Showing posts with label கிச்சடி சாதம். Show all posts
Showing posts with label கிச்சடி சாதம். Show all posts

Wednesday, March 2, 2011

கிச்சடி சாதம்


தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி                         _    ஒரு டம்ளர்
தேங்காய் பால்                          _     அரை டம்ளர்  
வெங்காயம்                                _     ஒன்று
தக்காளி                                        _     பாதியளவு
பச்சை மிளகாய்                          _     ஒன்று
இஞ்சி,பூண்டு விழுது                _     ஒன்றரை தேக்கரண்டி
 மஞ்சள்த்தூள்                              _     ஒரு தேக்கரண்டி
 கரம் மசாலாத்தூள்                     _    ஒன்றரை தேக்கரண்டி
 புதினா இலை                               _    சிறிதளவு
 எண்ணெய்                                     _    6 தேக்கரண்டி   
பட்டை                                             _     2 இன்ச் அளவு

*** செய்முறை ***

வெங்காயம் தக்காளியை அரிந்து வைத்துக் கொள்ளவும்.
அரிசியை இரண்டு மூன்று முறை கழுவி விட்டு ஊற வைக்கவும்.

குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும்,பட்டை போட்டு பிறகு அரிந்து வைத்துள்ள வெங்காயம், தக்காளி,பச்சைமிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும்.
நன்கு வதங்கியதும்,இஞ்சி,பூண்டு விழுதை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.

பிறகு தூள் வகைகளையும்,புதினா தழைகளையும் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.

பிறகு தேங்காய் பாலோடு ஒரு டம்ளர் தண்ணீரும் சேர்த்து ஊற்றவும்.
கொதிக்க ஆரம்பிக்கும் போது அரிசியை தண்ணீர் இன்றி வடித்து சேர்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்து கொதிக்க விடவும்.

நன்கு கொதிக்க ஆரம்பித்ததும்,நன்கு கிளறி விட்டு குக்கரை மூடி வெய்ட் போட்டு குறைந்த தீயில் பத்து நிமிடம் வைத்து இறக்கவும்.
ஸ்டீம் நின்றதும் குக்கரை திறந்து ஒரு முறை கிளறி விட்டு மூடி வைக்கலாம்.அடிவரை நன்றாக பொல பொலவென்று மணமாக இருக்கும்.

இது குழந்தைகளுக்கும்,சரி கணவர்களுக்கும் சரி பாக்ஸிற்க்கு வைத்து கொடுத்தனுப்ப மிகவும் எளியதாக இருக்கும்.விரும்பியும் சாப்பிடுவார்கள்.

இதிலேயே பீஸ் சேர்த்தும் செய்யலாம்.சிக்கன் ஃப்ரை நல்ல காம்பினேஷனாக இருக்கும்.இந்த காம்பினேஷனோடு உள்ள எனது குறிப்பை பார்வையிட இங்கு க்ளிக் செய்து பார்க்கலாம்.






Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out