தேவையான பொருட்கள்
மாங்காய் _ சிறியதாக ஒன்று
கலர் பவுடர் _ சிறிதளவு
சீனி _ 6 தேக்கரண்டி
நெய் _ 2 தேக்கரண்டி
முந்திரி _ 6
கிராம்பு _ 2
பட்டை _ சிறிய துண்டு
பட்டை _ சிறிய துண்டு
ஒரு பாத்திரத்தில் மாங்காய் வேகும் அளவிற்க்கு தண்ணீர்எடுத்து கொண்டு அடுப்பில் வைத்து கொதி வந்ததும்,மாங்காயை போட்டு கலர் பவுடரையும்,உப்பு மூன்று சிட்டிகையையும் சேர்க்கவும்.
வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடு வந்ததும்,கிராம்பு,இரண்டு மூன்றாக உடைத்து வைத்திருக்கும் முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து பின் மாங்காயை கொட்டவும்.
உடனே சீனீயையும் சேர்த்து நன்கு மிதமான தீயிலேயே கிளறவும்.
உடனே சீனீயையும் சேர்த்து நன்கு மிதமான தீயிலேயே கிளறவும்.
நன்கு சீனி கரைந்து சுருண்டதும் இறக்கி விடவும்.
சுவையான மாங்காய் இனிப்பு பச்சடி தயார்.
நெய் சாதம்,கோழிகுழம்பு இவைகளுடன் இதையும் செய்து சாப்பிட நன்றாக இருக்கும்.
அன்புடன்,
அப்சரா.
14 comments:
ஆஹா...இது பிரியாணியின் சைடு டிஷ் ஆச்சே ..!! இப்பவே ஜெள் வடியுது (எனக்குத்தான் )) :-)))
எங்க வீட்ல எல்லாருக்குமே பிடிச்ச பச்சடி இது மாங்கா சீசன் தொடங்கியது முதல் சீசன் முடியும்வரை அடிக்கடி செய்துவிடுவேன்,
unga sei murai konjam vithyaasama irukku... aana nallaa irukku.
Reva
வாங்க ஜெய் சகோதரரே.... எப்படி இருக்கீங்க..?ஜெள் வடியுதா....?ஜோள் வடியுதா...? ஏதோ ஒண்ணு கர்ச்சீஃப் எடுத்து தொடைச்சிக்கங்க...
அன்புடன்,
அப்சரா.
ஆமாம் லக்ஷ்மி அம்மா...,மாங்கா சீசன் வந்தால் எனக்கு ரொம்ப ஜாலியாக இருக்கும்.மாங்காய் போட்டு குழம்பு,புளிப்பு பச்சடி,இனிப்பு பச்சடி அப்படின்னு செய்து விடுவோம்.
அன்புடன்,
அப்சரா.
வாங்க ரேவா...,தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி.
அன்புடன்,
அப்சரா.
படத்தை பார்த்ததுமே ஊர் ஞாபகம் வந்து கீபோர்ட் நனைஞ்சிப்போச்... அதனால ஜொள் ஜெள் ஆகிப்போச்சி ஹா..ஹா..
அப்ஷரா, இது எனக்கு மிகவும் பிடித்த டிஷ், செய்யத்தான் தெரியாது, இனிமேல் மாங்காய் கையில கிடைத்தால் மாங்காயின் கதி அதோ கதிதான். இங்கு மாங்காய் வாங்கமுடியாது, ஆனால் பழம் கிடைக்கும்.
//ஜெய்லானி said...
படத்தை பார்த்ததுமே ஊர் ஞாபகம் வந்து கீபோர்ட் நனைஞ்சிப்போச்...
/// ஊர் ஞாபகம் வந்தால் கீபோர்ட் நனையுமோ? இது என்ன கொடுமை இது.... என்னால முடியல்ல சாமீஈஈஈஇ:))).
வாங்க அதிரா..,முடிந்த போது செய்து பாருங்க.... தங்கள் கருத்துக்கு நன்றி..
எனக்கு பதில் ஜெய் சகோ//க்கு நீங்களே பதில் சொல்லிட்டீங்க... வெரிகுட்...
அன்புடன்,
அப்சரா.
நல்ல குறிப்பு அப்சரா..
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி மஹா...
அன்புடன்,
அப்சரா.
ரொம்ப ஈசியாக இருக்கு ஒரு நாள் செய்து பார்கக்னும்
//ரொம்ப ஈசியாக இருக்கு ஒரு நாள் செய்து பார்கக்னும் //
ஜலீலாக்கா அதுக்காக மாங்காய் போடாம விட்டுடாதீங்க ஹி..ஹி. :-))
முடிந்த போது செய்து பாருங்க ஜலீலா அக்கா... நெய் சாதம் கோழி குழம்பு காம்பினேஷனோடு இது ஒத்து போகும்.
நன்றி அக்கா...
ஜெய் சகோ.../// ஆனாலும் இந்த குசும்பு ஆகாது....
அன்புடன்,
அப்சரா.
Post a Comment