எங்கள் ஊர் பகுதிகளில் அஞ்சு கறி சோறுன்னு சொல்லுவாங்க...
அதில் நெய் சோறு,தால்ச்சா,இந்த வெள்ளை மட்டன் குருமா,தக்காளி இனிப்பு பச்சடி,சீனிதுவை(இதன் குறிப்பை ஒரு நாள் பார்க்கலாம்)இவையெல்லாம் அடங்கியிருக்கும்.மிகவும் பிரபலமாக காலம்காலமாக செய்யபட்டு வரும் சமையல் ஆகும்.இதன் முழுபடத்தையுமே ஒரு தடவை (இன்ஷா அல்லாஹ்) வெளியிடுவேன்.இப்ப இந்த வெள்ளை மட்டன் குருமாவை பற்றி பார்க்கலாம்.*** தேவையான பொருட்கள் ***
மட்டன் _ முக்கால் கிலோ
தயிர் _ முக்கால் கப்
வெங்காயம் _ பெரியதாக ஒன்று
தக்காளி _ அரிந்தது 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் _ மூன்று
பட்டை _ இரண்டு இன்ச் அளவு
ஏலக்காய் _ ஒன்று
மல்லி,புதினா தழை _ சிறிதளவு
எண்ணெய் _ 5 தேக்கரண்டி
நெய் _ 2 தேக்கரண்டி
மஞ்சள்த்தூள் _ முன்று சிட்டிகை
எலுமிச்சை பழம் _ ஒன்று
*** அரைத்து கொள்ள ***
தேங்காய்த்துருவல் _ அரை கப்
வெள்ளை மிளகுத்தூள் _ 4 தேக்கரண்டி
வெள்ளை மிளகுத்தூள் _ 4 தேக்கரண்டி
முந்திரி _ 10
பாதாம் _ 15
*** செய்முறை ***
மட்டனை நன்கு சுத்தம் செய்து கழுவி வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து வைத்துக் கொள்ளவும்.பச்சைமிளகாயை கீறி வைத்து கொள்ளவும்.
அரைக்க கொடுத்தவைகளை நைசாக அரைத்து கொள்ளவும்.
குக்கரில் தயிர், அரைத்த மசாலா,எலுமிச்சை பழம் தவிர்த்து மற்றுமுள்ள அனைத்து பொருட்களையும் கலந்து தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்கு பிரட்டி விட்டு அடுப்பில் வைத்து குக்கரை மூடி ஸ்டீம் வந்ததும்,வெய்ட் போட்டு குறைந்த தீயில் பதினைந்து நிமிடம் வைத்து இறக்கவும்.
பிறகு ஸ்டீம் விட்டதும் குக்கரை திறந்து பார்த்தால் தண்ணீர் லேசாக விட்டிருக்கும்.அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி மிதமான தீயிலேயே வைத்து நன்கு பிரண்டு சுற்றிலும் எண்ணெய் மினுமினுக்க வந்ததும்,அடுப்பை அணைத்துவிட்டு எலுமிச்சை சாறு பிழிந்து பிரட்டி விட்டு மூடி விடவும்.
சுவையான ரிச்சான வெள்ளை மட்டன் குருமா தயார்.
இதை நெய் சாதத்துடன் மட்டுமே சாப்பிட நன்றாக இருக்கும்.
குறிப்பு:-)) இதற்க்கு மட்டன் நன்கு எலும்புடன் கூடிய தொடை சதைக்கறியாக இருந்தாலே நன்றாக இருக்கும். மிகவும் வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.கசகசா விரும்புவர்கள் அதை ஒரு ஸ்பூன் சேர்த்து கொண்டு பாதாம் அளவில் பாதியை குறைத்து அரைத்து கொள்ளலாம்.கசகசாதான் அந்த காலத்தில் சேர்த்தனர்.இங்கெல்லாம் நான் கசகசா உபயோகபடுத்துவதில்லை என்பதால் பாதாம் சேர்த்து கொள்கிறேன்.
