Monday, March 7, 2016

சிக்கன் புரிட்டோ


மெக்ஸிகோ உணவுவகைகளில் ஒன்றுதான் இந்த புரிட்டோ... இது கேள்விபட்டதோடு சரி... வெளியே நான் சாப்பிட்டு பார்த்தது இல்லை... என் பிள்ளைகள் கார்ட்டூனில் இது அடிக்கடி வருகிறது இது சாப்பிட்டு பார்க்கணும்னு ஆசையாக இருக்கிறது என்று சொல்லிக்கொண்டிருக்க உடனே நானும் செய்ய களம் இறங்கியாச்சு...
நெட்டில் பார்த்து பொதுவாக அவர்கள் செய்யும் விதத்தை  தெரிந்து கொண்டு அதையே கொஞ்சம் நம் விருப்பத்திற்கு ஏற்றார்போல் மாற்றி செய்து பார்த்தேன்... மிகவும் நன்றாக அமைந்தது...
என் பிள்ளைகளும் ஆசையாக சாப்பிட்டார்கள்... அதை எனது இல்லத்தில் பதிகின்றேன்....
சரி வாங்க செய்முறையை பார்க்கலாம்...

தேவையான பொருட்கள்
********** ****************
மேல் டார்ட்டிலாஸ் செய்ய:-)
*********************************
மைதா மாவு  - 1 1/2 கப் 
கார்ன் ஃப்ளார் மாவு - 1/2 கப் 
உப்பு - தேவையான அளவு 
நெய்  - 2 தேக்கரண்டி 
ஸ்டஃப்பிங்கிற்கு 
******************
சிக்கன் கைமா - 1/2 கப் 
பெரிய வெங்காயம் - 2
அரிந்த தக்காளி - 2 தேக்கரண்டி 
பொடியாக அரிந்த குடைமிளகாய் 
(சிகப்பு,மஞ்சள் ,பச்சை கலந்தது )} - 1/2 கப் 
சாதம்  - 1/2 கப் 
மிளகுத்தூள் - 1 1/2 தேக்கரண்டி 
தக்காளி சாஸ் - 2 தேக்கரண்டி 
சோயா சாஸ் - 2 தேக்கரண்டி 
சில்லி சாஸ் - 1 தேக்கரண்டி 
இத்தாலி ஸ்பைசஸ் - 1 1/2 தேக்கரண்டி 
ஒரிகேனோ - 1 தேக்கரண்டி 
பூண்டு (பொடியாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி 
ஆலிவ் ஆயில் - 3 மேசைக்கரண்டி 

செய்முறை 
************
1) முதலில் மாவை பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு நெய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசறி விட்டு பிறகு வெதுவெதுப்பான நீரை கொண்டு மிருதுவாக மாவை நன்கு பிசைந்து ஈரத்துணி போட்டு மூடி வைத்து விடவும்.

2)ஒரு வானலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு லேசாக வரும் போதே பூண்டை போட்டு வதக்கவும்.வாசம் வரும்போதே நறுக்கிய மற்ற காய்களை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
3)அதில் சிக்கன் கைமாவை சேர்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்கு வதக்கவும்.
4)சிக்கன் நிறம் மாறி வெந்தது போன்று வந்ததும்,தூள் மற்றும் சாஸ் வகைகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

5)வாசம் வர வதக்கியதும் சாதம் சேர்த்து நன்கு ஒன்று சேர  கிளறி  தீயில் சிறிது நேரம் வைத்திருக்கவும். நன்கு ஒன்று சேர்ந்து  தண்ணீர் வற்றிய நிலையில் ரெடி ஆனதும் இறக்கி வைத்து ஆற விடவும்.
6)இப்போது பிணைந்த மாவை மீடியமான உருண்டைகளாக்கி விட்டு,சப்பாத்தி போன்று மெல்லியதாக இட்டு தவாவில்  இரு பக்கமும் லேசாக  எண்ணெய் தடவி சுட்டு எடுத்து வைத்து கொள்ளவும்.


7)இனி அந்த டார்டிலாஸின் நடுவில் ஸ்டஃப்பிங் வைத்து சுருட்டி லேசாக தவாவில் வைத்து எடுத்து இரண்டாக கட் செய்து பரிமாறவும்.

குறிப்பு:-)
*இந்த ஸ்டஃப்பிங்கில் ரெட் பீன்ஸை வேக  வைத்தும் முக்கியமாக சேர்ப்பார்கள். 
*வெஜிடேரியன்ஸ் சிக்கனை தவிர்த்து ரெட் பீன்ஸை அதிகம் சேர்த்து கொள்ளலாம்....
*விரும்பினால் இதில் சீஸும் துருவி சேர்த்துக் கொள்ளலாம்



7 comments:

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

வித்தியாசமா இருக்கு. செம டேஸ்டியாகவும் இருக்கும்னு நினைக்குறேன்.

நட்புடன் ஜமால் said...

ரொட்டியை தவிர மிச்சம் எளிதா தான் தெரியுது
.
எதுக்கும் ஊருக்கு போகையில் யோசிப்போம்

Unknown said...

நல்ல ரெசிபி

Unknown said...

நல்ல ரெசிபி

apsara-illam said...

முதல் ஆளாக வந்து கருத்து தெரிவித்தமைக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர் சகோ... ஆஷிக்

apsara-illam said...

ரொட்டியும் எளிதுதான் சகோ...
ரெடிமேட் டார்டிலாஸ் விற்பதை வாங்கியும் செய்யலாம் சகோ ஜமால்.....
செய்து பார்த்துட்டு சொல்லுங்க சகோ....
தங்கள் கருத்துக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர் சகோ....

apsara-illam said...

நன்றி தோழி மர்ஜூஹா....

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out