*** தேவையான பொருட்கள் ***
பேரிச்சை பழம் _ 5
மாங்காய் சீவியது _ கால் கப்
கேரட் நறுக்கியது _ ஒரு மேசைக்கரண்டி
இஞ்சி,பூண்டு விழுது _ கால் தேக்கரண்டி
வெங்காயம் _ ஒன்று
தக்காளி சிறியதாக _ ஒன்று
பச்சைமிளகாய் _ ஒன்று
இஞ்சி _ சிறிய துண்டு
பூண்டு _ 2 பல்
புளி _ நெல்லிக்காய் அளவு
மிளகாய்த்தூள் _ 1/2 தேக்கரண்டி
மஞ்சள்த்தூள் _ 1/4 தேக்கரண்டி
சீரகத்தூள் _ 1/2 தேக்கரண்டி
மல்லித்தூள் _ 1/2 தேக்கரண்டி
தேங்காய் விழுது அல்லது
தேங்காய் பால் பவுடர் } _ 1 தேக்கரண்டி
சீனீ _ 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் _ 5 தேக்கரண்டி
கடுகு _ ஒரு ஸ்பூன்\
கறிவேப்பிலை _ ஒரு கொத்து
*** செய்முறை ***
பேரிச்சம்பழத்தை கழுவி விட்டு விதையை நீக்கி விட்டு வெதுவெதுப்பான தண்ணீரில் பத்து நிமிடம் ஊறவைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
அதே தண்ணீரில் புளியையும் ஊறவைத்துக் கொள்ளவும்.
வெங்காயம்,தக்காளியை நீளவாக்கில் அரிந்து வைத்துக்கொள்ளவும்.பச்சைமிளகாயை கீறி வைத்துக் கொள்ளவும்.இஞ்சி,பூண்டையும் பொடியாக அரிந்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடு வந்ததும்,கடுகு கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
பிறகு அரிந்து வைத்துள்ள அனைத்தையும் போட்டு நன்கு வதக்க வேண்டும்.
அதன் பின் இஞ்சி,பூண்டு அரவை சேர்த்து வதங்கியதும்,மிளகாய்த்தூள்,மஞ்சள்த்தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பிறகு பேரிச்சைபழத்தையும்,மாங்காய்,கேரட்டையும் சேர்த்து மிதமான தீயில் கிளறி இரண்டு நிமிடம் அப்படியே வதங்க விடவும்.
அதற்க்குள் புளியை கரைத்து வடித்த தண்ணீரில் மல்லி,சீரகத்தூள்,தேங்காய் விழுது அல்லது பவுடர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு வதங்கியவற்றில் கரைத்து வைத்துள்ளவற்றை ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
கொத்தித்து சுண்டும் நிலையில் இருக்கும் போது குறைந்த தீயில் வைத்து சீனியை தூவி கிளறி வைக்கவும்.
சிறிது நேரம் வைத்திருந்தால் எண்ணெய் மினுமினுப்போடு பிரண்டு இருக்கும்.அப்போது அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
பிரியாணி,நெய் சோறு காம்பினேஷனுக்கு பொருத்தமான பக்க உணவாக இருக்கும்.
இதே செய்முறையில் வெறும் மாங்காயிலும் செய்யலாம்.வெறும் பேரிச்சைபழத்திலும் என தனி தனியே செய்யலாம்.வெறும் பேரிச்சை பழத்தில் செய்யும் குறிப்பைதான் முதன் முதலாக அறுசுவைக்கு படத்துடன் கூடிய குறிப்பில் அனுப்பி வைத்தேன்.
அதை பார்வையிட விரும்பினால் இங்கு கிளிக் செய்யவும்.
11 comments:
பேரீட்சை மாங்காய் பச்சடி அருமை.
அன்புடன்
ரிதா
தங்கள் கருத்து கண்டு மிக்க மகிழ்ச்சி ரிதா....
நன்றி.
அன்புடன்,
அப்சரா.
நல்ல பகிர்வு.அருமை.
சலாம் அப்சரா.வித்தியாசமான பச்சடி.அழகாக சமைத்துக்காட்டி உள்ளீர்கள்.
சலாம் ஆசியா அக்கா..,தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அன்புடன்,
அப்சரா.
வ அலைக்கும் சலாம் ஸாதிகா அக்கா..,தங்கள் கருத்து கண்டு மிக்க மகிழ்ச்சி.மிக்க நன்றி ஸாதிகா அக்கா...
அன்புடன்,
அப்சரா.
சூப்பர் குறிப்பு கொடுத்திருக்கிறீங்க அப்ஷரா, ஒவ்வொரு தடவையும் ஒவ்வொருவர் தளத்திலும் ஒவ்வொரு விதமாக பேரீச்சம்பழ பச்சடி பார்க்கும்போதெல்லாம் உடனேயே செய்திட வேண்டுமென ஆசைப்படுவேன், ஆனால் இதுவரை செய்ததில்லை.
ஹாய் அதிரா..,தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
முடிந்தால் செய்து பாருங்க பிரியாணி செய்யும் போது நல்ல காம்பினேஷ்னாக இருக்கும்.
அன்புடன்,
அப்சரா.
நன்றி அப்சரா...
கார்ன்மீல் வேறு கார்ன்மீல் மாவு வேறு...
கார்ன்மீல் என்பது ரவை போல இருக்கும்...இதில் Fine grind, Medium grind and rough என்று வகைகள் உண்டு..
அதே மாதிரி White Cornmeal & yellow conrmeal என்று கலர்ளிலும் இருக்கும்.
This pachadi looks different and tempting...
The mutton gravy looks wonderful..thanks for sharing these wonderful recipes...
வாங்க கீதா...,தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.என்னுடைய சந்தேகத்தையும் வந்து தெளிவுபடுத்தியமைக்கு மிக்க நன்றிங்க...
குறிப்புகளை பார்வையிட்டு கருத்துக்களை தெரிவித்தமைக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்,
அப்சரா.
Post a Comment