Tuesday, February 22, 2011

நண்டு குருமா



*** தேவையான பொருட்கள் ***
நண்டு            _   2 கிலோ
வெங்காயம்       _   இரண்டு
தக்காளி            _   பெரியதாக ஒன்று
பச்சைமிளகாய்     _   இரண்டு
தேங்காய் பால்     _   2 டம்ளர்
இஞ்சி,பூண்டு விழுது_   1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள்      _   2 தேக்கரண்டி
கரம்மசாலாத்தூள்    _   ½ தேக்கரண்டி
எண்ணெய்          _   100 மிலி
மல்லிதழை         _  சிறிதளவு
கறிவேப்பிலை       _  ஒரு கொத்து
*** அரைத்து கொள்ள ***
தேங்காய் துருவல்    _  ஒரு கப்
முந்திரி               _  6
பாதாம்                _  6
பூண்டு                 _  5 பல்    
மஞ்சள்த்தூள்           _   2 தேக்கரண்டி
மிளகுத்தூள்            _   1 தேக்கரண்டி
மல்லித்தூள்            _   3 தேக்கரண்டி
சீரகத்தூள்              _   2 தேக்கரண்ட
சோம்புத்தூள்            _    1 தேக்கரண்டி

*** செய்முறை ***

நண்டின் கழிவுகளை அகற்றிவிட்டு தண்ணீரில் அதிக நேரம் வைத்திருக்காமல் நன்கு கழுவி தண்ணிரை வடிக்கட்டி எடுத்து கொள்ளவும்.
பாதாமை தோலுரித்து அரைக்க கொடுத்துள்ள அனைத்தையும் சேர்த்து  நன்கு நைசாக அரைத்து கொள்ளவும்.பின்பு அதை ஒரு பாத்திரத்தில் தேங்காய் பாலுடன் மேலும் இரண்டு டம்ளர் தண்ணீரும் சேர்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்து கரைத்து விட்டு மல்லிதழையை அரிந்து சேர்த்து வைத்து கொள்ளவும்.
வெங்காயம்,தக்காளியையும் பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.பச்சைமிளகாயை கீறி வைத்துக் கொள்ளவும்.

ஒரு அகலமான பெரிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து (நண்டை பிரட்டிகொதிக்க விட தாராளமாக இருக்க வேண்டும்.)எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் கறிவேப்பிலை மற்றும் அரிந்து வைத்திருக்கும் வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாயை சேர்த்து அரை ஸ்பூன் உப்பும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.எல்லாம் நன்கு வதங்கியதும்,இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.

பிறகு மிளகாய்த்தூள் கரம்மசாலாத்தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.

எல்லாம் நன்கு வதங்கியபின்,கரைத்து வைத்திருக்கும் கரைசலை ஊற்றி நண்டையும் தண்ணீர் இல்லாமல் ஒவ்வொன்றாக எடுத்து அதில் போட்டு கொதிக்க விடவும்.(மூட வேண்டாம்)
இரண்டு கொதி கொதித்ததும் மிதமான தீயிலேயே இருபது நிமிடம் வைத்திருந்தால் நல்ல மணத்துடன் எண்ணெய் விட ஆரம்பிக்கும்.
பிறகு அதை அடுப்பிலிருந்து இறக்கவும்.


சுவையான ,ரிச்சான நண்டு குருமா தயார்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் படி இருக்கும்.
இந்த குருமாவை இடியாப்பம்,இட்லி,தோசை இவைகளுக்கு தொட்டு கொள்ள நன்றாக இருக்கும்.

நல்ல முருங்கக்காயை நண்டு போடும்போதே சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்தால் இன்னும் வாசமாக இருக்கும்.    





5 comments:

ஸாதிகா said...

அருமையான ந்ண்டுக்குழம்பு அழகாக செய்து காட்டிவிட்டீர்கள்.

Jaleela Kamal said...

நண்டு எங்க வீடுகளில் நாங்க சமைப்பதில்லை.

Jaleela Kamal said...

நல்ல தெளிவா போட்டு இருக்கீஙக், என் பிரண்ட் செய்வா, இந்த நண்டு சளிக்கு ரொம்ப நல்லது என்பார்கள்.

apsara-illam said...

சலாம் ஸாதிகா அக்கா...,தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.

அன்புடன்,
அப்சரா.

apsara-illam said...

சலாம் ஜலீலா அக்கா...,என்ன சொல்றீங்க...?நண்டு சாப்பிடுவதில்லையா...?இதுதான் நான் சிறுவயதிலிருந்தே விரும்பி சாப்பிடும் ஒன்று.சிலர் மக்ரூ என்று எண்ணி ஒதுக்குவார்கள்.அதுபோல நீங்களும் ஒதுக்குகிறீர்களா.. அக்கா?
நீங்க சொல்வது சரிதான்.நல்ல சளி இருக்கும்போது இதை சமைத்து சாப்பிடணும் சும்மா உறைஞ்ச சளியெல்லாம் அத்துட்டு வந்துடும்.
ஆனால் சூடை கிளப்பி விடும் என்பதால் அடிக்கடி சமைத்து சாப்பிட முடியாது.
எப்பவாவது இது போல வாங்கி ஒரு கட்டு கட்டிடுவோம்.
இதிலேயே மிளகுகறி உண்டு அது இன்னும் நன்றாக இருக்கும்.
தங்கள் கருத்துக்கு நன்றி அக்கா...

அன்புடன்,
அப்சரா.

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out