இந்த காலத்து குழந்தைகள் நம்மைவிட அதிபுத்திசாலிகள்.... எல்லா விஷயங்களையும் கற்று கொள்வதில் மிகுந்த ஆர்வத்தை காட்டுகின்றார்கள்... அதிலும் அவர்களுக்கென்று தனித்து காட்டும் அளவிற்க்கு ஏதேனும் ஒரு விஷயத்தில் அவர்களின் ஆர்வமும்,கவனமும் அதிகம் இருக்கும்.அப்படி என் குழந்தைகளின் ஒரு சில விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளவந்தேன்....
எனது மூத்த மகனின் பெயர் அர்ஷாத்.... ஒன்பதரை வயதை தொட்டு விட்டான்... நான்காம் வகுப்பை முடிப்பதற்க்கு மும்முரமாக உள்ளான்...
எந்த விஷயத்தையும் துருவி துருவியே கேள்வி கேட்டு தெரிந்து கொள்பவன்.மார்க்கத்தை அறிந்து கொள்ளவும் மிகுந்த நாட்டம் அவனுக்கு.... நிறைய கேட்டு தெரிந்து கொண்டு தன் தம்பி,தங்கைகளுக்கும் சொல்லித்தருவான்.அவனுக்கென்ற மிகுந்த ஆர்வம் உள்ள விஷயம் கிரிக்கெட்.அதனை பற்றி அந்த நிமிஷம் வரை உள்ள செய்திகளை அவனிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.எனக்கு கிரிக்கெட்டில் அவ்வளவாக விருப்பம் இல்லாவிட்டாலும் அவன் சொல்வதற்க்காக கேட்டு கொண்டிருப்பேன்.அதுவும் அவன் டாடி இல்லாதபோதுதான்.டாடி இருந்துட்டா அவங்க ரெண்டு பேரும் பயங்கர டிஸ்கஷனில் இறங்கிடுவாங்க.... என்னை விடுங்கப்பா ஆளை என்று அந்த இடத்தை விட்டு எஸ்கேப் ஆகிவிடுவேன்.
ஓவியம் என்றால் பாடசம்பந்தமாக மட்டும் தான் வரைந்திடுவான். மற்றபடி அதிலெல்லாம் இண்ட்ரஸ்ட் கிடையாது... ஆனால் வரைந்தால் பர்ஃபெக்ட்டாக வரைந்திடுவான்.அப்படி சென்ற வருடம் ஒரு நாள் “ட்ராயிங் காம்பிடேஷன் மா... கலந்து கொண்டிருக்கின்றேன்.... இந்த சார்ட்ல வரைய சொல்லியிருக்காங்கன்னு” சொன்னான்.... “ என்னடா ஆச்சர்யம் கலந்திருக்க” என்று கேட்டதற்க்கு “என் ஃபிரண்ட் கலந்துகிட்டான் அதான் நானும் கலந்துகிட்டேன்.லைஃப் ல ஹெல்த்தியாக இருக்க மூன்று வழிகளை ட்ராயிங்க் மூலம் காண்பிக்க சொல்லியிருக்காங்கம்மா....”என்றான். “சரி உனக்கு என்ன தோணுதோ அதை வரைடா நான் ஏதாவது சந்தேகம் இருந்தா மட்டும் ஹெல்ப் பண்றேன்னு” சொல்லிட்டென்.அப்புறம் ரெண்டு பேருமே டிஸ்கஸ் செய்து முன்று கான்சப்ட் பிடிச்சு வரைவது உன் இஷட்டம்னும் சொல்லிட்டேன்.
அப்படி அவன் வரைந்ததில் ஒன்று விளையாட்டு வேண்டும் என்பது...அதற்க்கு கிரிக்கெட்டை தான் வரைந்திருந்தான்.அவன் வரைந்ததில் அது தான் மிகவும் அழகாக எனக்கு தெரிந்தது....(அங்கேயும் கிரிக்கெட்டாடா...ன்னு எனக்குள் கேட்டு கொண்டது வேற விஷயம்...).எனக்கு அந்த படம் பிடித்து விட்டதால் உடனே ஃபோட்டோ எடுத்து வைத்துக் கொண்டேன்.அது உங்கள் பார்வைக்கு...
