தேவையான பொருட்கள்
வாழைக்காய் _ இரண்டு
மிளகாய்த்தூள் _ ஒன்றரை தேக்கரண்டி
மஞ்சள்த்தூள் _ கால் தேக்கரண்டி
சோம்புத்தூள் _ அரைத்தேக்கரண்டி
உப்பு _ தேவையான அளவு
எண்ணெய் _ நான்கு தேக்கரண்டி
கறிவேப்பிலை _ ஒரு கொத்து
*** செய்முறை ***
வாழைக்காயை தோல் நீக்கி விட்டு கழுவி கொஞ்சம் தடிமனாக வட்ட வடிவில் அரிந்து வைத்து கொள்ளவும்.
ஒரு அகல வானலியில் அதை வேக வைக்கும் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க ஆரம்பிக்கும் போது அரிந்த வாழைக்காய் துண்டுகளை சேர்த்து உப்பு சிறிதும் சேர்த்து வேக விடவும்.
முக்கால் பாகம் வெந்ததும்,வடித்து விட்டு ஒரு தட்டில் தூள் வகைகள்,உப்பும் (வேக வைக்கும் போதும் உப்பு சேர்த்திருப்பதால் பார்த்து சிறிதளவு சேர்க்கவும்)சிறிது தண்ணீர் தெளித்து பிரட்டி இந்த வாழைக்காயை அதில் சேர்த்து பிரட்டி ஐந்து நிமிடம் வைக்கவும்.
பிறகு வானலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் கறிவேப்பிலை போட்டு இந்த பிரட்டிய வாழைக்காயை பரவலாக வைத்து இரண்டு பக்கமும் நன்கு வறுபடும்படி செய்து எடுத்து விடவும்.
தயிர்,ரசம்,சாம்பார் சாதத்திற்க்கு தொட்டு கொள்ள மிகவும் நன்றாக இருக்கும்.இதை வறுக்கும் போது கறுப்பு உளுந்து குருணையை தூவி வாழைக்காயின் எல்லா இடமும் படும்படி பிரட்டி வறுத்து எடுத்தால் மிகவும் வித்தியாசமான டேஸ்ட்டாக இருக்கும்.ஊரில் கருப்பு உளுந்து குருணை என்றே வைத்திருப்பார்கள்.இங்கு நான் வைத்திருக்கவில்லை.எனவே இந்த செய்முறையில் அது இல்லை.
இது நமது ஊர்களில் கிடைக்கும் மொந்தன் வாழைக்காயில் செய்தால் தான் மிகவும் நன்றாக இருக்கும்.வெளிநாடுகளில் கிடைக்கும் நேந்திர காய் போன்றவைகளில் செய்தால் நன்றாக வராது.சவுக் சவுக்கென்று இருக்கும்.
2 comments:
அருமை அப்சரா.
மிக்க நன்றி ஆசியா அக்கா..
அன்புடன்,
அப்சரா.
Post a Comment