பெண் எழுத்துக்கான தொடர் பதிவை எழுத அழைத்த ஸாதிகா அக்கா அவர்களுக்கு முதலில் என் மனம்திறந்து நன்றிகள் பல தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வலைப்பூவில் நான் காலடி எடுத்து வைத்து மூன்று மாதங்களே முடிவடைந்த நிலையில் என்னையும் இது போன்ற தொடர் பதிவுக்கு ஸாதிகா அக்கா அழைத்திருப்பது நான் செய்த பாக்கியமே....
இதையும் பெண் எழுத்துக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகின்றேன்.என்னை அழைத்ததற்க்காக இதை நான் சொல்ல வில்லை.ஒரு விஷயங்களை ஏதோ ஒரு மூலையில்,எந்தந்த நாடுகளிலோ இருக்கும் நாம் ஒவ்வொருவரும் நம் மனதை விட்டு நம் எண்ணங்களை திறந்து வெளியிட்டும்,பரிமாறியும் கொள்ளும் அளவிற்க்கு நம் எழுத்துக்கள் ஆங்காங்கே பதிவிடபடுவதைதான் சொல்லி பெருமை அடைகின்றேன்.இந்த அளவிற்க்கு கூட நம் பெண்களால் எழுத முடியுமா..?அவள் எண்ணங்களை இவ்வாறெல்லாம் எழுத்தாக்கி வெளியட முடியுமா? என்றெல்லாம் கேட்பவர்களுக்கு இந்த வலையுலகம் ஒரு நல்ல சான்று.இதுவே நமக்கு கிடைத்திருக்கும் முன்னேற்றம்,வெற்றி என்பது எனது ஆழமான கருத்து.
நிச்சயமாக ஆண் எழுத்துக்கும்,பெண் எழுத்துக்கும் வித்தியாசங்கள் இருக்கின்றனவே.... அதை மறுப்பதற்க்குமில்லை,மாறப்போவதுமில்லை.
ஸாதிகா அக்கா சொன்னது போல் சில வரைமுறைகள்,கட்டுப்பாடுகள், இந்த அளவிற்க்கு எழுதுவதே திகட்டாமல் இருக்கும் என்பது போன்றவை பெண் எழுத்துக்கு நிச்சயம் வேண்டும்.அதுவே அவள் முன்னேற்றத்தோடு என்றென்றும் நிலையாக இருக்க உதவிடும்.
ஆணாக இருப்பினும்,பெண்ணாக இருப்பினும் அவரவர்களின் சுதந்திரம் அடுத்தவர்களை பாதிக்காதவரை அவை சந்தோஷத்தையும்,நன்மையும் தரும்.அதே போன்று தான் ஒவ்வொரு பெண்ணின் எழுத்து சுதந்திரமும்... அடுத்தவர்களுக்கு அது ஊக்கமளிப்பவையாகவும், உற்சாகபடுத்துபவையாகவும்,நல்லதொரு எடுத்துக்காட்டாகவுமே அமைய வேண்டுமே தவிர அடுத்தவர்களை பாதிக்காமலும்,முகம் சுளிக்கும் அளவிற்க்கு இல்லாமல் பார்த்துக் கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமை.அதுவே நிலையானது.
ஏன் இது பெண்ணுக்கு மட்டுமே பொருந்தும்?ஆணுக்கு பொருந்தாதா என்றால் ஒரு ஆணின் எழுத்தை விட ஒரு பெண்ணின் எழுத்து அனைவராலும் கூர்ந்து கவனிக்க படுகின்றது.இதுவே இயல்பான நிலை.அதுமட்டுமின்றி அவளின் எழுத்து அவளை கடந்து வருபவர்களுக்கும்,அவளின் சந்ததினருக்கும் அது ஒரு நல் வழிகாட்டுதலாக அமையும்.இன்றைய கட்டத்தில் அப்படிதான் பல பெண்களின் எழுத்துக்களை பார்க்கின்றோம். பெருமையடைகின்றோம்.இதே போல் நாம் என்றும் ஆழமான எண்ணங்களையும்,கருத்துக்களையும் அழகான வார்த்தைகளோடும்,நடைகளோடும் கொடுத்தோமேயானால்
*** பெண் எழுத்து *** என்றென்றும் பெருமையோடு இன்னும் பல முன்னேற்றங்களை காணும் என்பது நம் ஒவ்வொருவருடைய விருப்பமும்,என் அன்பான கருத்தும் .
ஸாதிகா அக்கா அவர்களின் அழைப்பை ஏற்று எனக்கு தெரிந்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டேன் தோழிகளே... இதை பற்றி யாரேனும் பதிவிட விரும்பினால் எழுதலாம்.
12 comments:
அன்பின் தங்கை அப்சரா,எனது வேண்டு கோளை ஏற்று இத்தனை விரைவாகவும்,அருமையாகவும் படைத்த உங்களுக்கு என் நன்றிகளும்.நல் வாழ்த்துக்களும்.
