Tuesday, February 22, 2011

வட்டிலாப்பம்

 
இது ஒவ்வொரு இஸ்லாமியர்களின் வீட்டிலும் அடிக்கடி செய்ய 

கூடிய இனிப்பு ஆகும்.செய்முறைகள் வீட்டுக்கு வீடு சிறிதே 

வித்தியாச படலாம்.

*** தேவையான பொருட்கள் ***

தேங்காய் பால்         _   (திக்கானது) அரை டம்ளர்
முட்டை                _   மூன்று
பாதாம்                  _  12
முந்திரி                  _  7
ஏலக்காய்                _   3
சீனி                      _   முக்கால் கப்
உப்பு                      _   மூன்று சிட்டிகை
நெய்                       _   ஒரு தேக்கரண்டி
*** செய்முறை ***

பாதமை ஊறவைத்து தோல் நீக்கி விட்டு முந்திரி மற்றும் ஏலக்காயின் கறுப்பு விதையையும் சேர்த்து மிக்ஸியில் பால் ஊற்றி நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு திட்டமான பாத்திரத்தை எடுத்து கொண்டு அரைத்ததையும்,தேங்காய் பாலையும் அதில் ஊற்றி விட்டு அதே மிக்ஸியில் முட்டையையும் நன்கு அடித்து வடிக்கட்டி சேர்க்கவும்.
தேங்காய் பால்,அரைத்த விழுது,முட்டை இவைகளுடன் சீனி,உப்பையும் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும்.

பிறகு நெய்யை ஊற்றி நன்கு கலக்கி கொள்ளவும்.

அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து வேகும் அளவிற்க்கு தண்ணீரை ஊற்றி நன்கு சூடு வந்ததும்,இந்த பாத்திரத்தை வைத்து மூடி நன்கு வேக விடவும்.

மிதமான தீயிலேயெ அரை மணிநேரம் வைத்து பின் மூடியை திறந்து கத்தியில் குத்தி பார்த்தால் ஒட்டாமல் வரும்.அப்போது அடுப்பை அணைத்து விடவும்.( ரைஸ் குக்கரிலும் வேக வைக்கலாம்.)

கொஞ்சம் ஆறியதும் துண்டுகளாக்கி எடுத்து தட்டில் வைத்து விரும்பினால் வறுத்த முந்திரிகளுடன் பரிமாறலாம்.
இதில் பாதாமிற்க்கு பதில் கசகசாவை சேர்த்தும் அரைத்து செய்யலாம்.நன்றாக இருக்கும்.

4 comments:

ridaa said...

வட்டிலப்பம் செய்முறை விளக்கம்
அருமை.
அன்புடன்
ரிதா

apsara-illam said...

அன்பு தோழி ரிதா,உங்களுடைய கருத்துக்கள் எல்லாமே எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கின்றது.மிக்க நன்றி மா....

அன்புடன்,
அப்சரா.

Mahi said...

சிம்பிளா இருக்கு அப்ஸரா!
ஹாக்கின்ஸ் குக்கர்லதான் இட்லித்தட்டை வைத்துத்தான் இட்லி செய்வேன்.இப்படி பாத்திரம் அதிலே வைக்கமுடியுமான்னு தெரில.அவன்ல பேக் பண்ணலாம்னு ஒரு ப்ரெண்ட் சொன்னாங்க. இதை கேக் பான்ல ஊற்றி பேக் பண்ணினா நல்லா இருக்குமாங்க?

apsara-illam said...

ஹாய் மஹி...,அவன்ல வைத்து பேக் செய்து பார்த்தால் அது சாஃப்ட்டாக இருப்பதில்லை.அது வேறு மாதிரி ஆகிவிடுகின்றது.
நீங்க் அவைத்திருக்கும் ஹாக்கின்ஸ் குக்கரிலேயே இந்த பாத்திரம் மூடி போட்டு வைத்து குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் குறைந்த தீயில் இருபது நிமிடம் வைத்து இறக்கிவிடலாம்.ரொம்ப நன்றாக இருக்கும்.விருந்துக்கு,விஷேஷங்களுக்கு எட்டு அல்லது பத்து முட்டை போட்டு செய்யும்போது இம்முறையை தான் கைய்யாளுவோம்.அடிக்கடி பார்த்து கொண்டிருக்க தேவையில்லை.கூடதலாக வைக்கும் போது அரை மணிநேரம் வைத்தால் சரியாக இருக்கும்.முடிந்த போது முயன்று பாருங்கள்.
தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி மஹி.

அன்புடன்,
அப்சரா.

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out