தேவையான பொருட்கள்
சிக்கன் _ 6 துண்டுகள்
வெங்காயம் _ ஒன்று
தக்காளி பாதியளவு
தயிர் _ 4 தேக்கரண்டி
இஞ்சி,பூண்டு விழுது _ 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் _ 2 தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் _ 1 தேக்கரண்டி
மல்லிதழை _ சிறிதளவு
கறிவேப்பிலை _ ஒரு கொத்து
முந்திரி _ 4
எண்ணெய் _ 5 தேக்கரண்டி
*** செய்முறை ***
சிக்கனை நன்கு சுத்தம் செய்து மஞ்சள்த்தூள் போட்டு நன்கு கழுவி விட்டு தயிரையும்,ஒரு தேக்கரண்டி உப்பையும் போட்டு பத்து நிமிடம் பிரட்டி வைக்கவும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும்,முந்திரிகளை போட்டு வறுத்து அரிந்த வெங்காயம்,தக்காளியையும்,கறிவேப்பிலையும் போட்டு நன்கு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
வதங்கியதும்,இஞ்சி,பூண்டு விழுதை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
பிறகு மிளகாய்த்தூள்,கரம்மசாலாத்தூள்களை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
அதன் பின் தயிரில் பிரட்டி வைத்திருக்கும் சிக்கனை சேர்த்து மிதமான தீயிலேயே இரண்டு நிமிடம் வதக்க விடவும்.
அதன் பின் உப்பு தேவைக்கேற்ப சேர்த்து மல்லி இழையையும் நறுக்கி போட்டு மூடி இரண்டு விசில் விட்டு இறக்கவும்.
தயிர் தண்ணீர் விடும் என்பதால் தண்ணீரே சேர்க்க வேண்டாம்.குக்கரை திறந்து பார்த்து தண்ணீர் மிகவும் விட்டிருந்தால் சிறிது நேரம் அடுப்பில் வைத்து நன்கு ஒன்றாக திரண்ட மசாலாவாக வந்ததும் இறக்கிவிடவும்.
மிகவும் சுவையான ரிச் சிக்கன் மசாலா தயார்.சிம்பிளான முறையில் செய்துவிடலாம்.சாதம்,சப்பாத்தி எல்லாவற்றிற்க்குமே நல்ல காம்பினேஷனாக இருக்கும்.
2 comments:
சிம்பிள் & ரிச் கறி...நாக்கு ஊறுது.... ;p
என்றும் 16 அவர்களே, தங்கள் கருத்துக்கு மிக நன்றிங்க....
அன்புடன்,
அப்சரா.
Post a Comment