Monday, February 28, 2011

திடீர் விருந்தினரின் வருகை...


நமது கலாச்சாரத்தில் விருந்தோம்பல் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.வருபவர்களுக்கு நம்மால் முடிந்த அளவு வயிறார சாப்பிட கொடுத்து திருப்திபடுத்த வேண்டும் என்பது காலம்காலமாக பல புராணங்கள் முதற்கொண்டு சொல்ல பட்ட விஷயங்கள்.சின்ன விருந்துகள் முதற்கொண்டு பெரிய பெரிய கல்யாண விருந்துகள் வரை சாப்பாடு என்பது மிக முக்கியம்.அதை எந்த ஒரு குறையும் இன்றி அனைவரையும் திருப்தி படுத்தவே அனைவரும் கவனமாக இருப்பர்.
அதில் சிறு குறை ஏற்பட்டாலுமே அதையும் பிரச்சனையாக பேசுபவர்களும் உண்டு.அந்த அளவிற்க்கு விருந்துக்கென்ற தனி முக்கியத்துவம் நமது மக்களிடையே உண்டு.

அதே போல் தான் சிறிய விருந்துகளுமான நமது வீடுகளில் அவ்வபோது விருந்தினர்களின் வருகையும் ஆகும். வரும் விருந்தினர்கள் முதல் நாளோ... அல்லது அதற்க்கு முன்னதாகவோ வருகையினை தெரிவித்திருந்தார்களேயானால்..., நாம் அதற்க்கு ஏற்றவாறு தயார் நிலையில் சாமான்களை வாங்கி, விதம் விதமாக  சமைத்து ,வீட்டினை முன்னதாகவே சுத்தம் செய்து வைத்து கொண்டு, வந்தவர்களோடு உரையாடி விட்டு, உணவு பரிமாறுதல் என்று மட்டுமே இருப்பது போன்று தயார் நிலையில் இருக்கலாம்.இது வந்தவர்களை சந்தோஷப்படுத்தியதோடு அல்லாமல் ,நம் மனதிற்க்கு முழு திருப்தியை அழிக்கும்.