பையனை விட ஒரு படி மேலே என் பெண்.பெயர் ஃபரீஹா... ஆறு வயதை முழுதாக தொட இருக்கின்றாள்.முதலாம் வகுப்பை முடிப்பதற்க்கு இவளும் ரெடியாக உள்ளாள். இவளுக்கு எல்லாவற்றிலுமே ஆர்வம்.... ஒரு விஷயத்தை தெரிஞ்சுக்கணும்னு அவ மனசை வச்சிட்டா... அவ்வளவுதான் நானும்,என் வீட்டுக்காரரும் தொலைஞ்சோம்.
இருப்பினும் நமக்கு இல்லாதது அவளுக்காவது இருக்கேன்னு நினைச்சிட்டு பொறுமையாக தெரிஞ்சதுக்கு நான் விளக்கம் கொடுத்துடுவேன்.இல்லையென்றால் அவள் அப்பாவை மாட்டிவிட்டுடுவேன்.
அவளும் நிறைய வரைந்து கொண்டும்,எழுதி கொண்டும் இருப்பாள்.அவள் ஓவியத்தை கூட இங்கே ஒளிப்பரப்பாகும் ஈவிஷனின்,ஈஜூனியர் என்ற சேனலுக்கு அனுப்பி வைத்து அது அந்த சேனலில் இடமும் பெற்றது.அவள் வரைந்ததில் ஒன்று உங்கள் பார்வைக்கு....
அடுத்து நம்ம சின்னவர் .... நான்கு வயதில் இருந்து கொண்டிருக்கின்றார்.அவனுக்கு எல்லாமே... அண்ணன்,அக்கா தான்.... அவர்கள் என்ன சொன்னாலும்,என்ன செய்தாலும் அதில் இவனும் கலந்து கொண்டு அதற்க்கேற்றார் போல் நடந்து கொள்வான்.அவனும் இந்த ஒரு மாத காலமாக ஒரே வரைந்து வரைந்து தான் தள்ளுகிறான்... இப்பதான் கே,ஜி.1 படிகிறான்.எனவே நிறைய கற்று கொள்ளணும் என்கிற ஆர்வம் வந்து இருக்கின்றது.இருவரையும் விட இன்னும் வேகமானவன்.(கடைக்குட்டி அல்லவா...)அவனின் கைவண்ணத்தில் ஒன்று இங்கே....
இந்த படத்தை வரைந்து வந்து காண்பித்ததும், “ என்னடா இது?” என்றேன். “பூனையும் நானும் தான்மா... பூனை டான்ஸ் ஆடிகிட்டு இருக்கு” என்றான்.எனக்கும்,என்னவருக்கும் சிரிப்பு தாங்க முடியவில்லை. “சரி இவ்வளவு அழகா வரைந்து இருக்கியே... அப்புறம் ஏண்டா சுத்தி இப்படி கறுப்பை அடிச்சு வச்சியிருக்க”-ன்னு கேட்டதற்க்கு “அது நைட் ஆயிடுச்சுல்ல அதான் இப்படி இருக்கு” என்றானே பார்க்கலாம்... நிஜமாகவே ரசித்து பார்த்து கொண்டிருந்தோம்.
அன்புடன்,
அப்சரா.
14 comments:
பிள்ளைகளின் கைவண்ணம் அருமையாக உள்ளது.மாஷா அல்லாஹ். என்னுடைய வாழ்துக்களை அவர்களுக்கு தெரிவித்து விடவும்
அன்புடன்
ரிதா
//எந்த விஷயத்தையும் துருவி துருவியே கேள்வி கேட்டு தெரிந்து கொள்பவன்.//
(( ஜோக் ))இதைதான் நானும் பண்ணிகிட்டு இருக்கேன் பிளாகில ஆனா எல்லாருமே ஓடிடுறாங்களே என்ன செய்ய ஹா..ஹா....!!
