Thursday, February 10, 2011

இட்லி வெஜ் உசிலி


தேவையான பொருட்கள்

இட்லி                        _    3
வெங்காயம்             _    1
முட்டைகோஸ்      _    3 தேக்கரண்டி(அரிந்தது)
கேரட்                         _     3 தேக்கரண்டி(அரிந்தது)
சிகப்பு,பச்சை
குடைமிளகாய் }     _  3 தேக்கரண்டி
மிளகாய்த்தூள்        _   1 தேக்கரண்டி
கறிவேப்பிலை        _   1 கொத்து
எண்ணெய்                 _   3 தேக்கரண்டி

*** செய்முறை ***
இட்லியை நன்கு உதிர்த்து வைத்து கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி மற்ற பொடியாக நறுக்கிய காய்களோடு வைத்திருக்கவும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும்,கறிவேப்பிலை மற்றும் அரிந்து வைத்திருக்கும் அனைத்து காய்களையும் சேர்த்து சிறிது உப்பு போட்டு நன்கு வதக்கவும்.
நன்கு வதங்கியதும்,மிளகாய்த்தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வாசனை போக வதக்கவும்.
பிறகு உதிர்த்து வைத்திருக்கும் இட்லியை சேர்த்து நன்கு ஒன்று சேர பிரட்டி உப்பு சரி பார்த்து விட்டு ஒரு நிமிடம் கழித்து இறக்கவும்.
சிம்பிள் மற்றும் சுவையான இட்லி வெஜ் உசிலி தயார். 

விரும்பினால் ஒரு கைய்யளவு முருங்கைகீரையை காய்கள் வதங்கியதும் சேர்த்து ஒரு கிளறு கிளறி மற்றவைகளை சேர்த்து இறக்கலாம்.
இங்கு எனக்கு கிடைக்காததால் சேர்க்க முடியவில்லை.
ஒரே இட்லியாக சாப்பிட்டு போரடிப்பவர்களுக்கு இதே போல் சத்துள்ளதாக சுலபமான முறையில் செய்து தரலாம்.நிச்சயம் ரசித்து சாப்பிடுவார்கள்.


அன்புடன்,
அப்சரா.

16 comments:

Asiya Omar said...

புதுசாக இருக்கு.அப்சரா.

Priya Sreeram said...

hey this looks swell--nice way of eating idlis

apsara-illam said...

சலாம் ஆசியா அக்கா...,தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அன்புடன்,
அப்சரா.

apsara-illam said...

வாங்க எனது இல்லத்தில் உங்கள் வருகையை அன்போடு வரவேற்கிறேன்.தங்கள் வருகைக்கும் நன்றி.

அன்புடன்,
அப்சரா.

ஜெய்லானி said...

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )

நானும் நல்லா தெளிவா நாலு தடவை குப்புர படுத்து , மல்லாந்து படுத்து ,தலைகீழா நின்னுகிட்டு படிச்சிட்டேன் ஆனா தேவையான பொருள்களில் உசிலி-ன்னு ஒன்னு இல்லவே இல்லையே ....!! :-))

apsara-illam said...

வ அலைக்கும் சலாம் (வரஹ்)
அதை ஏன் அத்தனை போஸ்ல இருந்து யோசிச்சு இருக்கீங்க.... ரொம்ப யோசிக்க வேண்டாம்.உசிலி என்பது பொருளின் பெயர் இல்லை சகோதரரே.... செய்முறையில் பெயர்... உப்புமா... பிரட்டல் என்பது போல இந்த உசிலி என்ற பெயர்.
இந்த விளக்கம் சகோதரருக்கு போதுமோ....?
அப்புறம் எனக்கு ஒரு சந்தேகம் சகோதரரே... (நேராக உட்கார்ந்தேதான் கேட்கிறேன்).இதை உட்கார்ந்து டைப் செய்தீங்களா.... இல்லை குப்புறபடுத்துக்கிட்டா...??? ஹீ...ஹீ...))

அன்புடன்,
அப்சரா.

ஜெய்லானி said...

//அப்புறம் எனக்கு ஒரு சந்தேகம் சகோதரரே... (நேராக உட்கார்ந்தேதான் கேட்கிறேன்).இதை உட்கார்ந்து டைப் செய்தீங்களா.... இல்லை குப்புறபடுத்துக்கிட்டா...??? ஹீ...ஹீ...))//

பாருங்க நாந்தான் இது வரை சந்தேகமா கேட்டுகிட்டு வரேன் . இப்ப இது உங்களுக்கும் ஒட்டிகிச்சா வாழ்க நமது சந்தேகம் சங்கம்...ஹா..ஹா..

யோசிக்கும் போது மட்டும்தான் நான் வவ்வால் மாதிரி மத்த படி டைப்பிங் படுத்து கிட்டுதான் :-))))))))))))))

GEETHA ACHAL said...

மிகவும் அருமையான சத்தான உசிலி...குழந்தைகளுக்கு கண்டிப்பாக இப்படி செய்து கொடுத்தால் சாப்பிடுவாங்க..

Mahi said...

nalla irukkunga apsara!

santhekam kekira viyaathi ungkalukkum thoththikichcha? avvvvvvvv! :)

athira said...

சூப்பராக இருக்கு அப்ஷரா.

ridaa said...

குழந்தைகளின் lunchbox க்கு ஏற்ற குறிப்பு
அன்புடன்
ரிதா

apsara-illam said...

ஜெய் சகோதரரே... அந்த சந்தேக சங்கத்துக்கு தலைவர் அண்னலார் ஜெய்லானி அவர்கள்தானே....
மிக்க சந்தோஷம்....:-)))))

அன்புடன்,
அப்சரா.

apsara-illam said...

வாங்க கீதா...,ஆமாம் குழந்தைகளுக்கு இந்த மாதிரி செய்து கொடுக்கும் போது காய்களும் அவர்களுக்கு சேர்த்தாமாதிரி இருக்கும்.இரே இட்லியாக இருக்கேன்னு போர் அடிக்காமலும் இருக்கும்.
தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி கீதா....

அன்புடன்,
அப்சரா.

apsara-illam said...

தஙக்ள் கருத்துக் மிகவும் நன்றி மஹி....

அட என்ன செய்ய சந்தேகம் கேட்டவரின் கேளியை படித்து எனக்கும் சந்தேகம் வந்துடுச்சு.... ச்சச்ச... சந்தேகம் என்ற வார்த்தை அதிகமாக உபயோகித்திட்டுல்ல இருக்கேன்... எல்லாம் இந்த் அஜெய் சகோதரரை சொல்லணும்...

அன்புடன்,
அப்சரா.

apsara-illam said...

தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி அதிரா....

அன்புடன்,
அப்சரா.

apsara-illam said...

ஆமாம் ரிதா...,குழந்தைகள் லன்ச் பாக்ஸிற்க்கு மட்டும் இல்லை கணவர்களுக்கும் ஏற்றதுதான்...அவர்களுக்கு பாக்ஸிற்க்கு கொடுக்கதான் அதிகமாக இது போல யோசிக்க வேண்டியிருக்கு... ரிப்பீட்டா கொடுத்து போர் அடிச்சிட கூடாதுல்ல.... ரிதா...
தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றிமா...

அன்புடன்,
அப்சரா.

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out