*** தேவையான பொருட்கள் ***
பரோட்டா _ இரண்டு
முட்டை _ ஒன்று
கோழி (அல்லது) கறி_ ஒரு துண்டு (எலும்பில்லாதது)
வெங்காயம் _ பெரியதாக இரண்டு
கேரட் _ இரண்டு இன்ச் அளவு
இஞ்சி பூண்டு அரவை _ 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் _ 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் _ 1/2 தேக்கரண்டி
எண்ணெய் _ 3 தேக்கரண்டி
மல்லி,புதினா தழை _ சிறிதளவு
கறிவேப்பிலை _ ஒரு கொத்து
உப்பு _ தேவைக்கேற்ப
*** செய்முறை ***
பரோட்டாவை மிக்ஸியில் விட்டு விட்டு இரண்டு மூன்று முறை ஓட விட்டு கொத்தி கொள்ளவும்.
வெங்காயம்,கேரட்,கோழி துண்டுகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு அகன்ற வானலியில் எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் கோழிதுண்டுகளை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
பிறகு வெங்காயம்,கேரட்டை போட்டு அதற்க்கு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
வதங்கியதும் இஞ்சி பூண்டு அரவை சேர்த்து கிளறி விட்டு பிறகு தூள் வகைகளையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
அதன் பின் முட்டையை உடைத்து ஊற்றி எல்லாவற்றுடனும் ஒன்று சேர கிளறி விடவும்.
சிறிது நேரம் அப்படியே வைத்து விட்டு மீண்டும் கிளறினால் முட்டையெல்லாம் வெந்து மசாலாக்கள் உதிரியாக வரும்.
பின் கொத்தி வைத்திருக்கும் பரோட்டாவை சேர்த்து நன்கு ஒன்று சேர கிளறி விடவும்.
நன்கு சேர்ந்து சூடும் ஏறியதும் பொடியாக அரிந்த மல்லி,புதினா,கறிவேப்பிலைகளை சேர்த்து கிளறி ஒரு நிமிடம் வைத்து விட்டு கிளறி இறக்கவும்.
எளிதான முறையில் சுவையானதொரு டிபன் தயார்.
இதை அலுவலகத்திற்க்கும் சரி,ஸ்கூலுக்கும் சரி கொண்டு செல்வதற்க்கு ஏதுவானதாக இருக்கும்.
நல்ல பசி அடக்கமான ஒரு டிபன் இது.
முதல் நாள் இரவு செய்த பரோட்டாவை வைத்தே மறு நாள் காலையில் மிக குறைந்த நேரத்தில் செய்து விடலாம்.
சைவ பிரியர்கள் இதில் கோழி போடுவதை தவிர்த்து கேப்சிகம் வேண்டுமானால் சேர்த்து செய்யலாம்.
சுவை அமோகமாக இருக்கும்.சத்தானதும் கூட....
12 comments:
கொத்து பரோட்டா பார்க்க அருமையாக இருக்கிறது.
அன்புடன்
ரிதா
கொத்து பரோட்டா சூப்பர்.படங்கல் தெளிவா ,அழகா இருக்கு.
வாங்க ரிதா...,முதல் ஆளாக வந்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி...
அன்புடன்,
அப்சரா.
ஹாய் ஷமீமா...,தங்கள் கருத்தினை கண்டு மிக்க மகிழ்ச்சி.நன்றி.
அன்புடன்,
அப்சரா.
அருமையாக இருக்கு,ஈசியும் கூட.இந்த முறையில் செய்யும் பொழுது ஆறினால் கூட சூப்பராக இருக்கும்.
சலாம் ஆசியா அக்கா...,
ஆமாம் இது ஆறினாலும் மிகவும் நன்றாக இருக்கும்.தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி அக்கா.
அன்புடன்,
அப்சரா.
ரொம்ப ஈசியான டிபன் அப்சாரா, அடிக்கடி செய்வது,.
சலாம் ஜலீலா அக்கா...,
எங்கள் வீட்டிலும் அடிக்கடி செய்து விடுவேன்.எனவர் ஆஃபிஸ்க்கு கொண்டு செல்வார்.
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ஜலீலா அக்கா...
அன்புடன்,
அப்சரா.
நல்லா இருக்கு! நான் இதிலே 2 கரண்டி குருமாவும் ஊத்தி செய்வேன்,சூப்பரா இருக்கும்! :P :P
இதற்க்கு குருமா,தொட்டுக் கொள்ள என்று எதுவும் செய்ய தேவையில்லை மஹி.... அவசரத்திற்க்கு சீக்கிரத்தில் செய்து விடலாம் இல்லையா... இது நல்ல சாஃப்ட்டாகவும் டேஸ்ட்டாகவும் இருக்கும்.பாக்ஸிற்க்கு இது போல கொடுத்து அனுப்புவதற்க்கு உகந்தது.
தங்கள் கருத்துக்கு நன்றி மஹி.
அன்புடன்,
அப்சரா.
இதற்கு தொட்டுக்கொள்ள ஒண்ணும் வேணாம்தான்,ஆனா எங்க ஊர் ஹோட்டல்களில் கொத்துபரோட்டா கூட தயிர்வெங்காயம் தருவாங்க,அதனால் என்னவருக்கு எப்பவும் அதுவும் இருக்கணும் இது கூட! :)
/முதல் நாள் இரவு செய்த பரோட்டாவை வைத்தே மறு நாள் / அதே தான்,முதல் நாள் பரோட்டா குருமா செய்யும்போதே குருமால ரெண்டு கரண்டி எடுத்து வைச்சு கொத்துப்பரோட்டால ஊத்தி செய்வேன்னு சொன்னேன் அப்சரா! :)
Post a Comment