(( சீரியஸ் ))இந்த குணம் வரவேற்க வேண்டிய விஷயம் ..முடிஞ்ச அளவுக்கு சொல்லிக் குடுக்க பாருங்க. தெரியாட்டி நீங்களாவது தெரிஞ்சிக்க முயற்சி செய்யுங்க . :-) ஏன் ற கேள்வி இல்லாட்டி அறிவியலோ ,கண்டு பிடிப்புகளோ ,ஏன் இந்த உலகமே இல்லை . :-)
மாஷா அல்லாஹ் குழந்தைகள் அழகு , படங்களும் அருமை :-)
வாங்க ரிதா முதல் ஆளா வந்து வாழ்த்து தெரிவித்தமைக்கு நன்றி மா....
நிச்சயமாக உங்கள் பாராட்டுக்களையும்,வாழ்த்துக்களையும் என் குழந்தைகளிடம் தெரிவிக்கிறேன்.
நன்றி ரிதா...
அன்புடன்,
அப்சரா.
வாங்க ஜெய் சகோதரரே.... தங்கள் கருத்துக்கு நன்றி...
\\\ இந்த குணம் வரவேற்க வேண்டிய விஷயம் ..முடிஞ்ச அளவுக்கு சொல்லிக் குடுக்க பாருங்க. தெரியாட்டி நீங்களாவது தெரிஞ்சிக்க முயற்சி செய்யுங்க . :-) ஏன் ற கேள்வி இல்லாட்டி அறிவியலோ ,கண்டு பிடிப்புகளோ ,ஏன் இந்த உலகமே இல்லை .///
இதை ஏன் சீரியஸாக சொல்றீங்க உடம்புக்கு ஆகாது சிரிச்சுட்டே சொல்லுங்க சகோ..என்ன...?
(( ஜோக் ))குழந்தைகள் கேக்குற கேள்விக்கே...பதில் சொல்ல முடியல.. இருப்பினும் சொல்றோம்.ரிலாக்ஸா லாப்டாப் ல உட்காரலாம்னு வந்தா இங்கேயும் கேள்வி கேட்டா நாங்க என்ன செய்யுறது ஓடுவதை விட:-)))
தங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி ஜெய் சகோ...
அன்புடன்,
அப்சரா.
மாஷா அல்லா முவரும் அருமையாக படம் வரைந்து இருக்காங்க, அழகாக அமர்ந்து போட்டோ எடுத்துள்ளது ரொம்ப அழககாக இருக்கு அப்சாரா.
//துருவி துருவி ஜெய் கேட்பது எடக்கு மடக்கான கேள்வி//
ம்ம்ம்ம்ம்
மூன்று பேரின் கை வண்ணமும் மிக அருமை அப்சாரா
அருமையாக வரைஞ்சிருக்காங்க,வாழ்த்துக்கள்.இன்னும் அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வாங்க அப்சரா.
வாங்க ஜலீலா அக்கா..,உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி.அந்த ஃபோட்டோ துபாய் மாலில் போன வருடம் எடுத்தது...
உங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி அக்கா...
அன்புடன்,
அப்சரா.
வாங்க ஆசியா அக்கா...,தங்கள் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி...
ஒரு பெற்றோர்களாக இதை விட நமக்கு என்ன வேலை இருக்கு சொல்லுங்க....
துஆ செய்யுங்க...
அன்புடன்,
அப்சரா.
மூன்று பேரின் கை வண்ணமும் அருமையாக இருக்கு.
இந்தபோட்டோ
அட்லாண்டிக் கில் எடுத்ததுதானே?. சூப்பராக இருக்காங்களே குட்டீஸ்கள்..
வாங்க மலிக்கா..,
தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.
இந்த ஃபோட்டோ துபாய் மாலில் எடுத்தது.
அன்புடன்,
அப்சரா.
குட்டீஸின் கைவண்ணம் சூப்பர்.சின்னவர் பேர் என்னனு சொல்லலையே?/
ஹாய் ஷமீமா..., தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க...
ஆமாம் அதை விட்டு விட்டேன்.... அவன் பெயர் ஃபாவாஜுல் அக்ரம்.சுட்டி காட்டியமைக்கு நன்றி.
அன்புடன்,
அப்சரா.
Post a Comment