தேவையான பொருட்கள்
வெந்தயக்கீரை _ சிறிய கட்டாக ஒன்று
பாசிபருப்பு _ முக்கால் கப்
வெங்காயம் _ ஒன்று
தக்காளி _ பதியளவு
பூண்டு _ 3 பல்
மிளகாய்த்தூள் _ 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள்த்தூள் _ 1/2 தேக்கரண்டி
கரம்மசாலாத்தூள் _ 1/4 தேக்கரண்டி
சோம்புத்தூள் _ 1/4 தேக்கரண்டி
சீரகம் _ 1/2 தேக்கரண்டி
எண்ணெய் _ 5 தேக்கரண்டி
*** செய்முறை ***
கீரையை ஆய்ந்து நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்.
பருப்பை கழுவி விட்டு வேக வைக்க தண்ணீர் விட்டு மஞ்சள் த்தூள் போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.(குழைய வேக விட வேண்டாம்).
வெங்காயம்,தக்காளி,பூண்டு இவைகளை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு வானலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும்,சீரகம் போட்டு பொரிந்ததும் நறுக்கி வைத்திருக்கும் பூண்டை போட்டு வதக்கவும்.
பின்பு வெங்காயம் தக்காளியை போட்டு சிறிது உப்பும் சேர்த்து நன்கு வதங்க விடவும்.
நன்கு வதங்கியதும்,தூள் வகைகளை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட்டு கீரையை சேர்த்து வதக்கவும்.
பிறகு வெந்த பருப்பை கொட்டி மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு ஒன்று சேர கிளறி உப்பு சரி பார்த்து மிதமான தீயில் சிறிது நேரம் வைத்து விட்டு இறக்கவும்.
சுவையான சத்தான மேத்தி தால் மக்கனி தயார்.
இதை சப்பாத்திக்கும்,தந்தூரி ரொட்டி இவைகளுக்கு தொட்டு கொள்ள மிகவும் நன்றாக இருக்கும்.இந்த கீரையை சாப்பிடாதவர்கள் கூட ரசித்து சாப்பிடுவார்கள்.
மேத்தி சப்பாத்தியின் சுருக்கமான குறிப்பு (நான் செய்ததில்...)இங்கே:-
மேத்தி சப்பாத்தியில் ஜலீலா அக்கா டயட் பொடி சேர்த்து செய்ய சொன்னார்கள்.அதற்க்கான சுக்கு எனக்கு கிடைக்காததால் வெங்காயமும் இல்லாமல் வெறும் எண்ணெயில் இஞ்சி பூண்டு அரவையை அரைஸ்பூன் சேர்த்து வதக்கி விட்டு பிறகு கீரையையும்,மிளகாய்த்தூளும் சேர்த்து சிறிது நேரம்வதக்கி விட்டு பிறகு மாவில் சேர்த்து பிசைந்து வைத்தேன்.இந்த பிசைந்த மாவு சப்பாத்தி இடும்போது மிகவும் சாஃப்ட்டாக இருந்தது. மீந்த இரு சப்பாத்தி மறு நாளும் சாஃப்ட்டாகவே இருந்தது... சாப்பிட நன்றாக இருந்தது.... இந்த முறையை செய்ய எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்திய ஜலீலா அக்காவிற்க்கே எனது நன்றியை தெரிவித்துக் கொள்ள ஆசைபடுகிறேன்.
22 comments:
u have a wonderful space.happy to follow u..delicious makhani
//மேத்தி தால் மக்கனி//
இதுல மேத்தி--வெந்தயம் இருக்கு
தால் ---பருப்பு இருக்கு
மக்கன் -- வெண்ணெய் இல்லையே :-))))
ஹாய் சவிதா...,எனது இல்லத்தில் வருகைதந்ததற்க்கும்,கருத்தினை தெரிவித்ததற்க்கும் மிக்க நன்றி...
அன்புடன்,
அப்சரா.
வாங்க ஜெய் சகோ///,அடுத்த சந்தேகமா...?ஆனால் நல்ல கேள்வி...(குப்புறபடுத்து யோசித்தீர்களோ...?)
தால் மக்கனியின் செய்முறையில் இந்த மேத்தியை செய்தது.பட்டர் போட்டு செய்தால் டயட்டில் உள்ளவர்களுக்கு ஏற்ப குறிப்பாக ஆகாது சகோதரரே.... அதனால் நான் பட்டர் பெரும்பாலும் சேர்ப்பதில்லை....மக்கானின்னு அதுக்கு பெயர் வைத்திருக்க கூடாதுன்னு அடுத்த கேளியை மல்லாக்க படுத்து யோசிச்சு கேட்டுடாதீங்க...(அப்சரா பாவம் அவ்வ்வ்வ்...)இந்த பெயரே இதற்க்கு நன்றாக இருக்கும் என்று எண்ணி வைத்து விட்டேன்.... இந்த விளக்கம் போதுமா சகோ...///(ஸ்ஸ்ஸ்.... முடியல...)
