*** தேவையான பொருட்கள் ***
பாஸ்தா(விருப்பமான வடிவில்) _ ஒரு கப்
வெங்காயம் _ ஒன்று
தக்காளி வித் சில்லி சாஸ் _ அரை தேக்கரண்டி
கேரட்,சிகப்பு குடைமிளகாய்,
முட்டை கோஸ் அரிந்தது } _ தனி தனியே 2 மேசைக்கரண்டி
இஞ்சி,பூண்டு விழுது _ அரை தேக்கரண்டி
மிளகாய்த்தூள் _ அரை தேக்கரண்டி
எண்ணெய் _ 4 தேக்கரண்டி
மல்லி தழை _ சிறிதளவு
*** செய்முறை ***
வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
சிறிய குக்கரில் எண்ணெயை ஊற்றி சூடு வந்ததும்,வெங்காயம் மற்றும் அரிந்துள்ள அனைத்து காய்களையும் சேர்த்து அரை ஸ்பூன் உப்பும் போட்டு நன்கு வதக்க வேண்டும்.
நன்கு வதங்கியதும்,இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட்டு,சாஸ் மற்றும் மிளகாய்த்தூளும் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
பிறகு பாஸ்தாவையும் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
அதன் பின் ஒரு கப் நிறைய தண்ணீர் சேர்த்து உப்பு சரிபார்த்துவிட்டு மல்லிதழையை அரிந்து தூவி,குக்கரை மூடி,வெய்ட் போட்டு குறைந்த தீயில் பத்து நிமிடம் வைத்து விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான உதிரியான பாஸ்தா தயார்.காரம் அவரவர் விருப்பத்திற்க்கு ஏற்றார்போல் சேர்த்துக் கொள்ளவும்.நினைத்தவுடன் சுலபமாக செய்து விடலாம்.
6 comments:
ஈசியான குறிப்பு,கோஸும்,பாஸ்தாவும் பிடிக்கும் இரண்டும் சேர்ந்து அருமை.
சுலபமான முறையில் அழகாக செய்து காட்டி இருக்கிறீர்கள்
அன்புடன்
ரிதா
சலாம் ஆசியா அக்கா...,
தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.
அன்புடன்,
அப்சரா.
சலாம் ரிதா...,வழக்கம்போல் தங்கள் கருத்து கண்டு மிக்க மகிழ்ச்சி.
மிகவும் நன்றி ரிதா...
அன்புடன்,
அப்சரா.
குக்கரில் பாஸ்தா செய்ததில்லை..தனியே வேகவைத்து வடித்துதான் செய்திருக்கேன்.அடுத்தமுறை இப்படி செய்துபார்க்கிறேன்.
வாங்க மஹி..,தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.
என்னவருக்கு இந்த பாஸ்தா என்றாலே பிடிக்காது.நானும் எப்படி எப்படியோ செய்து பார்த்தேன்.
குக்கரிலேயுமே கொஞ்சம் தண்ணீரின் அளவை கூட வைத்தும் அப்புறம் போட்டும் செய்தாலும் கொல கொலவென்று இருக்கும் அல்லாவா அதுவும் பிடிக்கவில்லை.
இந்த முறை செய்ததை விரும்பி சாப்பிட்டார்.
முயன்று பாருங்கள்.
அன்புடன்,
அப்சரா.
Post a Comment