*** தேவையான பொருட்கள் ***
*** மாவு பிசைந்து கொள்ள ***
மைதா மாவு _ அரை கிலோ
எண்ணெய் _ இரண்டு மேசைக்கரண்டி
பேக்கிங் சோடா _ அரை ஸ்பூன்
பால் _ அரை டம்ளர்
சீனி _ 2 தேக்கரண்டி
நெய் _ சிறிதளவு
உப்பு _ தேவையான அளவு
*** ஸ்டஃப்பிங்கிற்க்கு ***
வெங்காயம் _ நான்கு
கேரட் _ சிறியதாக ஒன்று
முட்டைகோஸ் _ 100
உருளைகிழங்கு _ சிறியதாக ஒன்று
சிகப்பு,ஆரஞ்சு,பச்சை
குடைமிளகாய் } _ எல்லாம் சேர்ந்து ஒரு கப்
இஞ்சி,பூண்டு விழுது _ ஒரு தேக்கரண்டி
மிளகாய்த்தூள் _ 2 தேக்கரண்டி
மஞ்சள்த்தூள் _ 1 தேக்கரண்டி
கரம்மசாலாத்தூள் _ ஒரு தேக்கரண்டி
முட்டை _ மூன்று (விருப்பப்பட்டால்)
மல்லிதழை _ சிறிதளவு
எண்ணெய் _ சுடுவதற்க்கு
*** செய்முறை ***
மாவில் சீனி ,உப்பு,பேக்கிங் சோடா எல்லாம் நன்கு கலந்து விட்டு
அதன் பின் எண்ணெயை சூடு செய்து அதையும் மாவில் ஊற்றி நன்கு பிசறி விடவும்.பாலை விட்டு எல்லா இடத்திலும் படும் படி பிசறி விட்டு பிறகு தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி நன்கு கைய்யில் மாவு ஒட்டாதவரை பிசைந்து ஈரத்துணியை கொண்டு மூடி பத்து நிமிடம் விடவும்.
அதற்க்குள் காய்களையெல்லாம் நன்கு கழுவி விட்டு பொடியாக அரிந்து வைத்து கொள்ளவும்.
மாவினை எடுத்து இன்னொரு முறை பிசைந்து விட்டு திட்டமாக சிறிய உருண்டைகளாக போட்டு ஒவ்வொரு உருண்டையிலும் முழுக்க நெய்யை தடவி வைத்து ஈரத்துணியை கொண்டு இரண்டு மணிநேரம் விடவும்.(அவசரத்திற்க்கு ஒரு மணிநேரத்திற்க்கு பின்னரும் செய்யலாம்)
ஒரு வானலியை அடுப்பில் வைத்து 7 தேக்கரண்டி எண்ணெயை ஊற்றி சூடு வந்ததும் அரிந்து வைத்திருக்கும் அனைத்து காய்களையும் சேர்த்து அரை ஸ்பூன் போட்டு வதக்கவும்.
நன்கு ஈரப்பதம் இன்றி வதங்கியதும்,இஞ்சி பூண்டு விழுதினை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.பிறகு தூள் வகைகளை சேர்த்து நன்கு மூன்று நிமிடம் வதக்கவும்.
பிறகு விரும்பினால் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு ஒன்று சேர கிளறி விட்டு சிறிது நேரம் அப்படியே வைத்து விட்டு மீண்டும் கிளறினால் உதிரியாக இருக்கும்.
அதன் பின் மல்லி தழையை பொடியாக அரிந்து தூவி கிளறிவிட்டு இறக்கி ஆறவிடவும்.
2 முட்டையை ஒரு சிறிய பாத்திரத்தில் உடைத்து ஊற்றி சிறிது மிளகுத்தூள்,உப்பும் சேர்த்து நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும்.
இரண்டு மணிநேரம் கழித்தபின்,சப்பாத்தி இடும் கட்டையில் எண்ணெயை தடவி விட்டு ஒரு உருண்டையை வைத்து எண்ணெயை லேசாக மேலே தடவி விட்டு ஒரே சீராக பரவலாக வார்க்கவும்.அதன் நடுவே ஒன்றைரை மேசைக்கரண்டி அளவு உள்ளடம் மசாலாவை பரவலாக வைத்து நான்கு பக்கமும் படிக்கவும்.இடைவெளியே இருக்காதவாறு பார்த்துக் கொள்ளவும்.
தோசை தவாவை அடுப்பில் வைத்து அரை ஸ்பூன் எண்ணெய் விட்டு மடித்து வைத்திருக்கு மாவு கலவையின் மேல் லேசாக அடித்து வைத்திருக்கும் முட்டையை தடவி விட்டு அதை மெதுவாக எடுத்து முட்டை தடவிய பக்கத்தை தோசைதவாவில் படுமாறு போடவும்.மறுபக்கத்திலும் அதே போல் முட்டையை எல்லா இடத்திலும் தடவவும்.
மிதமான தீயிலேயெ வைத்து அடி சிவந்ததும் திருப்பி போட்டு விட்டு அரை ஸ்பூன் எண்ணெய் விட்டு சிவந்ததும் எடுத்து விடவும்.
இதே போல் எல்லாவற்றையும் செய்யவும்.
சூடாகவும் சரி ஆறினாலும் சரி சாப்பிட சுவையாக இருக்கும்.
*** குறிப்பு ***
ப்யூர் வெஜ் சாப்பிடுபவர்கள் முட்டையை தவிர்த்து செய்தாலும் மிகவும் நன்றாகவே இருக்கும்.
நான் வெஜ் பிரியர்கள் காய்களின் அளவை குறைத்து விட்டு கொத்து கறி அல்லது கோழிகளை சேர்த்து செய்யலாம்.அதிக சுவையுடன் இருக்கும்.
3 comments:
சூப்பரான முர்தபா அழகா செஞ்சு இருக்கீங்க,சிக்கன்முர்தபா தான் செய்வேன்,வெஜ்முர்தபா சீக்கிரமே செய்றேன்,வாழ்த்துக்கள்.
சலாம் ஷமீமா...,
தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி மா....
அன்புடன்,
அப்சரா.
nalla irukku
naanum adikadi seyvathu thaan
neeramillaathathaal varamudiyala
Post a Comment