ஆனால் சொல்லாமல் சிலர் திடீர் வருகையாக வருபவர்களும் உண்டு. “உன்னால் முடிந்ததை,அல்லது ஏற்கனவே  செய்ததை வைம்மா போதும்”என்பார்கள். ஆனால் அப்படி செய்வதற்க்கு நமக்கு மனசும் இடம் கொடுப்பதில்லை.திடீரென்று உணவு வேளையின் நெருக்க கட்டத்தில் வந்தார்களேயானால் வேறு வழியே இல்லை.இருப்பதையே வைத்து விடுவோம்.அதை சாப்பிட்டுவிட்டு சிலர் குறை சொல்பவர்களையும் நான் பார்த்ததுண்டு.... “என்னதான் நாம சொன்னாலும் இப்படியா வந்தவங்களுக்கு சாப்பாடு வைக்கிறது...ஆளை பார்த்ததும் பதறி அடிச்சு சமைக்க வேணாம்... நாமெல்லாம் அந்த காலத்துல மனுசங்கல பார்த்துட்டா...எப்படி துரு துருன்னு இருப்போம்.இப்ப உள்ளதுங்களுக்கெல்லாம் அது எங்கே தெரியுதுன்னு?” ஆரம்பிச்சுடுவாங்க. இது ஊரில் ஆங்காங்கே நடக்கிற விஷயம் தான்.
முன்பெல்லாம் ஃபோன் வசதி அவ்வளவாக இல்லாததால் திடீர் வருகைக்கு ஏதும் நாம் சொல்ல இயலாது.ஆனால் இப்பதான் வீட்டிற்க்கே ஆளுக்கோர் செல் என்ற நிலை வந்துவிட்டதே.... இன்றைக்கும் சிலர் அப்படியே எந்த ஒரு அறிவுப்பும் இல்லாமலே வந்து நிற்ப்பார்கள்.அவசர வேலையில் சில சந்தர்ப்பங்களால் வருவதௌ என்பது பரவாயில்லை.ஆனால் சிலர்  “நேரம் இன்னைக்கு கிடைத்தது.ரொம்ப நாளா நீயும் கூப்பிட்டு கொண்டிருந்ததால் உடனே கிளம்பி வந்துட்டோம்” என வந்தார்களேயானால் தனியே இருப்பவர்களுக்கு என்ன செய்ய முடியும் சொல்லுங்க.. கிளம்பி வாகன பயணத்தில் இருக்கும் போது வருகையினை சொன்னாலே போதும் நாம் ஓரளவிற்க்கு தயாராக இருக்கலாம்.நாம் எல்லாம் நமக்கு வேண்டியதை சமைத்துமுடித்து அப்பாடி வேலை முடிந்து விட்டது என நினைக்கும் போதோ....இல்லை கிடப்பில் கிடக்கும் வேறு வேலைகளை செய்ய முற்படும் போதோ.... திடீரென விருந்தினர்கள் இரண்டு,மூன்று பேர் வந்து நின்றால் நாம் என்ன செய்யமுடியும்?ஒரு சில நிமிடங்கள் ஒன்றுமே புரியாத நிலையில் பட படவென்று நிற்ப்போம்.அப்புறம் மறுபடியும் கோழியை வாங்கு கறியை வாங்கு காயை வாங்குன்னு ஆளை புடிச்சு அங்கே அனுப்பி இங்கே அனுப்பி மறுபடியும் மூன்று நான்கு வகை சமையலோடு விருந்தும் அரங்கேறும்.இதில் வந்தவர்களிடம் உட்கார்ந்து பேச முடியாமல்,வந்தவர்களுக்கும் சங்கடமாக தான் முடியும்.இந்த நிலையை பலர் மாற்றி கொள்வது நல்லது.


வெளிநாட்டில் வாழ்பவர்களேயானாலும் இதையேதான் சொல்லி கொள்ள நினைக்கிறேன்.சாப்பாட்டிற்க்கென்று இல்லை.ஒரு மாலை நேர விசிட்டிங்க் என்று இருந்தாலும் கூட நாம் அன்று காலையிலேயே ஃபோன் செய்து நீங்கள் ஃபிரீயாக இருக்கின்றீர்களா...?உங்களுக்கு முக்கிய வேலை,வெளியில் செல்லும் நிகழ்ச்சி என ஏதும் இல்லையே என அறிந்து கொண்டு பிறகு தான் வர நினைக்கும் செய்தியை தெரிவித்தல் நல்லது.
ஏனென்றால் இந்த வெளிநாட்டில் பலரும் குழந்தைகளுடன் தனியே வாழ்ந்து வருகின்றனர்.அவர்களுக்கும் வாரத்தில் ஒரு நாள் தான்(சிலருக்கு இரண்டு நாள்)கிடைக்கும்.அப்போது போக வேண்டிய வாங்க வேண்டிய விஷயங்கள் என இருக்கும்.திடீரென்று வந்து காலிங்பெல்லை அடிக்க யாரும் இல்லாமல் அவ்வளவு தூரம் வந்து திரும்பி செல்வது என்பது வருபவர்களுக்கும் தர்மசங்கடம்தானே....(இது எங்க வீட்டிலேயே பலதடவை நடந்து இருக்குங்க...வாசலில் நிற்க்கிறேன் என்று ஃபோன் வந்து இருக்கு...)  


இது மட்டும் காரணமில்லை.சில நேரங்களில் நம் குழந்தைகளுக்கு உடல் நிலை சரியில்லாமல் அவதி பட்டு கொண்டு இருக்கலாம்.அதனால் வேலையை சரி வர செய்ய முடியாமல் குழந்தையை வைத்து கொண்டு போட்டது போட்டபடியே இருப்பது போன்றெல்லாம் சூழ்நிலைகள் ஏற்படும்.இப்படி ஒரு சூழ்நிலையில் ஒருவருடைய வருகை சந்தோஷமான சூழ்நிலையை உண்டாக்குமா....?பலரும் சிந்தித்து பார்க்க வேண்டும்.  

