Monday, March 14, 2011

ஈஸி பாகற்க்காய் பொறியல்



*** தேவையான பொருட்கள் ***
பாகற்க்காய்                                          _      ஒன்று(பெரியதாக)
வெங்காயம்                                          _                 இரண்டு
மிளகாய்த்தூள்                                     _      ஒரு தேக்கரண்டி
எண்ணெய்                                             _    7  தேக்கரண்டி
கறிவேப்பிலை                                    _   ஒரு கொத்து
உப்பு                                                         _  தேவையான அளவு                                                                
*** செய்முறை ***


பாகற்க்காயை சிறியதாக நறுக்கி (ஆறு பாகங்களாய் நீளவாக்கில் அரிந்து அப்புறம் ஒன்று சேர்த்து அரிந்தால் இருக்கும் அளவு) அதை உப்பு சேர்த்து தண்ணீரில் பத்து நிமிடம் வைத்து விட்டு கழுவி நீரை வடிக்கட்டவும்.
வெங்காயத்தையும் பொடியாக அரிந்து வைத்துக் கொள்ளவும்.கழுவிய பாகற்க்காயையும் சிறிது உப்பும்,மிளகாய்த்தூளும் சேர்த்து பிரட்டி ஐந்து நிமிடம் வைத்து விடவும்.
ஒரு வானலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி  சூடு வந்ததும்,பிரட்டிய பாகற்க்காயை போட்டு தண்ணீர் சுண்டி வதங்கிய நிலையில் ஆகும் வரை வைத்து பொறிந்ததும்,எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு அதே வானலியில் அந்த எண்ணையிலேயே வெங்காயம்,கறிவேப்பிலையை போட்டு சிறிது அதற்கான உப்பை சேர்த்து  வதக்கவும்.
ஓரளவு வதங்கியதுமே வதக்கிய பாகற்க்காயை போட்டு ஒன்று சேர கிளறி மிதமான தீயிலேயே நன்கு வதங்க விடவும்.நன்கு வதங்கி ஆங்காங்கே மொறுகலாக கூட ஆகும்.அதன் பின் அந்த வானலியை விட்டு ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
விரும்பியவர்கள் இதில் தேங்காய் துருவல் சேர்த்து சிறிது நேரம் பிரட்டி இறக்கலாம்.
சுவையானதொரு ஈஸி பாகற்க்காய் பொறியல் ரெடி.எல்லாவித சாதத்துடனும் சாப்பிட நன்றாக இருக்கும்.பாகற்க்காயை பிடிக்காதவர்கள் கூட இம்முறையில் செய்தால் ருசித்து சாப்பிடுவார்கள்.இது எனது அக்காவின் செய்முறை.இந்த முறையில் நான் சாப்பிடும் வரை நான் பாகற்க்காயை ஒதுக்குபவளாக இருந்தேன்.ஆனால் இன்று எனக்கு மட்டுமே இப்படி செய்து சாப்பிட்டு வருகிறேன்.நீங்களும் செய்து ருசித்து பாருங்களேன்.


5 comments:

ridaa said...

பாகற்காய் பொரியல் அருமை.சாம்பார் சாதத்துடன் சாப்பிட எனக்கு மிகவும் பிடிக்கும்
அன்புடன்
ரிதா

ஸாதிகா said...

தங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்.உங்களின் கருத்தினை பகிருங்கள்.

ஸாதிகா said...

இந்த முறையில் பாகற்காயை சமைத்தால் கசப்பு கண்டிப்பாக தெரியாது,அழகாக சமைத்து பகிர்ந்துள்ளீர்கள் அப்சரா.

apsara-illam said...

சலாம் ரிதா...,ரொம்ப நல்ல காம்பினேஷன் சொன்னீங்க,எனக்கும் சாம்பாருக்குதான் தொட்டுக்கொள்ள ரொம்ப பிடிக்கும்.
வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி ரிதா.

அன்புடன்,
அப்சரா.

apsara-illam said...

சலாம் ஸாதிகா அக்கா...,தங்கள் வருகைக்கும்,கருத்திற்க்கும் மிக்க நன்றி அக்கா...
என்ன தொடர் பதிவா இதோ உங்கள் பக்கத்தை பார்வையிட வருகிறேன் அக்கா...
நன்றி.

அன்புடன்,
அப்சரா.

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out