6 comments:
இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன்.பார்க்கவும் க்ரீமியா அருமையாக இருக்கு அப்சரா.அஞ்சு சோறு கறி நான் கேள்விபடாதது.சீக்கிரம் சீனி துவை ரெசிப்பி போடுங்க.எங்கள் பக்கம் நெய் சோறு,மட்டன் ஆனம்,தாளிச்சா,மாசிக்கறி,தக்காளி ஜாம் இதுதான் விஷேஷங்களில் பறிமாறப்படுவது
சலாம் ஸாதிகா அக்கா...,எங்கள் ஊருக்கு வாங்க சும்மா அஞ்சு கறி சோறு போட்டு அசத்திடுவோம்.அதிலும் அப்பெல்லாம் அதை பெரிய சஹானில் மூன்று நான்கு பேர் கூட்டாக உட்கார்ந்து சாப்பிடும் வழக்கம் இருந்து வந்தது. இப்போது அதெல்லாம் குறைஞ்சுடுச்சு....
தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி ஸாதிகா அக்கா...
அன்புடன்,
அப்சரா.
ஆஹா அருமையாக இருக்கு,மல்லி,சீரக,சோம்பு சேர்ந்த குருமா மசாலா சேர்க்க வேண்டாமா?வெறும் வெள்ளை மிளகுத்தூள் மட்டும் தானா?வித்தியாசமாக இருக்கு,நாகை மாவட்டம் பக்கம் இந்த அஞ்சிகறி சோறு கேள்விபட்டிருக்கேன்,நீங்க எந்த ஊர் அப்சரா?சேர்த்திருக்கிற பொருளை பார்த்தால் அமர்க்களமாக இருக்கும்னு தெரியுது,பரோட்டா,நாணுக்கு கூட அருமையாக இருக்கும்.உங்கள் சமையல் எனக்கு எப்பவும் மிகவும் பிடிக்கிறது.நல்ல கைப்பக்குவம் உங்களுக்கு,இது மாதிரி ட்ரெடிஷனல் ரெசிப்பி சொல்லி தாங்க.
சலாம் ஆசியா அக்கா..,இதற்க்கு அந்த மாசாலாக்கள் சேர்க்காமல் வெறும் வெள்ளை மிளகுத்தூள் மட்டும் சேர்ப்பதே சிறப்பு.முழு வெள்ளை மிளகோடு கசகசா,முந்திரி தேங்காய் சேர்த்து அந்த காலத்திலிருந்து அம்மியில் அரைத்து சேர்ப்பார்கள்.அது இன்னும் டேஸ்ட்டாக இருக்கும்.
காரத்திற்க்கு இந்த மிளகுத்தூளும்,பச்சைமிளகாயும் தான்.வேண்டிய காரமும்,டேஸ்ட்டும் இருக்கும்.
நான் காரைக்கால்,மயிலாடுதுறை இதற்க்கு இடைப்பட்ட ஊரில் இருப்பவள் ஆசியா அக்கா...நாகை மாவட்டம்தான்னு வச்சிக்கிங்களேன்.
தங்களுடையை கருத்து எனக்கு சந்தோஷமாக இருக்கின்றது.
மிக்க நன்றி ஆசியா அக்கா.
அன்புடன்,
அப்சரா.
மட்டன் குருமா அருமையாக இருக்கிறது அப்சரா.எங்கள் முறை சற்றே வேறுப்படும் .
உங்களின் சீனி துவை ரெசிப்பியை எதிர்பார்க்கிறேன்
அன்புடன்
ரிதா
சலாம் ரிதா..,உங்கள் முறையையும் சொல்லுங்க...தெரிஞ்சுக்கலாமுல்ல....
இன்ஷா அல்லாஹ் சீனிதுவையை அனுப்ப பார்க்கிறேன்.
தங்கள் கருத்துக்கு நன்றி ரிதா....
அன்புடன்,
அப்சரா.
Post a Comment