Tuesday, March 1, 2011

மட்டன் தால்ச்சா


*** தேவையான பொருட்கள் ***
மட்டன்                             _  எலும்புடன் கூடியது கால் கிலோ  
துவரம்பருப்பு                 _   அரை கப் 
கடலைபருப்பு                _   இரண்டு தேக்கரண்டி
வெங்காயம்                    _   பெரியதாக ஒன்று
தக்காளி                            _   இரண்டு
பச்சை மிளகாய்              _  இரண்டு
கத்திரிக்காய்                    _  இரண்டு
உருளைகிழங்கு              _  ஒன்று
கேரட்                                  _   இரண்டு இன்ச் அளவு
சுரைக்காய்(விரும்பினால்) _  நான்கைந்து துண்டுகள்
வாழைக்காய்                         _   சிறியதாக ஒன்று
மாங்காய்                                 _   மூன்று துண்டுகள்(விருப்பத்திற்க்கேற்ப)
புளி                                            _   சிறிய எலுமிச்சை அளவு 
இஞ்சி,பூண்டு விழுது          _    இரண்டு தேக்கரண்டி
எண்ணெய்                              _    100மிலி
பட்டை                                     _    2 இன்ச் அளவு துண்டு
ஏலக்காய்                               _   ஒன்று
மஞ்சள்த்தூள்                        _    ஒன்றரை தேக்கரண்டி
மிளகாய்த்தூள்                      _    ஒன்றரை தேக்கரண்டி
மல்லித்தூள்                           _    இரண்டு தேக்கரண்டி
மல்லி,புதினா தழை             _    சிறிதளவு
கறிவேப்பிலை                      _    நான்கு கொத்து

*** செய்முறை ***
வெங்காயம் தக்காளிகளை பொடியாக அரிந்து வைத்து கொள்ளவும்.
மட்டன் எலும்புகளை நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்.

குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும்,பட்டை ஏலக்காய் போட்டு தாளித்து,அரிந்து வைத்திருக்கும் வெங்காயம் போட்டு வதக்கவும்.பொன்னிறமாக வதங்கியதும்,இஞ்சி,பூண்டு விழுதை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
பின்பு தக்காளியும்,கறிவேப்பிலை ஒரு கொத்து இலைகளையும்,மல்லி புதினா தழைகளையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
தக்காளி நன்கு மசிய வதங்கியதும்,மிளகாய்த்தூள்,மஞ்சள்த்தூள்களை சேர்த்து நன்கு வதக்கி விட்டு மட்டன் எலும்புகளையும்,ஒரு ஸ்பூன் உப்பையும் சேர்த்து நன்கு மிதமான தீயில் மூன்று நிமிடம் வதங்க விடவும்.

பின்பு இரண்டு  டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் குறைந்த தீயில் பன்னிரண்டு நிமிடம் வைத்து இறக்கவும்.
மற்றொரு சிறிய குக்கரில் பருப்பைகளை நன்கு கழுவி விட்டு வேக வைத்து கொள்ளவும்.

இதற்க்கிடையில் காய்களையும் கழுவி அரிந்து தண்ணீரில் (கருக்காமல் இருக்க)  போட்டு வைத்துக் கொள்ளவும்.
மட்டன் எலும்பு வெந்த குக்கரிலேயே அந்த கலவையுடன் மல்லித்தூள்,மாங்காய் தவிர்த்து அனைத்து காயையும் சேர்த்து,பருப்பினுடைய தண்ணீரை மட்டும் ஊற்றி இன்னும் சிறிது உப்பு சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் விட்டோ,இல்லை ஐந்து நிமிடம் வைத்தோ இறக்கவும்.

பிறகு குக்கரை திறந்து ஒரு தாராளமான பாத்திரத்தில் ஊற்றி மாங்காய் துண்டுகளை சேர்த்து இரண்டு கொதி கொதிக்க விட்டு பிறகு புளியை கரைத்து ஊற்றி ஒரு கொதி கொதித்ததும்,பருப்பையும் கறிவேப்பிலையை கொத்தோடு கழுவி சேர்த்தும் மிதமான தீயிலேயே கொதிக்க விடவும்.அடி பிடித்திடாமல் இருக்காமல் இடையிடேயே கிளறி விட்டு கொள்ளவும்.(புளி அதிகம் விரும்புவோர் இன்னும் சிறிது சேர்த்து கொள்ளலாம்.)

எண்ணெய் மினு மினுக்க ஆரம்பிக்கும் போது அடுப்பிலிருந்து இறக்கவும்.

நல்ல மணமுடன் சுவையான தாள்ச்சா தயார்.

இதையே சிக்கன் துண்டுகளை கொண்டும் செய்யலாம்.அதற்க்கு தாளித்து சிக்கனுடன்,காய்களையும் ஒன்றாகவே சேர்த்து வேக வைக்கலாம்.இதை பாத்திரத்திலேயும் வேக விட்டு செய்யலாம்.

இது பிரியாணி,நெய் சோறு ஏன் சாதா சாதத்திற்க்கு கூட ஊற்றி சாப்பிட நன்றாக இருக்கும்.

இதற்க்கு சுருக்கென்று தொட்டுக் கொள்ள இந்த மட்டன் கடாய் வறுவல் பெஸ்ட் காம்பினேஷனாக இருக்கும்.இதன் குறிப்பு வேண்டுமேயானால் இங்கு க்ளிக் செய்து பார்க்கவும்.என்னவருக்கு மட்டன் விருப்பம் கிடையாது.இம்முறையில் செய்தால் மட்டுமே என்னவர் விரும்பி மட்டனை சாப்பிடுவார்.என் குழந்தைகளுக்கும் மிகவும் விருப்பமான ஒன்று.













2 comments:

Asiya Omar said...

சூப்பரோ சூப்பர்.உங்க முறைப்படி செய்து பார்க்கிறேன்.

apsara-illam said...

தங்கள் கருத்தை கண்டு மகிழ்ச்சி....
நன்றி அக்கா...

அன்புடன்,
அப்சரா.

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out