மாங்காயை போட்டு கலர் பவுடரையும்,உப்பு மூன்று சிட்டிகையையும் சேர்க்கவும்.
வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடு வந்ததும்,கிராம்பு,இரண்டு மூன்றாக உடைத்து வைத்திருக்கும் முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து பின் மாங்காயை கொட்டவும்.
உடனே சீனீயையும் சேர்த்து நன்கு மிதமான தீயிலேயே கிளறவும்.
உடனே சீனீயையும் சேர்த்து நன்கு மிதமான தீயிலேயே கிளறவும்.
நன்கு சீனி கரைந்து சுருண்டதும் இறக்கி விடவும்.
சுவையான மாங்காய் இனிப்பு பச்சடி தயார்.
நெய் சாதம்,கோழிகுழம்பு இவைகளுடன் இதையும் செய்து சாப்பிட நன்றாக இருக்கும்.
அன்புடன்,
அப்சரா.





