Monday, March 11, 2013

எனது மாமியாரின் கைவண்ணம்

இங்கு எங்கள் வீட்டில் அலங்கரிக்கும் விஷயங்களில் மிகுந்த ஆர்வம் காட்டுபவர் எனது மாமியார் அவர்கள்தான்.அதிலும் கைவேலைபாடுகளில் அவரின் ஆர்வத்தை ஏற்கனவே நான் முன்பு உள்ள எங்கள் வீட்டு கைவண்ணம் பகுதியில் சொல்லியிருக்கின்றேன்.இப்பொழுது சிங்கப்பூரில் வீட்டில் பொழுதை போக்குவதற்க்கு இது அவருக்கு கைகொடுக்கின்றது.
நாம் பொருட்கள் வாங்கி வரும் கலர் கலர் பாலீதின் பைகளைக் கொண்டு பல வண்ணப்பூக்களையும்,உடைந்து போன மக்குகளை கொண்டு பூச்சாடிகளையும் செய்து அலங்கரித்து வீட்டில் வைத்து அழகுப்படுத்தியுள்ளார்.இதோ அவற்றில் சில....


ஒரு சில பூக்களை கொண்டு பூங்கொத்துகளாக சுவரை அலங்கரித்தவண்ணம் ஆங்காங்கே வைத்துள்ளார்.அவற்றில் சில இதோ பார்வைக்கு.....



இதில் என்ன ஸ்பெஷல் என்றால் இதில் எந்த ஒரு பொருளுமே இதற்க்காக என  வாங்கியது இல்லை.இலைகளுக்கு பாத்திரம் துலக்க நாம் பயன்படுத்தும் ஸ்க்ரப்பரையும்,பூக்களுக்கு வண்ண பாலீதின் பைகளும்,சில வண்ண அட்டைகளும் தான்.இவை எல்லாமே நாம் வேண்டாம் என தூர போடும் பொருட்களை சேர்ந்தவையே.... அவற்றை கொண்டு எங்கள் வீடு அலங்கரித்தவண்ணம் இருக்கின்றார் எனது மாமியார்.
இந்த வயதிலும் அதிக ஆர்வத்தோடு செயல்படுவது என்பது பெருமையோடு பாராட்டுக்குரியதாகும்.






8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

அவர்களை சிறப்பித்தமைக்கு வாழ்த்துக்கள்...

Unknown said...

wow.. romba arumaiyaga seithu irukaga..

Asiya Omar said...

சூப்பர் ஐடியா,பெஸ்ட் அவுட் ஆஃப் வேஸ்ட்..

Nizam said...

ஸலாம் சகோதரி. எல்லாமே அருமையான வேலைபாடுகள். கடைசி படம் ரொம்பவும் அருமையாக இருக்கிறது.

அஸ்மா said...

சலாம் அப்சரா. மாஷா அல்லாஹ் அத்தனையும் அருமையா இருக்கு. உங்க மாமியாருக்கு வாழ்த்தும் சலாமும் சொன்னதாக சொல்லுங்கள். நீங்கள் த‌ந்த டெலிஃபோன் நம்பர் வொர்க் ஆகல, செக் பண்னிட்டு சரியான நம்பர் கொடுங்க‌ன்னு உங்களுக்கு அனுப்பிய மெயிலைப் பார்க்கலயா அப்சரா? இன்பாக்ஸ் செக் பண்ணிட்டு ரிப்ளை பண்ணுங்கபா.

//இவை எல்லாமே நாம் வேண்டாம் என தூர போடும் பொருட்களை சேர்ந்தவையே....// ஆஹா.. மாட்டிக்கிட்டீங்க! //பாத்திரம் துலக்க நாம் பயன்படுத்தும் ஸ்க்ரப்பரையும்..// இதெல்லாம் பாத்திரம் துலக்காமலே தூரப் போட்டு விடுவீங்களா :o அப்படீன்னா இங்க கொஞ்சம் பார்சல் பண்ணுங்க, நாங்களாச்சும் யூஸ் பண்ணிக்குறோம் ;)(ச்சும்மா..:)) வேஸ்ட் பொருட்களில் இதுபோன்று செய்வதில் எனக்கும் ரொம்ப பிடிக்கும். அடுத்த முறை உங்க மாமியார் செய்யும்போது ஸ்டெப் பை ஸ்டெப் ஃபோட்டோஸ் எடுத்து இங்கே பகிர‌ மறந்துடாதீங்க :-)

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

உங்களின் இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_23.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Asiya Omar said...

http://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_23.html
இன்று வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்,அருமை. பகிர்வுக்கு நன்றி.

arul said...

thanks for sharing this useful post

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out