நன்றி..
அன்புடன்,
அப்சரா.
//இந்த விளக்கம் போதுமா சகோ...///(ஸ்ஸ்ஸ்.... முடியல...)//
இன்னும் ஏதாவது கேட்டா அப்புரம் பூஸ் வந்து என்னைய குறுக்கு கேள்வியா கேட்கும் அதனால இப்போதைக்கு ஓக்கே மீதி பிறகு :-)
படமும் விளக்கமும் அருமை
ருசியா இருக்கும் போல இருக்கு
@ ஜெய் சகோதரரே..
\\\இன்னும் ஏதாவது கேட்டா அப்புரம் பூஸ் வந்து என்னைய குறுக்கு கேள்வியா கேட்கும் அதனால இப்போதைக்கு ஓக்கே மீதி பிறகு :-)//
மீதி பிறகா!!!!!!! சுத்தம்....
அன்புடன்,
அப்சரா.
எனது இல்லத்திற்க்கு வருகை தந்துள்ள சகோதரர் தங்கராசு அவர்களே தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி...
அன்புடன்,
அப்சரா.
எனது இல்லத்திற்க்கு வருகை தந்திருக்கும் சகோதரர் யாதவன் தங்களையும் வருகவென வரவேற்த்து தங்கள் கருத்துக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி.
அன்புடன்,
அப்சரா.
மிகவும் அருமையான சத்தான க்ரேவி...அருமையாக இருக்கின்றது அப்சரா...சப்பாத்திக்கு சூப்பர்ப் காம்பினேஷன்...கலக்கல்..
வாங்க கீதா..,தாங்கள் கருத்தை கண்டு மிக்க மகிழ்ச்சி.
நன்றி கீதா...
அன்புடன்,
அப்சரா.
என் மேத்தி சப்பாத்தியும் தால் மக்கானியும் செம்ம போடு போடுது
வயிற்றில் உள்ள அழுக்கை அகற்றும். குழந்தைகளுக்கு ரொம்ப நல்லது
சலாம் ஜலீலா அக்கா...,ஆமாம் உங்க மேத்தி சப்பாத்தியை பார்த்ததும் எப்படியும் செய்துடணும்னு முடிவு பண்ணிட்டோமுல்ல...வாங்கிய ஃப்ரஷ்ஷான கீரையை அன்றே சமைத்து குடும்பத்தோட சாப்பிட்டு முடிச்சாச்சு...
குழந்தைகளும் விரும்பி சாப்பிட்டாங்க....
தங்கள் கருத்துக்கு நன்றி அக்கா...
அன்புடன்,
அப்சரா.
நல்ல பகிர்வு அப்சரா
தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி மஹா...
அன்புடன்,
அப்சரா.
நல்லா யோசிச்சு கேள்வி கேக்கறாங்க..அதுக்கு நல்லா பதிலும் சொல்றாங்கப்பா! :)
நான் பொதுவா கீரைவகைகள்ல பூண்டு-புளி இதெல்லாம் சேர்த்ததில்ல அப்ஸரா..இந்த ரெசிப்பி நல்லா இருக்கு.
வாங்க மஹி..,
நான் பருப்பு செய்யும் சமையல்களில் பூண்டு சேர்த்து விடுவேன்.
சிலருக்கு பருப்பு வாயு தொல்லையை தருவதால் ...உடம்பிற்கு நல்லது என்றே சேர்ப்பேன்.
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றிங்க..
அன்புடன்,
அப்சரா.
ரொம்ப நாளுக்கு இதையே ஃபிரிஜ்ஜில வச்சி சாப்பிடாதீங்க வயத்த வலிக்கும்.நான் மேத்தி தால் மக்கனி யை(பதிவை )சொன்னேன் ஹா..ஹா.. :-))
எதுக்கும் பூஸ் வரதுக்குள்ளே எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்
ரொம்ப பிஸியா இருக்கீங்களா? பதிவே போடுறது இல்ல
உங்களை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன். நேரமிருக்கும் போது பார்வையிடவும் :-)
http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_27.html
அழகான செய்முறை விளக்கங்கள்.. நன்றி.
வலைச்சர அறிமுகமாகிருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள்...
Post a Comment