//ஆணாக இருப்பினும்,பெண்ணாக இருப்பினும் அவரவர்களின் சுதந்திரம் அடுத்தவர்களை பாதிக்காதவரை அவை சந்தோஷத்தையும்,நன்மையும் தரும்.//பொன்னெழுத்துக்களில் பதிக்கப்படவேண்டியவை அப்சரா.
// பெண்ணின் எழுத்து சுதந்திரமும்... அடுத்தவர்களுக்கு அது ஊக்கமளிப்பவையாகவும், உற்சாகபடுத்துபவையாகவும்,நல்லதொரு எடுத்துக்காட்டாகவுமே அமைய வேண்டுமே தவிர அடுத்தவர்களை பாதிக்காமலும்,முகம் சுளிக்கும் அளவிற்க்கு இல்லாமல் பார்த்துக் கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமை.அதுவே நிலையானது// அருமையான வார்த்தைக்கோர்வைகளை தேர்ந்தெடுத்து அழகிய முறையில் கருத்துக்களை வெளியிட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள்.மேன்மேலும் உங்கள் எழுத்துப்பணி சிறக்க என் துஆக்கள்.
அப்சரா மிக அருமையாக நிறைவாக எழுதியிருக்கீங்க.பாராட்டுக்கள்.
சலாம் ஸாதிகா அக்கா...,தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.
தங்கள் கருத்தை கண்டு அதை விட மகிழ்ச்சி அடைந்தேன்.
தங்கள் வாழ்த்துக்கும்,துஆக்கும் மிக்க நன்றி அக்கா...
அன்புடன்,
அப்சரா.
சலாம் ஆசியா அக்கா,தங்கள் கருத்து கண்டு மகிழ்ச்சி.மிகவும் நன்றி அக்கா...
அன்புடன்,
அப்சரா.
நல்ல கருத்துக்களை அருமையாக பதிந்துள்ளீர்கள் அப்சரா. இன்னும் பெண்களின் எழுத்துக்கள் முன்னேறவேண்டுவோம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
சலாம் மலிக்கா அக்கா..,தாங்கள் வந்து படித்து பதிவிட்டதை கண்டு மிக்க மகிழ்ச்சி.
தங்கள் கருத்துக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி அக்கா.
என்றும் அன்புடன்,
அப்சரா.
அப்ஷராவா இப்பூடியெல்லாம் எழுதியிருப்பது? அழகாகச் சொல்லியிருக்கிறீங்க அனைத்தையும்.
அருமையாக உங்கள் கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். உங்களுடைய விருப்பங்கள் நிறைவேற வாழ்த்துக்கள்.தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி.
அன்புடன்
ரிதா
வாங்க அதிரா...,என்ன இப்படி சொல்லிப்புட்டீங்க....?ஏதும் ஏடாகூடமாக எழுதலையே?:-)))
தங்கள் வருகைக்கும்,கருத்திற்க்கும் மிக்க நன்றி அதிரா...
அன்புடன்,
அப்சரா.
சலாம் ரிதா...,நலமா?தங்கள் கருத்து கண்டு மகிழ்ச்சி.உங்களை போன்றவர்களின் ஊக்கம் தான் எனக்கு டானிக் மாதிரி...
அதை அவ்வபோது தரும் தாங்களுக்கு மிக்க நன்றி நன்றி நன்றி.
அன்புடன்,
அப்சரா.
அன்பு அப்ஸரா மூன்று மாதங்களெல்லாம் ஒரு கணக்கே அல்ல. ஸாதிகாவுக்கு தான் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன், உங்களைப் போன்ற நல்லுள்ளங்களை ஊக்கப்படுத்தி எழுதச் செய்வதற்காக.
///அன்பின் தங்கை அப்சரா,எனது வேண்டு கோளை ஏற்று இத்தனை விரைவாகவும்,அருமையாகவும் படைத்த உங்களுக்கு என் நன்றிகளும்.நல் வாழ்த்துக்களும்.
/// பெண்ணின் எழுத்து சுதந்திரமும்... அடுத்தவர்களுக்கு அது ஊக்கமளிப்பவையாகவும், உற்சாகபடுத்துபவையாகவும்,நல்லதொரு எடுத்துக்காட்டாகவுமே அமைய வேண்டுமே தவிர அடுத்தவர்களை பாதிக்காமலும்,முகம் சுளிக்கும் அளவிற்க்கு இல்லாமல் பார்த்துக் கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமை.அதுவே நிலையானது///
மென்மேலும் சிறந்த படடப்புகளை அளியுங்கள். நல்வாழ்த்துகள்.
அடடே எனது இல்லத்தில் மதுமிதா மேடம் அவர்களின் வருகையா...?எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கின்றது.
உங்களை போன்ற சிறந்த எழுத்தாளர்கள்,சிந்தனையாளர்களின் பாராட்டை பெறுவது எனக்கு மிகவும்,பெருமையாகவும் ஊக்கமளிப்பவையாகவும் இருக்கின்றது மதுமிதா மேடம்.
எனது பதிவை படித்து கருத்திட்டமைக்கு மிகவும் நன்றி மதுமிதா மேடம்.
அன்புடன்,
அப்சரா.
Post a Comment