அதற்க்காக விருந்தினர் வருவதை தவறு என்று சொன்னதாக யாரும் தயவுசெய்து எண்ண வேண்டாம்.எனக்கு விருந்தினரை அன்போடு வரவேற்று உபசரிக்க மிகவும் பிடிக்கும்.அதையே பதட்டம் இல்லாமல் செய்யும்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்பதுதான் என்னுடைய கருத்து.என் கணவர் திடீர் வருகையால் ரொம்ப டென்ஷனாகி விடுவார்.நான் பெரும்பாலும் அந்த டென்ஷனை வெளியில் காட்டி கொள்ளமாட்டேன்.வேண்டிய சாமான்களை சீக்கிரம் ஆர்டர் செய்து சமைத்து கொடுக்க பார்ப்பேன்.இப்போது எல்லாம் பழகி போச்சுன்னு வச்சிக்குவோம்.புதிதாக சமைக்க ஆரம்பித்து இல்லற வாழ்க்கையை ஆரம்பித்திருக்கும் குடும்பதலைவிகளுக்கு எவ்வளவு பதட்ட நிலையும்,என்ன செய்வதென்று தெரியாமல் நிற்க்கும் நிலை கஷ்ட்டமாக இருக்கும்.இது போன்று வருபவர்களிடம் முடிந்தவரை ஃபோன் செய்து விட்டு வீட்டிற்க்கு வரும் பழக்கத்தை அவர்களிடத்தில் சொல்லி புரிய வைக்க வேண்டும்.இல்லையென்றால் விடுமுறை நாட்களில் யாரேனும் திடீர் என்று வந்தார்களேயானாலும் எப்படி நாம் சமாளிப்பது என்று நம்மை தயார் நிலையில் வைத்து கொள்ள வேண்டும்.வேற வழியே இல்லைங்க....

இதற்க்கு அடுத்து அப்படி விருந்தினரை சமாளிப்பதற்க்கான சில டிப்ஸை கொடுக்க இருக்கின்றேன். இன்ஷா அல்லாஹ்...


4 comments:

Lakshmi said...

திடீர் விருந்தினர் வருகை பற்றிய பதிவு ரொம்ப நல்லா இருக்கு.
வாழ்த்துக்கள்.

apsara-illam said...

தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிகவும் நன்றி லட்சுமி அம்மா...

அன்புடன்,
அப்சரா.

asiya omar said...

மிக நல்ல ஆழமான பதிவு.என் கணவர் யார் திடீர்னு வந்தாலும் ஏன் இப்படி சிரமப்படுறே,இருப்பதை வைத்து ரெடி செய்து கொடுன்னு சொன்னாலும், நமக்கு மனசு கேட்காது.முடிந்தளவு நல்லா செய்ய பார்ப்போம்,வருகிற ஆட்களை பொறுத்து,புரிந்து கொள்பவர்களாக இருந்தால் பிரச்சனையில்லை.தொடர்ந்து எழுதுங்க,அப்சரா,நிறைய பதிவு சேர்ந்து இன்று வாசித்தாயிற்று.இனி அப்ப அப்ப வந்து இடுகை இருக்கான்னு பார்த்து கொள்கிறேன்.

apsara-illam said...

தாங்கள் வருகை தந்து எல்லா பதிவையும் பொறுமையாக படித்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி ஆசியா அக்கா...
உங்களை போன்றவர்களின் கருத்துக்கள் எனக்கு மகிழ்ச்சியையும்,ஊக்கத்தையும் அளிக்கின்றது.நன்றி அக்கா...

அன்புடன்,
அப்சரா.

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out