*** தேவையான பொருட்கள் ***
வெந்தயக்கீரை _ ஒரு சிறிய கட்டு
பாஸ்மதி அரிசி _ ஒரு டம்ளர்
வெங்காயம் _ ஒன்று
கேரட்(அரிந்தது) _ ஒரு மேசைக்கரண்டி
உதிரி கார்ன் _ ஒரு மேசைக்கரண்டி
இஞ்சி,பூண்டு விழுது _ ஒரு தேக்கரண்டி
பச்சைமிளகாய் _ இரண்டு
எண்ணெய் _ 4 தேக்கரண்டி
பட்டை _ சிறு துண்டு
ஏலக்காய் _ ஒன்று
கிராம்பு _ இரண்டு
பிரிஞ்சி இலை _ கால் பகுதி
*** செய்முறை ***
வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து வைத்துக் கொள்ளவும்.
வெந்த கார்னையும்,கேரட்டையும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.பச்சைமிளகாயை கீறி வைத்துக் கொள்ளவும்.கீரையை ஆய்ந்து நன்கு அலசி விட்டு தண்ணீர் இல்லாமல் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அரிசியையும் கழுவி விட்டு ஊறவித்துக் கொள்ளவும்.
ஒரு சிறிய குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும்,பட்டை,பிரிஞ்சி இலை,ஏலக்காய்,கிராம்பு இவைகளை போட்டு தாளித்து அரிந்த வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
பின்பு இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.அதன் பின் கேரட்,கார்ன்,பச்சை மிளகாய் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
வதங்கியதும்,கீரையை சேர்த்து நன்கு ஒரு நிமிடம் வதக்கி விடவும்.
பின்,அரிசியை தண்ணீர் இல்லாமல் அதில் போட்டு இரண்டு நிமிடம் மிதமான தீயில் வைத்து வதக்கவும்.
பிறகு ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதித்து முக்கால் வாசி தண்ணீர் சுண்டும் நிலையில் குக்கரை மூடிவெய்ட் போட்டு குறைந்த தீயில் பத்து நிமிடம் வைத்து இறக்கவும்.
ஸ்டீம் விட்டதும் குக்கரை திறந்து ஒரு முறை கிளறி விட்டு வைக்கவும்.
சுவையான மேத்தி புலாவ் தயார்.
குழந்தைகளுக்கு கூட வெறும் கீரையை சமைத்து கொடுத்தால் சாப்பிட மாட்டார்கள்.அவர்களுக்கு இது போன்று சுவையாக செய்து கொடுத்தால் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.நமக்கும் சத்துள்ளதை தந்தோம் என்ற திருப்தி இருக்கும்.
4 comments:
மேத்தியில் புலாவ் செய்து அசத்திட்டிங்க அப்சரா.வித்த்யாசமாக உள்ளது.
சலாம் ஸாதிகா அக்கா..,தங்கள் வருகைக்கும்,கருத்திற்க்கும் மிக்க நன்றி அக்கா...
அன்புடன்,
அப்சரா.
நானும் அடிக்கடி வீட்டில் செய்வதுண்டு...பகிர்வுக்கு நன்றி..
தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி கீதா...
அன்புடன்,
அப்சரா.
Post a Comment