சிக்கன் _ 1/4 கிலோ
வெங்காயம் _ ஒன்று
சில்லி சாஸ் _ ஒரு தேக்கரண்டி
மிளகுதூள் _ ஒரு தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் _ 1/4 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் _ 1/2 தேக்கரண்டி
இஞ்சி,பூண்டு விழுது _ 1 தேக்கரண்டி
எண்ணெய் _ நான்கு தேக்கரண்டி
கறிவேப்பிலை _ ஒரு கொத்து
மல்லி தழை _ சிறிதளவு
*** செய்முறை ***
சிக்கனை சுத்தம் செய்து நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து கொள்ளவும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும்,வெங்காயம் ,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும்,இஞ்சி,பூண்டு விழுதை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி விட்டு,பின் சில்லி சாஸ்,தூள் வகைகளை சேர்த்து வதக்கி விட்டு சிக்கனையும் தேவையான அளவு உப்பும் சேர்த்து மூன்று நிமிடம் மிதமான தீயீலேயே வதங்க விடவும்.
பிறகு சிறிதளவே தண்ணீர் சேர்த்து மல்லி தழை சேர்த்து குக்கரை மூடி ஸ்டீம் வந்ததும்,குக்கர்வெய்ட் போட்டு குறைந்த தீயில் பத்து நிமிடம் வேக வைத்து இறக்கவும்.
ஸ்டீம் விட்டதும் திறந்து பார்த்து தண்ணீர் விட்டிருந்தால் அடுப்பில் சிறிது நேரம் வைத்து திக்கான கிரேவி ஆனதும் இறக்கவும்.
சிம்பிளான சுவையான சிக்கன் கிரேவி தயார்.
இதை சாதத்திற்க்கும் பக்க உணவாகவும்,சப்பாத்தி, நாண் போன்றவற்றிற்க்கும் தொட்டு கொள்ளலாம்...
அன்புடன்,
அப்சரா.
12 comments:
ரொம்ப சிம்பிலதான் இருக்கு
ஆமாம் மஹா...,காலையில் என் கணவருக்கு அவசரமாக செய்யும் போது இது போன்று செய்து பார்த்தது... எல்லோருக்கும் பிடிக்கவே இம்முறையை அவ்வபோது செய்வதுண்டு.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
அன்புடன்,
அப்சரா.
சூப்பராக இருக்கு அப்சரா...கலக்கல் குறிப்புகள்...ஒரே நான் - வெஜ்காக போட்டு கலக்கின்றிங்க...வாழ்த்துகள்...
க்ரேவி ., பிரியாணி., துபாய் மால் எல்லாம் படித்தேன் .. அருமைடா அப்சரா..:))
சிக்கன் குறிப்பு எளிமை&அருமை
அன்புடன்
ரிதா
sசுலபாமாக செய்து விடலாம்.அவசியம் சமிக்க்த்துப்பார்த்து பார்க்கிறேன் உங்கள் முறையில்.
வாங்க கீதா...,தங்கள் கருத்து கண்டு மகிழ்ச்சி.தங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றி கீதா....
அன்புடன்,
அப்சரா.
வாங்க தேனம்மை அக்கா...,என் இல்லத்தில் உங்கள் வருகை எனக்கு மிக்க மகிழ்ச்சி.... தங்கள் கருத்துக்கும் நன்றி அக்கா....
அன்புடன்,
அப்சரா.
தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ரிதா...
அன்புடன்,
அப்சரா.
சலாம் ஸாதிகா அக்கா...,ஆமாம் அவசரத்திற்க்கு இம்முறை கைகொடுக்கும்.டேஸ்ட்டும் நன்றாக இருக்கும் அக்கா....
அன்புடன்,
அப்சரா.
rompa easy yaavum simple aakavum iruku , seythu paarkkiReen
ஆமாம் ஜலீலா அக்கா...,மிகவும் சிம்பிள் தான்.காலையில் சமைத்து கொடுத்து அனுப்புவதற்க்காக செய்து பார்த்த குறிப்பு.
நிறைய எல்லா இடங்களுக்கும் சென்று கருத்து தெரிவித்தமைக்கு நன்றி ஜலீலா அக்கா...
அன்புடன்,
அப்சரா.
Post a Comment