பனீர் _ அரை கப்
பீஸ் _ ஒரு கப்
வெங்காயம் _ ஒன்று
தக்காளி _ சிறியதாக ஒன்று
காய்ந்த மிளகாய் _ 2
இஞ்சி,பூண்டு விழுது _ 1 தேக்கரண்டி
மஞ்சள்த்தூள் _ 1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் _ 1 தேக்கரண்டி
கறிமசாலாத்தூள் _ 1/2 தேக்கரண்டி
கரம்மசாலாத்தூள் _ 1/4 தேக்கரண்டி
சோம்பு தூள் _ 1 தேக்கரண்டி
தேங்காய் பால்பவுடர் _ அரை கப்
எண்ணெய் _ 4 தேக்கரண்டி
மல்லி தழை _ சிறிதளவு
*** செய்முறை ***
பனீரை கழுவி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
வெங்காயம் தக்காளியையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் காய்ந்த மிளகாய்,கறிவேப்பிலையை இரண்டு மூன்றாக கிள்ளி போட்டு உடனே நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
வதங்கியதும்,இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
பின்பு தூள் வகைகளை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட்டு,பீஸையும்,பனீரையும் சேர்த்து மிதமான தீயில் மூன்று நிமிடங்கள் விட்டு விடவும்.
பின்பு ஒன்றரை டம்ளர் தண்ணீரில் தேங்காய் பால் பவுடரை கரைத்து அதில் ஊற்றி தேவையான அளவு உப்பும் மல்லிதழையும் சேர்த்து குக்கரை மூடி ஸ்டீம் வந்ததும் வெய்ட் போட்டு ,குறைந்த தீயில் வைத்து பத்து நிமிடம் கழித்து இறக்கவும்.
சிம்பிளாக சீக்கிரமே செய்யகூடிய சுவையான பீஸ்,பனீர் மசாலா ரெடி.
சப்பாத்தி,நாண்,குப்பூஸ் இவைகளுக்கு ஏற்ற சைட் டிஷ் ஆக இருக்கும்.
அன்புடன்,
அப்சரா.
