நீண்ட இடைவெளிக்கு பிறகு எனது இல்லத்தில் சமையல் குறிப்பை போடுகின்றேன்.
இந்த
சமையல் மலேசிய,சிங்கப்பூர் மக்கள் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று.
நான் இந்த சிங்கப்பூருக்கு
புதிதாக இருப்பதால் இப்பொழுதுதான் ஒவ்வொரு உணவாக சுவைத்துவருகின்றேன.
இந்த நாஸி லிமா(க்)
என்ற உணவு எனது நாத்தினார் திருமதி.ஆயிஷா அவர்கள் வீட்டில் செய்து தந்து நான் மிகவும் விரும்பி சாப்பிட்டதாகும்.
சாதத்தில்
செய்யக்கூடிய எந்த உணவுக்கும் நாஸி என்று ஆரம்பித்துதான் பெயர் இருக்கும்.
அதைதான் உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள வந்தேன்.மிகவும் சுலபமான சுவையான ஒரு உணவு.அதன் செய்முறை விளக்கத்தை இப்போது
பார்க்கலாம் வாங்க….
நாஸி
லிமா(க்) (nasi limak)
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி - 3கப்
தேங்காய் பால் - 4 ½ கப்
பூண்டு - 4 பல்
டவுண்பாண்டா இலை(அ)
பிரிஞ்சி இலை - 1
பட்டை - 1 இன்ச் அளவு
வேர்கடலை - அரை கப்
நெத்திலி கருவாடு - அரை கப்
கெட்டியான புளி தண்ணீர் - 2 (அ) 3 ஸ்பூன்
முட்டை - 5
நெய் - 3 ஸ்பூன்
வெள்ளரிக்காய் - இரண்டு
சீனீ - ஒரு ஸ்பூன்
அரைத்துக்கொள்ள:-)
சின்ன வெங்காயம் - அரை கப்
பூண்டு - 3 பல்
இஞ்சி - ஒரு இன்ச் அளவு
காய்ந்த மிளகாய் - அரை கப்
நெத்திலி கருவாடு - 8
செய்முறை :-
அரைக்க கொடுத்த பொருட்களை ஒரு வானலியில் சிறிது
எண்ணெய் ஊற்றி இரண்டு நிமிடம்
வதக்கி ஆர வைத்தும் அரைக்கலாம்.இல்லையென்றால் சும்மாவே
மிக்ஸியில் நைசாக
அரைத்து வைத்து கொள்ளவும்.
முட்டையையும் வேக வைத்துக்கொள்ளவும்.
இப்போது சாதம் செய்வதற்க்கு எலெக்ட்ரிக் குக்கரிலையோ
அல்லது சாதா
பாத்திரத்திலையோ மிகவும் அடர்த்தியாக இல்லாமல் தண்ணீர் கலந்த தேங்காய்
பாலை(இங்கே பாக்கெட் தேங்காய்பாலையே தண்ணீர்
கலந்து ஊற்றுகிறார்கள் நன்றாகதான்
இருகின்றது)கொடுத்திருக்கும் அளவில் ஊற்றி அதில்
தேவையான அளவு உப்பு
போட்டு,பூண்டையும் நசுக்கி அதையும்,பட்டை,டவுண்பாண்டா இலை,நெய்
இவற்றையும்
போட்டு கொதி வந்ததும் சுத்தம் செய்து கால் மணிநேரம் ஊற வைத்திருக்கும்
அரிசியையும்,தேவையான
அளவு உப்பும் போட்டு நன்கு கிளறி நன்கு கொதித்ததும் தம்
போடவும்.
அது தம் ஆவதற்க்குள் அரைத்து வைத்திருப்பதை கொண்டு
சம்பல் என்கிற க்ரேவி தயாரித்து
விடலாம்.ஒரு வானலியில் எண்ணெய் விட்டு அதில் கடலையை
வறுத்து எடுத்து வைத்துக்
கொள்ளவும்.அதே போல் சுத்தம் செய்து கழுவி வைத்திருக்கும்
நெத்திலியில் சிறிது
உப்பு,மிளகாய்த்தூள் போட்டு பிரட்டி அதையும் அந்த எண்ணெயில் சிவக்க
வறுத்து எடுத்து
இரண்டையும் கலந்து வைத்துக் கொள்ளவும்.அதன் பின் அதே எண்ணெயில் இந்த
அரைத்து
வைத்திருக்கும் விழுதை கொட்டி சிறிது தண்ணீர் அலசி ஊற்றி புளித்தண்ணீர்,உப்பு,சீனி
இவற்றையும் சேர்த்து அடுப்பை சிம்மிலேயே சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க
விடவும்.அந்த
மசாலா நன்கு சுண்டி எண்ணேய் மேலே மிதந்து வாசமாக வந்தவுடன் இறக்கி
விடவும்.
இப்போது எப்படி கடையில் நாஸி லிமக் என்று கேட்டால்
கொடுப்பார்களோ அப்படியே
காண்பிக்கிறேன் பாருங்கள்.
ஒரு ப்ளேட் அல்லது பவுலில் வட்ட அச்சு வடிவில்
தேங்காய் பால் சாதத்தை நடுவில் கொட்டி
அதன் மேல் முட்டையை பாதியாக வெட்டி வைத்து ஒரு
பக்கம் அந்த சம்பலையும்(சாதத்தின்
மேலேயே அந்த க்ரேவியை போட்டுதான் தருவார்கள் நான் சைடில் தெரிவதற்க்காக
வைத்துள்ளேன்),மற்றொரு பக்கம் வறுத்த கடலை நெத்திலி காம்பினேஷனையும் வைத்து
சுற்றி நறுக்கிய வெள்ளரிக்காயோடு தருவார்கள்.இது பார்க்க மட்டுமல்லாமல் சாப்பிடவும்
சுவையாக இருக்கும்.
நாஸி லிமா(க்)ஆயம் என்றால் இந்த காம்பினேஷனுடன் கோழியையும் சேர்த்து
தருவது.அதுவும் சேர்ந்து இருந்தால் எப்படி இருக்கும் என்று நான் சொல்லவே
தேவையில்லை.நாம் வெளியில் சாப்பிடுவதை விட இது போல் ஆசையாக இருக்கும் போது
வீட்டிலேயே செய்து சாப்பிடுவது சுத்தமாக செய்து சாப்பிட்ட ஒரு திருப்தியோடு
நமக்கும் அடிக்கடி செய்யும் சமையலில் இருந்து ஒரு சின்ன மாற்றமாகவும்இருக்கும் இல்லையா...?
முயன்று பாருங்களேன்.
குறிப்பு:- இந்த சம்பலில் அதிக காரம் விரும்புவோர்
கூடுதல் காய்ந்த
மிளகாயையும்,நெத்திலி வாசம் விரும்புவோர் அதையும் கூடுதலாக சேர்த்து
அரைத்துக்கொள்ளலாம்.
3 comments:
Parkum poluthey neer oruhirathu
சூப்பராக வித்தியாசமாக இருக்கு.தொடர்ந்து குறிப்பு கொடுங்க..
அருமையான குறிப்பு .. பகிர்வுக்கு நன்றி..!
Post a Comment