*** தேவையான பொருட்கள் ***
வெள்ளை அல்லது
காபூலி சன்னா } _ அரை கப்
வெங்காயம் _ ஒன்று
தக்காளி(சிறியதாக) _ ஒன்று
பச்சைமிளகாய் _ ஒன்று
இஞ்சி,பூண்டு விழுது _ ஒரு தேக்கரண்டி
மிளகாய்த்தூள் _ ஒரு தேக்கரண்டி
மஞ்சள்த்தூள் _ அரை தேக்கரண்டி
சோம்புத்தூள் _ ஒரு தேக்கரண்டி
எண்ணெய் _ 6 தேக்கரண்டி
கறிவேப்பிலை _ ஒரு கொத்து
மல்லி,புதினா தழை _ சிறிதளவு
*** அரைத்து கொள்ள ***
தேங்காய்த்துருவல் _ அரை கப்
முந்திரி _ 5
பட்டை _ சிறியதுண்டு
கிராம்பு,ஏலக்காய் _ தலா ஒன்று
மிளகுத்தூள் _ ஒரு தேக்கரண்டி
சீரகத்தூள் _ ஒரு தேக்கரண்டி
மல்லித்தூள் _ இரண்டு தேக்கரண்டி
*** செய்முறை ***
சன்னாவை நன்கு ஊறவைத்து கொள்ளவும்.
வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து வெங்காயத்தை போட்டு அதனுடன் கறிவேப்பிலை,மல்லி,புதினா தழைகளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
வதங்கியதும்,இஞ்சி,பூண்டு விழுதை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட்டு தக்காளி,பச்சைமிளகாயை சேர்த்து மசிய வதங்க விடவும்.
அதன் பின் தூள் வகைகளை போட்டு ஒரு நிமிடம் வதக்கி விட்டு ஊறியிருக்கும் சன்னாவை தண்ணீர் இல்லாமல் போட்டு நன்கு கிளறி மிதமான தீயில் அப்படியே விட்டு விடவும்.
அதற்க்கிடையில் அரைக்க கொடுத்தவைகளை நைசாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளலாம்.
ஐந்து நிமிடம் கழித்து வதங்கிய சன்னாவோடு அரைத்தவைகளை சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து குக்கரை மூடி விடவும்.
ஸ்டீம் வந்ததும்,வெய்ட் போட்டு குறைந்த தீயில் பத்து நிமிடங்கள் வைத்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
ஸ்டீம் விட்டதும் மூடியை திறந்து நன்கு கிளறி விட்டு சிறிது அடுப்பில் வைத்து இறக்கினால் மினுமினுப்பாக இருக்கும்.(கட்டாயம் இல்லை)
### குறிப்பு ###
இதில் இன்னொரு முறையும் செய்வதுண்டு.முந்திரியையும் தவிர்த்து தேங்காயையும் குறைத்து கொண்டு வேர்க்கடலை இரண்டு தேக்கரண்டி சேர்த்து கொண்டு எல்லாவற்றையும் சிறிது வதக்கி அரைத்தும் ஊற்றலாம்.இது டயட்டானவர்களுக்குன்னு செய்யலாம்.டேஸ்ட்டும் வித்தியாசமாக இருக்கும்.
8 comments:
அருமையாக இருக்கின்றது..
அப்சரா...நான் உங்க ப்ளாகில் folowerஆக இருக்கின்றேன்...ஆனால் எனக்கு readerயில் update வரவில்லை...ஏன் என்று தெரியவில்லை...
/மினுமினுப்பாக இருக்கும்.(கட்டாயம் இல்லை)/ எது கட்டாயம் இல்லை அப்ஸரா? மினுமினுப்பா இருப்பதா இல்ல அடுப்பில் சிறிது நேரம் வைத்து இறக்குவதா? குழப்பமா இருக்குது எனக்கு. :) சன்னா சால்னா பார்க்கும்போதே சூப்பரா இருக்கு.
/அப்சரா...நான் உங்க ப்ளாகில் folowerஆக இருக்கின்றேன்...ஆனால் எனக்கு readerயில் update வரவில்லை../எனக்கும் அதே ப்ரச்சனைதான்..என் ப்ளாக் லிஸ்ட்டிலும் உங்க மேத்தி தால் மக்கனிதான் எப்பவுமே இருக்கு,அப்டேட்ஸ் வரமாட்டேன்னுது.
@@@GEETHA ACHAL
அருமையாக இருக்கின்றது..
அப்சரா...நான் உங்க ப்ளாகில் folowerஆக இருக்கின்றேன்...ஆனால் எனக்கு readerயில் update வரவில்லை...ஏன் என்று தெரியவில்லை..//
எனக்கும்தான் ..அதே பழைய மக்கனியில் தொங்கிகிட்டு இருக்கு .
அப்புறமா வரேன் :-))
வாங்க கீதா,மஹி,ஜெய் சகோ// என்ன மூவருமே இப்படி சொல்றீங்க...
இதுக்கு நான் ஏதாவது செய்றாமதிரி ஆப்ஷன் இருக்கா என்ன?அப்படி இருந்தால் சொல்லுங்களேன்.ஏன்னா நானும் ப்ளாக்குக்கு கத்துக் குட்டி தானுங்களேன்...
@ மஹி ஸ்டீம் விட்டு உடனே திறந்தா சில நேரங்களில் ஒரு மாதிரியாக இருக்கும்.அப்ப தான் அடுப்பில் சிறிது மினு மினுப்பாக வரும் வரை வைக்க சொன்னேன்.குக்காரை ஆஃப் செய்துட்டு மூன்று நான்கு மணிநேரம் அப்படியே வீட்டு விட்டு திறந்திர்களேயானால் அப்ப செட்டாகி இருக்கும்.அந்த மாதிரி திறக்கும் போது அடுப்பில் வைஇகணும்னு அவசியம் இல்லை.அதற்க்குதான் சுருங்க சொன்னேன்.அது விளங்காமல் போயிடுச்சு மன்னிக்கவும் மஹி...
அன்புடன்,
அப்சரா.
//சன்னா சால்னா //
எனக்கு ச்சனா சால்னா தானே தெரியும் இதுப் புதுப்பேரா இருக்கே..!! :-))
பூரியுடன்,பிரடுடன் சாப்பிட சூப்பர் காம்பினேஷன்.
சலாம் ஸாதிகா அக்கா...,தங்கள் கருத்திற்க்கு மிக்க நன்றி.
அன்புடன்,
அப்சரா.
Post a Comment