வலைப்பூவில் வசிக்கும் அன்புள்ளங்கள் கொண்ட தோழிகள் அனைவருக்கும் எனது அன்பான சலாத்தினை(அனைவர் மீதும் சாந்தியும்,சமாதானமும் உண்டாகட்டுமாக...!) தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னடா இத்தனை நாள் சொல்லாமல் கொள்ளாமல் எங்கேடா போய் தொலைந்தால் என்று சில உள்ளங்கள் நினைத்திருக்கும்.
அவார்டை கூட திடீர் என்று அதுவும் அவசர அவசரமாக அல்லவா கொடுத்து விட்டு செல்லும் சூழ்நிலை.
என்ன செய்ய??? 11 வருடமாக துபாய்க்கும்,தாயகத்திற்க்கும் மாறி மாறி பயணித்தவள்,,,,, தாயகமே நிரந்தரம் என செல்ல வேண்டுமேயானால் எவ்வளவு ஏற்பாடுகள்,எத்தனை அலங்கோலங்கள் என ஓடியிருக்கும் என பாருங்களேன்.இதில் என்னவரை விட்டு பிரிந்து எப்படி நானும்,குழந்தைகளும் நாட்களை கடத்த போகிறோம் என்ற டென்ஷன் வேறு....இந்த டென்ஷன்களுக்கு இடையில் என்னருமை தோழிகளுக்கு நினைவு பரிசாக கொடுக்க வேண்டுமே என்று கொடுத்ததுதான் இந்த சான்றிதழ்கள்....ஆனால் இவற்றை கொடுத்து விட்டு விடுப்பு விண்ணப்பம் சொல்ல மறந்து விமானம் ஏறி பறந்து வந்தாச்சு....
இப்போது இறைவனின் உதவியால்,இந்த மூன்று மாதங்களாக ஸ்கூல் அட்மிஷன் உறவினர்களோடு கலந்துரையாடல்,உடன்பிறப்புகளோடு அரட்டை,மனம் விட்டு பேச்சு,பெற்றோர்களுக்கும்,மாமியார் வீட்டினர்களுக்கும் ஏதோ நம்மால் முடிந்த உதவிகள் கடமைகள் என வண்டி ஓடிட்டு இருக்கு.இதை விட பெரிய விஷயம் என் பிள்ளைகளின் ஸ்கூல் அட்மிஷன் கிடைப்பதற்க்கு அலைந்த பாடுதான்..... அப்பப்பா.... அதற்க்கென ஒரு தனி பதிவே போட எண்ணியுள்ளேன்.இவை எல்லாம் இனிதே முடிந்த பின்பு தான் இந்த இரண்டு நாட்களாக நெட் கனெக்ஷன் கிடைக்க பெற்றுள்ளேன்.
எனவே தான் மெதுவாக என் இல்லத்திற்க்குள் எட்டி பார்த்து ஒரு ஹலோ சொல்லிட்டு போகலாம் என வந்தேன்.(இவ்வளவு நீட்டுக்கா ஹலோ சொல்றதுன்னு யாரும் கேட்டுடகூடாது.... எதையும் விலக்கி சொல்லணும் இல்லையா அதான் இப்படி.....)
8 comments:
அன்பு சகோதரி அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்,
தாங்கள் பதிவுலகம் திரும்பியதில் மகிழ்ச்சி. சிறப்பாக செயல்பட இறைவன் துணைபுரிவானாக...ஆமீன்.
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
சகோதரர் ஆஷிக் அவர்களுக்கு..,அஸ்ஸலாமு அலைக்கும்.
தாங்கள் எனது தவறை சுட்டி காட்டியமைக்கு மிக்க நன்றி.அதை திருத்தியும் கொண்டேன்.இனி மீண்டும் அவ்வாறான தவறு ஏற்படாதவாறு கவனமாக இன்ஷா அல்லாஹ் செயல்படுகின்றேன்.
தங்களை சகோதரர்,சகோதரிகளின் அன்பான கருத்துக்கள் எனக்கு மிக்க சந்தோஷத்தை அளிக்கும்.
அன்புடன்,
அப்சரா.
அன்பு சகோதரி அவர்களுக்கு,
வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...
ஜசாக்கல்லாஹு க்ஹைர் (தங்களின் உதவிக்கு தக்க நற்கூலியை இறைவன் தந்தருள்வானாக...ஆமீன்)
தங்களின் இமெயில் முகவரியை தாங்கள் தரவில்லை. "Comment Moderation"னும் இல்லை. இருந்திருந்தால் என்னுடைய கருத்தை சொல்லிவிட்டு அதனை அனுமதிக்க வேண்டாமென்று சொல்லியிருப்பேன்.
ஆக, எதற்கும் வழி இல்லாததால் தான் பொதுவில் வைக்க வேண்டியதாக போய்விட்டது. தவறாக இருப்பின் இறைவனுக்காக மன்னிக்கவும்.
தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் எல்லா வளமும் பெற்று மகிழ்ச்சியோடும், மன அமைதியோடும் வாழ வேண்டுமென்று மனதார பிரார்த்திக்கும்,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
வாங்க அப்ஷரா. ஜலீலாக்காவின் புளொக் மூலம் நீங்கள் ஊருக்குப் போயிருக்கும் செய்தியறிந்தேன்.
மீண்டும் வந்து வழமைபோல் கலக்குங்க.
ரொம்ப நன்றி அப்சரா..ஊர் செட்டாகிவிட்டதா...
அடிக்கடி வாங்க...
பூங்கொத்துக்கு பதில் ஒரு ஸ்வீட் வைச்சிருக்க கூடாதா :))))
திரும்பி வந்ததில் மகிழ்ச்சி :-)
Post a Comment